கிரிக்கெட் உலகின்
மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகிய இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றுக்கொள்வதாக கடந்த டிசம்பர்
23ம் திகதி அறிவித்தார்.
சச்சின் டெண்டுல்கர்,
463 ஒருநாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் 44.83 என்கின்ற
சராசரியில், 86.42 என்கின்ற ஸ்ரைக்
ஓட்டவிகிதத்தில் துடுப்பெடுத்தாடி 18,426 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டார்.
டிசம்பர் 18,1989ல் பாகிஸ்தான்
அணிக்கெதிராக குஜரன்வாலாவில் நடைபெற்ற ஒருநாள் அறிமுகம்பெற்ற சச்சின் டெண்டுல்கர்
அப்போட்டியில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சச்சின்
டெண்டுல்கர் தனது முதலாவது ஒரு நாள் சதத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு 79 போட்டிகளை
எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
"லிட்டில் மாஸ்டர்"
சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் சார்பாக விளையாடிய 463 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 200 போட்டிகளில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சச்சின்
டெண்டுல்கர்.....
சர்வதேச
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு….!
◄► அதிக ஆண்டுகள்
விளையாடியவர் – 22 ஆண்டுகள் & 91 நாட்கள் (டிசம்பர் 18,1989 – மார்ச் 18,2012)
◄► அதிகூடிய மொத்த
ஓட்டங்கள் – 18,426
◄► அதிகூடிய சதங்கள் – 49
◄► அதிகூடிய
அரைச்சதங்கள் – 96
◄► அதிகூடிய போட்டிகள்
– 463
◄► அதிகூடிய பந்துகளை
எதிர்கொண்டவர் – 21,392
◄► அதிகூடிய ஆட்டநாயகன்
விருதுகள் – 62
◄► அதிகூடிய தொடர்
ஆட்டநாயகன் விருதுகள் – 15
◄► ஒரு ஆண்டில்
சதங்கள் – 09 (1998)
◄► ஒரு ஆண்டில் அதிக
ஓட்டங்கள் – 1,894 (1998)
◄► அதிகூடிய 04 ஓட்டங்கள் – 2,016
◄► போட்டியொன்றில்
அதிகூடிய 04 ஓட்டங்கள் – 25 (பெப்ரவரி 24, 2010 @ குவாலியூர்)
◄► இந்திய அணியின்
சார்பாக அதிக போட்டிகள் தொடர்ச்சியாக விளையாடியவர் – 185 (ஏப்ரல் 25,1990 – ஏப்ரல் 24, 1998)
◄► அதிகுறைந்த வயதில்
அறிமுகமாகிய இந்திய வீரர் – 16 ஆண்டுகள் & 238 நாட்கள்
◄► ஒரு
அணிக்கெதிராக அதிக சதங்கள் – 09 எதிர்
அவுஸ்திரேலியா
◄► 90 ஓட்டங்களில் அதிக தடவைகள் ஆட்டமிழப்பு – 18
◄► 10000 –
18000 ஓட்டங்களை பெற்ற
முதல் வீரர்
◄► இரட்டைச் சதம்
பெற்ற முதல் வீரர் – 200* எதிர்
தென்னாபிரிக்கா (பெப்ரவரி 24, 2010 @ குவாலியூர்)
◄► அதிகூடிய 150 + சதங்கள் – 05
◄► ஒரு ஆண்டில் அதிகூடிய 1000+ ஓட்டங்கள் – 07 தடவைகள் (1994, 1996, 1997, 1998, 2000, 2003, 2007)
◄► ராகுல்
ராவிட்டுடன் இணைந்து அதிகூடிய இணைப்பாட்ட(02வது விக்கட்) ஓட்டத்தில்
பங்காற்றியவர் – 331 எதிர் நியூசிலாந்து (நவம்பர் 08, 1999 @ ஹைதராபாத்)
◄► உலகில் அதிக
மைதானங்களில் விளையாடியவர் – 90 மைதானங்கள்
◄► அதிகூடிய சத இணைப்பாட்டங்கள் – 21 (சச்சின் டெண்டுல்கர் & சவ்ரவ் கங்குலி)
◄► அதிகூடிய
தடவைகள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கியவர் – 340 போட்டிகள்
சச்சின்
டெண்டுல்கர்….
சர்வதேச
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்த்திய சாதனைகள் வருமாறு….!
◄► அதிகூடிய மொத்த
ஓட்டங்கள் – 2, 278
◄► அதிகூடிய சதங்கள் – 06
◄► அதிகூடிய
அரைச்சதங்கள் – 15
◄► தொடரொன்றில் அதிக
ஓட்டங்கள் – 673 (11 போட்டிகள், 2003)
◄► அவுஸ்திரேலிய
அணியின் ரிக்கி பொண்டிங்கினை(46) அடுத்து அதிகூடிய போட்டிகளில் விளையாடியவர் – 45
◄► அதிக உலகக்கிண்ணத்
தொடர்களில் விளையாடிவர் – 06 (1992 – 2011) & பாகிஸ்தான் அணியின்
ஜாவிட் மியண்டாட் (1975
– 1996)
***
3 comments:
சச்சின் சிறந்த வீரர் என்னு நான் சொல்லனுமா என்ன ?
சர்வதேஷத்துக்கும் கனவு நாயகனாக இருந்ததவர் அவரின் ஓய்வு சிறப்பான தீர்மானம்
pathivu arumai loga.
நன்றிகள் சகோ...
Post a Comment