உயிரினங்களின்
வாழ்க்கையில் மலைகள் பிரதான வகிபாகத்தினைப் பெறுகின்றன. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை
அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும்
பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன.
காலநிலை
மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன
பிற காரணங்களினால் மலைகள் பிரதான பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
இது தொடர்பாக
மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக வருடாந்தம் டிசம்பர் மாதம் 11ம்
திகதி உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
♪ உலக
நிலப்பரப்பில் 27% பங்கிற்கு மலைகள்
பரந்து வியாபித்துள்ள அதேவேளை உலக மக்களில் 12% பங்கானோருக்கு தேவையான
வதிவிடத்தினை மலைகளே வழங்குகின்றன. ஆனால் உலகில் 50% இற்கும் அதிகமானோர்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மலை வளங்களிலேயே தங்கியுள்ளனர்.
♪ மலை வாழ் மக்களில்
80% இற்கும் அதிகமானோர்
வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்கின்றனர்.
♪ உலகில் 80% இற்கும் அதிகமான
தூய நீரானது மலைகளிலிருந்தே கிடைக்கின்றது.
♪ உலகில் மிக உயரமான
மலைச்சிகரமானது இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலைச் சிகரமாகும். இதன்
உயரம் கடல் மட்டத்திலிருந்து 29036 அடி (8850 மீற்றர்கள்) ஆகும்.
♪ உலகில் 7000 மீற்றருக்கும்
உயரமான எல்லா மலைகளும் ஆசியாக் கண்டத்திலேயே அமைந்துள்ளன, குறிப்பாக 8000 மீற்றரிலும் உயரமான
14 மலைச் சிகரங்கள்
இமய மலைத்தொடரிலேயே அமைந்துள்ளன.
♪ உலகில் மிக உயரமான
மற்றும் மிகப் பெரிய மலைகளில் சில சமுத்திரங்களின் அடியில் அமைந்துள்ளன. ஹவாய் தீவில் அமைந்துள்ள "மவுனா
கேய்" மலையே நீரின் கீழ் அமைந்துள்ள மிகப்பெரிய மலையாகும். பசுபிக்
சமுத்திரத்தில் அமைந்துள்ள "மவுனா கேய்" மலையின் உயரம் கடலின்
அடியிலிருந்து 33474 அடி (10203 மீற்றர்கள்) ஆகும். குறிப்பாக, "மவுனா
கேய்" மலையானது கடலுக்கு மேலே 13796 அடி (4205 மீற்றர்கள்) உயரமானதாகும்.
♪ உலகில் அதிக
சதவீதத்தில் மலைப் பாங்கான இடங்களினைக் கொண்டுள்ள முதல் 20 நாடுகளும் வருமாறு;
அன்டோரா, லிச்ரென்ஸ்ரெய்ன், பூட்டான், லெசோதோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், சுவிட்சர்லாந்து,
மஸிடோனியா, லெபனான், றுவாண்டா, ஆர்மேனியா, நேபாளம், ஜோர்ஜியா, பொஸ்னியா
ஹெர்ஸ்சிகோவினா, லாவோ மக்கள் ஜனநாயக் குடியரசு, சுவாஸிலாந்து, துருக்கி, ஆஸ்திரியா,
அல்பேனியா, ஸ்லோவேனியா.
♪ கனடாவில்
அமைந்துள்ள "லோகன்" மலையானது உலகில்
பிரசித்தி பெற்ற மலைகளில் ஒன்றாகும். 19859 அடி உயரத்தினைக்
கொண்ட இவ் மலை சிகரத்தினை மனிதன் அடைந்த முதல் நிகழ்வு இடம்பெற்றது 1925 ஆண்டாகும்.
♪ உலகில் மிக நீளமான(4900 மீற்றர்கள்) மலைத்தொடர்
அந்தீஸ் மலைத்தொடராகும்.
♪ ஆபிரிக்க
கண்டத்தில் மிக உயரமான மலை (5895 மீற்றர்கள்) தன்சானியாவில்
அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை. இது எரிமலை வகையினைச் சேர்ந்ததாகும்.
♪ இலங்கையின் மிக உயரமான மலை
பீதுறுதாலகால மலை (2524 மீற்றர்கள்) ஆகும்.
♪ இந்தியாவின் மிக உயரமான மலை
உத்தரா காண்டத்தில் அமைந்துள்ள நந்தா தேவி மலை (7816 மீற்றர்கள்) ஆகும். ஏனெனில் 8586 மீற்றர்கள் உயரமுடைய கன்சென்ஜுங்கா
மலை இந்திய | நேபாள எல்லையில் அமைந்துள்ளது.
***
3 comments:
அன்பின் லோகநாதன் - உலக மலைகள் தினம் பற்றிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றிகள் சகோ.....
நண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Post a Comment