உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள்......
Saturday, December 1, 2012
"E" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தாமல் ஆங்கில நாவல் எழுதியவர்....!
உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள்......
Monday, June 4, 2012
Thursday, March 8, 2012
சாதனைப் பெண்மணிகள் பலரில் சிலர்..!!!
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில், சாதனைப் பெண்மணிகளாக விளங்கிய சிலரினை இன்றைய மகளிர் தினத்தில் பார்ப்போம்.
இங்கிலாந்து மகாராணி 2ம் எலிசபெத் ஏப்ரல் 21ம் திகதி பிறந்தாலும் ஜூன் 11ம் திகதியே தனது பிறந்த உத்தியோகபூர்வமாக நாளைக் கொண்டாடுகின்றார்.

இங்கிலாந்தினைச் சேர்ந்த அகதா கிறிஸ்ரி, துப்பறியும் நாவல் பலவற்றினைப் படைத்து உலகப் புகழ்பெற்ற பெண்மணியாவார். இவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் பாடசாலை செல்லாமல் தனது அம்மையாரிடமே கல்வி கற்றுக்கொண்டார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் பிரகாரம் எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த விற்பனைக் கொண்ட நாவல்களைப் படைத்த ஒருவராகவும் இவர் திகழ்கின்றார். இவரின் 4 பில்லியனுக்கு மேற்பட்ட நாவல்கள் விற்பனையாகியுள்ளதுடன் 103மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது முதலாவது நாவலினை பிரசுரிக்க 5 ஆண்டுகளாகக் காத்திருந்தார். ஏனெனில் இவர் நாடிய 6 புத்தக வெளியீட்டாளர்கள் இவரது நாவலினை பிரசுரிக்க முன்வராமையிலானாகும். இவர் தனது 1வது புத்தகத்தினை தனது தங்கையுடன் மேற்கொண்ட சவாலின் விளைவாகவே எழுதியமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரேடியத்தினைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையார் இரண்டு தடவைகள் நோபல் பரிசினைக் பெற்றவர் என்பது நாமறிந்ததே. ஆனால் மதிப்புமிக்க பிரெஞ்சு கலைக்கழகத்தில் அங்கத்துவம் பெறுவது மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் பெண் என்ற காரணத்தினாலாகும். மேரி கியூரி அம்மையாரே நோபல்பரிசினைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

“ஃப்ளோ – ஜோ” என்ற செல்லப் பெயரில் அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அதிவேக ஓட்ட வீராங்கனை ஃப்ளொரென்ஸ் கிரிபித் ஜொய்னர் 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டியில் 200மீற்றர் ஓட்டப்போட்டியினை 21:34 வினாடிகளில் நிறைவு செய்து நிலை நாட்டிய உலக சாதனை இதுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது.

***
***
Sunday, December 11, 2011
வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கிய டாக்டர் ராதா கிருஷ்ணன்......

அந்தவகையில் , டாக்டர் ராதா கிருஷ்ணன், எவ்வாறு வெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கினார் என்பதற்கு சான்றாக இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம். இந்த மாமேதை, இந்தியர்களைக் கிண்டல் செய்யும் மேல் நாட்டவரை, குறிப்பாக ஐரோப்பியரை, தனது புத்தி சாதுரியத்தால் மூக்கை உடைப்பதில் அவரை மிஞ்ச யாராலும் முடியாது.
ஒரு சமயம் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். அப்போது ஆங்கிலேயர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அது வரவேற்பு நிகழ்ச்சி என்றாலும் இந்தியரான டாக்டர் ராதாகிருஷ்ணனை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்பது அந்த வெள்ளையரது குறிக்கோளாக இருந்தது.
அவர் பேசும்பொழுது, “ இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவர்கள், ஐரோப்பியரான நாம்தான். அதனால்தான் உலகத்திலுள்ள எல்லா மனிதர்களையும்விட, ஐரோப்பியர்களாகிய நம்மை வெள்ளை நிறத்தில் படைத்திருக்கின்றான்” என்று டாக்டர் ராதாகிருஷ்ணனை ஓரக்கண்ணால் பார்த்தபடி குறிப்பிட்டார்.
அவரது தலைக்கனம் மிகுந்த பேச்சைக் கவனித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்த வெள்ளையரின் மூக்கை உடைத்து, மற்ற நிறத்தவர்மேல் அவர் கொண்டிருப்பது மிகவும் தவறான அபிப்பிராயம் என்பதை உணர்த்த தருணம் பார்த்துக் காத்திருந்தார்.
அந்தத் தருணம் வந்தது, டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே சற்று முன்பு பேசிய அன்புச் சகோதரர், இறைவனின் படைப்பில் வெள்ளை நிறத்தின் மேன்மையை பற்றிக் குறிப்பிட்டார். இந்த நிறப் பாகுபாட்டை பற்றி நான் ஒரு விசயத்தைக் அவருக்குச் சொல்ல விஉரும்புகின்றேன். அவர் மட்டுமல்ல னீங்களும் சற்று கவனமாகக் கேளுங்கள்.
” இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட்டுச் சாப்பிட விரும்பினான். அதற்கு முன்பு அவனுக்கு ரொட்டி சுட்டுப் பழக்கமில்லை. ஆனாலும், ஓரளவு அதை எப்படி செய்வது என்று அவனுக்குத் தெரியும். நீர் ஊற்றி மாவை பிசைந்தான். பிறகு வட்டமாக அதைத் தட்டி, அடுப்பின் மேலே வைக்கைப்பட்டிருந்த கல்லின்மேலே போட்டான். அது சரியாக வேகக்கூட இல்லை. அதற்குள் அதை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான்.
“அப்பொழுதுதான் அது சரியாக வேகாமல் வெள்ளை நிறத்துடனும், பச்சை மாவின் ருசியுடனும் இருப்பதைக் கண்டான். ரொட்டி மேலும் வெந்து வெள்ளை மாவின் நிறம் மாறிய பிறகுதான் அதை அடுப்புக் கல்லிலிருந்து எடுக்க வேண்டும் என்ற விசயம் அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. ஆகவே இரண்டாவது ரொட்டியை சற்று நேரம் கல்லிலேயே போட்டு விட்டான். ஒருவிதமான கருகல் வாசனை வந்த பிறகே ரொட்டியை எடுத்தான். ரொட்டி கறுப்பு நிறத்தில் தீய்ந்துபோய் இருந்தது. ரொட்டி இப்போது ருசிக்கவில்லை.
அதன்பிறகுதான் கடவுளுக்கு ஒரு விசயம் புரிந்தது. ரொட்டியை உடனே அடுப்பிலிருந்து எடுக்கக்கூடாது. அதிக நேரம் அடுப்பிலேயே போட்டிருக்கவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்தால் தான் ரொட்டி, சாப்பிடும் பக்குவ நிலைக்கு வந்திருக்கும் என்ற உண்மை புரிந்தது.
இதன் அடிப்படையில்தான் மனிதனுக்கு நிறங்களைக் கொடுத்தான் இறைவன். வேகாத ரொட்டி போன்ற அவசரப் படைப்புத்தான் வெள்ளை நிறத்தக் கொண்ட ஐரோப்பியர் மிகவும் நிதானமாக யோசித்தபின் உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆபிரிக்கர். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நிதானமான நேரத்தில் படைக்கப்பட்டவர்கள்தான் இந்தியராகிய நாங்கள்” என்றுகூறி முடித்தார். அந்த அழகிய உதாரணத்தக் கேட்ட ஐரோப்பியர்களே ரசித்துக் கைதட்டினர்.
ஒரு சமயம் டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஒரு வெள்ளைக்காரரும் தனியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வெள்ளையரின் பேச்சில், உலகிலேயே மேல் திசை நாடுகளைச் சேர்ந்தவர்களெ எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்ற எண்ணம் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் அவர், “உலக அளவில் மேல் நாட்டு மக்களே மேன்மைக்குரியவர்கள், நாடு, இனம்,மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் மேல் நாட்டவராகிய நாங்கள் வேறுப்பட்டிருந்தாலும் நிறத்தை பொறுத்தமட்டில் நாங்கள் அனைவருமே ஒன்றுபட்டிருக்கின்றோம் என்றார். அதுவரை அவர் கூறியவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அவரது நிறவெறிக் கொள்கை தவறானது என்பதை நெத்தியில் அடித்தார் போல் கூற முடிவு செய்தார்.
”பாருங்கள் நீங்கள் கூறுவது உண்மைதான் உலகம் எங்கிலும் கழுதைகளிருந்தாலும், அவை நிறத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். குதிரைகள் தான் எங்களைப் போல பல நிறங்களில் இருக்கும்” என்று ஒரு போடு போட்டர். அதைக் கேட்டதும் அந்த வெள்ளைக்காரரின் முகம் தொங்கிப் போய்விட்டது.
***
Monday, April 11, 2011
18ம் நூற்றாண்டின் இறுதி வருடத்தின், இறுதி மாதத்தின், இறுதி வாரத்தின், இறுதி நாளின், இறுதி மணித்தியாலத்தில் இறந்த பிரபலம் யார் தெரியுமா?...
உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.......
Ø கம்போடியா நாட்டினை 1975-79ம் ஆண்டுவரை ஆட்சிசெய்து 2மில்லியன் மக்களின் கொலைக்கு காரணகர்த்தாவாக விளங்கிய சர்வாதிகாரி பொல்போர்ட் ஆவான். பொல்போர்ட் 17.4.1975ல் கம்போடியாவின் தலைநகரம் நாம் பென்னை கைப்பற்றி தனது நாட்டின் பெயரினை கம்பூச்சியா என மாற்றிக்கொண்டான். சர்வாதிகாரி பொல்போர்ட் ஆசிரியராக கடமையாற்றியவனாம்.
Ø ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது(ஒரேயொரு) வெளிநாட்டில் பிறந்த முதற்பெண்மணி என்ற பெருமைக்குரியவர் லூசியா அடம்ஸ் ஆவார். ஐ.அமெரிக்காவின் 6வது ஜனாதிபதியாக விளங்கிய ஜோன் குயின்சி அடம்ஸ்சின் பாரியாரே இவராவார்.
Ø 2ம் உலகப் போர் காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு அரிசியினை வழங்கிய தனித்துவ வழங்கலாளர் அங்கிள் பென்(Uncle Ben) ஆவார்.
Ø 2ம் உலகப் போர் காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் தொழில் அமைச்சராக பதவிவகித்ததுடன், 2ம் உலகப் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் முக்கிய இராஜதந்திர செயற்பாடுகளில் பிரதான வகிபாகத்தினை வகித்தவர் எர்னெஸ்ட் பெவின் ஆவார். இவர் தனது 11வயதிலே பாடசாலை படிப்பிலிருந்து இடைவிலகியவராம்.
Ø 18ம் நூற்றாண்டின் இறுதி வருடத்தின், இறுதி மாதத்தின், இறுதி வாரத்தின், இறுதி நாளின், இறுதி மணித்தியாலத்தில் இறந்த ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பிரபலம் யார் தெரியுமா?... ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோர்ஜ் வாசிங்டன் ஆவர்களேதான்...
**********************************************
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!!!
மலரவிருக்கின்ற "கர" சித்திரைப் புத்தாண்டு தமிழர்கள் வாழ்வில் சந்தோசங்களினை அள்ளி வழங்குவாயாக.....
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"கர" சித்திரைப் புத்தாண்டு எம் வாழ்வில் கை கொடுப்பாயாக...!!!
***
Tuesday, March 8, 2011
நோபல் பரிசினை பெற்ற தாயும், மகளும்.......
அந்தவகையில், சாதனைப் பெண்மணிகளாக விளங்கிய தாய், மகள் ஜோடிகள் சிலரினைப் பார்ப்போம்.
நோபல் பரிசினை பெற்ற தாயும் மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், பிரெஞ்சு தேசத்தினைச் சேர்ந்த மேரி கியூரி மற்றும் ஐரீன் ஜோலியட் கியூரி ஆகியோராவர். மேரி கியூரி அம்மையாரே நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட முதற்பெண்மணியும் ஆவார், அத்துடன் இவரே இரண்டு வெவ்வேறான துறைகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேபெண்மணியும் ஆவார்.

மேரி கியூரி ~ (இரசாயனவியல்~1911, பெளதிகவியல்~1903)
ஐரீன் ஜோலியட் கியூரி ~ (இரசாயனவியல்~1935)
ஒரே காலப்பகுதியில் ஒரு நாட்டின் உயர்மட்ட அரச தலைவர்களாகப் பதவிவகித்த தாயும் மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோராவர்.(1994-2000)
முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த தாயும், மகளும் என்ற பெருமைக்குரியவர்கள், அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த “Churl Burt” மற்றும் “Nicky” (23 வயது) ஆகியோராவர். இவர்கள் 2008ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி எவரெஸ்ட் சிகரத்தினை ஒன்றாக அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உங்களுக்குத் தெரியுமா?...
10வது உலகக்கிண்ண கிரிக்கெட் ~ 2010, தற்சமயம் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 1975ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது என்பதும் நீங்கள் அறிந்ததே....
ஆனால், மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 1973ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்றுவருகின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா?....

***
Thursday, February 3, 2011
அன்னைக்கு கெளரவம்.....!!!

நலிவுற்றோருக்காக தன் வாழ்வினை அர்ப்பணித்து சேவையாற்றிய அன்னை தெரேசாவுக்கு, அமெரிக்க தபால் சேவைகள் ஞாபகார்த்த தபால் முத்திரையினை(44சதம்) வெளியிட்டு கெளரவப்படுத்தியது.
2010ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் அன்னை தெரேசாவின் 13ம் ஆண்டு சிரார்த்த தினத்தினை முன்னிட்டு விருது பெற்ற ஓவியக் கலைஞர் தோமஸ் ப்ளக்ஷெர் II அவர்களினால் இந்த முத்திரை வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1996ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்கா அன்னை தெரேசாவுக்கு கெளரவ அமெரிக்க பிரஜாவுரிமை வழங்கி கெளரவப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
1979ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு அன்னை தெரேசாவுக்கு வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.
++++++++++++++++++++++++++++++++++++++
இலங்கையில் மீண்டும் வெள்ள அபாயம்.....
தற்பொழுது, கிழக்கிலங்கை மட்டுமின்றி நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சீரற்ற காலநிலை மேலும் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கிலங்கையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த அடைமழை மீண்டும் ஆரம்பித்து பல நாட்களாக தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கடந்த பல நாட்களாக கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கின்ற அடைமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கின்றது.
கடந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலதிகமாக பூச்சி தாக்கங்கள், யானைகளின் தொல்லைகளினால் பாதிப்படைந்த விவசாயிகள் மீண்டும் தொடர்ந்துபெய்கின்ற அடைமழையினால் கடுமையான பாதிப்பினை சந்தித்துள்ளனர்.
15 வருடங்களின் பின் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சேனாநாயக்க சமுத்திரம் 110 அடி வரை நீரை கொள்ளக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல குளங்களின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மலேசியா, அவுஸ்திரேலியாவிலும் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. பெரும் வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து ஜசி சூறாவளி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகத்தினை தொடர்ந்து அச்சுறுத்துகின்ற இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற பிரச்சினைகள் பாரதூரமானவையாகும்.
"காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" என்கின்ற தலைப்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியாகிய எனது ஆக்கத்தினை உங்களுடன் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.
(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)
Wednesday, January 26, 2011
ஐ.நா சபை இலச்சினையை வடிவமைத்தவர்.......!!!

உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.............
ஐக்கிய நாடுகள் சபையின் அடையாளச் சின்னத்தினை[Logo] வடிவமைத்த பெருமைக்குரியவர் ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த டொனால் மெக்லாஃப்லின்( 1907 - 2009) ஆவார். யுத்த தந்திரோபாய சேவைகள் நிலையத்துக்காக(OSS) பணியாற்றிய இவர், CIAயின் முன்னாள் அதிகாரியும் ஆவார். ஐ.நா சபை இலச்சினையானது, ஆடையின் முன்புறத்தில் அணிகின்ற சின்னமாகவே முதன்முதலில் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
+ இவர் சிறந்த கட்டிடக்கலைஞரும் ஆவார்.
ஐக்கிய அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாக விளங்கிய ஜோன் எஃப் கென்னடி, உலகின் அதிவேக பேச்சாளராக விளங்கினார். இவர் 1 நிமிடத்திற்கு 350இற்கும் அதிகமான சொற்களினை பேசக்கூடியவராக விளங்கினார்.
பிரபல விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன், இங்கிலாந்து தேவாலயத்தின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டவராவார்.
ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த பிரபல கறுப்பின தடகள வீரராக விளங்கிய ஜெசி ஓவன்ஸ் 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக்கில் பல சாதனைகளை நிலை நாட்டி 4 தங்கப்பதக்கங்களை வென்றவராவார்.
+ ஜெசி ஓவன்ஸ் 1935ம் ஆண்டு 45 நிமிடங்களில் 4 உலக சாதனைகளினை முறியடித்தவராவார்.
உலகின் முதல்நிலை பணக்காரராக விளங்குகின்ற ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த Microsoft நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், முதன்முதலில் கணனி நிகழ்ச்சி நிரல்களினை உருவாக்கியபோது அவரின் வயது 13 ஆகும்.
***
Sunday, December 5, 2010
அமெரிக்காவின் ஒரேயொரு சமஷ்டி ஜனாதிபதி.......
1933ம் ஆண்டு "மிக்கி மவுஸ்" காட்டூன் கதாபாத்திரமானது, தனது விசிறிகளிடமிருந்து 800,000 கடிதங்களினைப் பெற்றுக்கொண்டது.

மாவீரன் நெப்போலியன் தனது போர் திட்டங்களினை மணல் திட்டுக்களிலேயே மேற்கொள்வாராம்.
கியூபாவில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1944ம் ஆண்டு கியூபா நாட்டின் மிகச்சிறந்த பாடசாலை மெய்வல்லுன வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.
மேரி ஸ்டூவட்(1542 – 1567), ஸ்கொட்லாந்து நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டபோது அவரின் வயது வெறும் 6 நாட்களேதான் ஆகும்.
ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் சமஷ்டி கட்சியிலிருந்து ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொருவர் ஜோன் அடம்ஸ்(1735-1826).... இவர் ஐ.அமெரிக்காவின் 2வது ஜனாதிபதியாவார்.
விமானத்தினை உலகுக்கு அறிமுகப்படுத்திய ரைட் சகோதரர்களில் ஒருவராகிய ஓர்வில் ரைட், தன் வீட்டில் இருந்த கோழி இடும் முட்டைகளில் தொடர் இலக்கத்தினை எழுதுவாராம். பின்னர் கோழிகள் முட்டை இட்ட ஒழுங்கின்பிரகாரமே அவற்றினை உண்பாராம்.

1558-1603ம் ஆண்டுவரை இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக விளங்கிய 1ம் எலிசபெத் ரோஜாப் பூக்கள் தொடர்பில் பயம் கொண்டவராம்.
***
Monday, November 15, 2010
தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் # 01
இன்று நாம் பயன்படுத்துகின்ற, பயன்பெறுகின்ற பலவற்றுக்கு இத்தகைய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணமாகும்.
உலகத்தின் விடிவுக்காக பாடுபட்டு, தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் தொடர்பிலான ஆக்கத்தின் முதற்பாகம் உங்களுக்காக........
(01) கலிலியோ கலிலி(1564-1642)

இத்தாலி நாட்டினைச் சேர்ந்த கலிலியோ கலிலி சிறந்ததொரு வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் ஆவார். தொலைநோக்கியின் மூலம் பிரபஞ்சத்தினை பற்றிய கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டு இந்த பிரபஞ்சம் பற்றிய பல்வேறு கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவர் கலிலி ஆவார்.
சூரியனை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய கலிலி, தொலைநோக்கியின் மூலம் அதிக நேரம் அண்டவெளியினை உற்றுப்பார்ப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயற்பாடு அவரின் கண்பார்வையில் கடுமையான பாதிப்புக்களினை ஏற்படுத்தியதன் விளைவால் தன் வாழ்நாளின் இறுதி 4 வருடங்களினையும் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் கழித்தார்.
உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த கலிலியோ கலிலி, "நவீன இயற்பியலின் தந்தை" என அழைக்கப்படுகின்றார்.
(02) மேரி கியூரி அம்மையார்(1867-1934)

பிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் மேரி கியூரி அம்மையார்(போலந்தில் நாட்டில் பிறந்தவர்) தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1898ம் ஆண்டு ரேடியத்தினைக் கண்டுபிடித்தார். கதிரியக்க ஆய்வில் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த மேரி கியூரி அம்மையார் கதிரியக்கத்தின் பாதிப்பினால் லூக்கேமியா நோயின்(இரத்தப் புற்று நோய்) காரணமாக 1934ம் ஆண்டு மரணமடைந்தார்.
விஞ்ஞானத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளான இரசாயனவியல்[1911], பெளதிகவியல்[1903] ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் மேரி கியூரி அம்மையார் ஆவார்.
பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்கின்ற பெருமை மேரி கியூரி அம்மையாருக்கே உரியது.
(03) சேர் ஹம்பேரி டேவி(1778-1829)

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சேர் ஹம்பேரி டேவி மிகச்சிறந்த இரசாயனவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.சேர் ஹம்பேரி டேவி, இளம் உதவியாளராக மருத்துக்கடைக்காரர் தொழில் ஈடுபட்டபோது பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் தீக்காயங்களுக்குள்ளாகினார். இரசாயனவியல் துறையில் ஆய்வுகளினை மேற்கொள்கின்றபோது பல்வேறுவகையான வாயுக்களினை உட்சுவாசிக்கும் பழக்கத்தினை டேவி கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் நைதரசன் ஒட்சைட்(சிரிப்பூட்டும் வாயு) மூலக்கூறுகளினை கொண்டு வலி நிவாரணிகளை கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. துரதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் அவரினை பலதடவைகள் மரணித்தின் விளிம்பிற்கே கொண்டுசென்றது.
அடிக்கடி நச்சு இரசாயன பாதிப்புக்குள்ளாகிய, இவரின் வாழ்வின் இரண்டு தசாப்தகாலத்தினை கடுமையான இரசாயன பாதிப்புடனேயே கழித்தார்.
நைதரசன் குளோரைட் [Ncl3] வெடிப்புச் சம்பவத்தில் இவரின் கண்கள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(04) மைக்கல் பரடே(1791-1867)

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த மைக்கல் பரடே பிரபலமான இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் ஆவார். சேர் ஹம்பேரி டேவியின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணத்தினால், பரடே அவரின் உதவியாளரானார். சேர் ஹம்பேரி டேவியின் மின் பகுப்பு முறைமையினை மேம்படுத்தி, மின் காந்தவியல் துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவராவார். சேர் ஹம்பேரி டேவியின் துரதிர்ஷ்டமோ, பரடேயினையும் இரசாயனப் விபத்துச் சம்பவங்கள் விட்டுவைக்கவில்லை. நைதரசன் குளோரைட் வெடிப்புச் சம்பவம் பரடேயின் கண்களில் பாதிப்புக்களினை ஏற்படுத்தியது. மைக்கல் பரடே, தன் வாழ்நாளில் இறுதி நாட்களினை நீடித்த இரசாயன நச்சு பாதிப்பினுடனேயே கழித்தார்.
***
Saturday, November 13, 2010
பாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர்....

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சார்ள்ஸ் டிக்கன்ஸ்(1812-1870) ஒரு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் வாழ்வில் திருப்புமுனையினை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
சார்ள்ஸ் டிக்கன்ஸ் ஆரம்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றுள் ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. கடைசியாக அவர் எழுதிய கதை பத்திரிகையொன்றில் பிரசுரமாகியது. அப்பத்திரிகையின் ஆசிரியர் கதையைப் பாராட்டி டிக்கன்ஸூக்கு ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். தனது கதைக்காக எந்தவித சன்மானமும் கிடைக்காத நிலையிலும் டிக்கன்ஸை ஆசிரியரின் குறிப்பு உற்சாகப்படுத்தியது. மனம்தளர்ந்து தனது எழுத்துப்பணியினை விட்டுவிட இருந்த அவருக்கு அந்தப் பாராட்டுரை மட்டும் கிடைக்காதிருந்திருந்தால் இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்திருக்கும்.
அவருக்கு கிடைத்த முதற்பாராட்டின் உற்சாகத்திலேதான் தொடர்ந்து எழுதி உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களினை ஆங்கில மொழிக்கு அவரால் தர முடிந்தது.
ஆகவே, உங்கள் பாராட்டுரையும் மற்றவர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி சிறந்த எழுத்தாளர்கள் பலரினை இந்த உலகத்துக்கு அறிமுகம்செய்ய உதவிசெய்யலாம்.
***
Wednesday, October 20, 2010
மாவீரன் நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்......

பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.
நெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.
ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன் நெப்போலியன் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.
ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது.
நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.
ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.
***
Monday, January 25, 2010
சதாம் ஹுசைன், ஹிட்லர் இடையேயான ஒரு ஒற்றுமை
• ஈராக் நாட்டினை ஆட்சி செய்த சதாம் ஹுசைன், பொதுமக்களினை கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்க அரசாங்கத்தின் தயவில் இயங்கிய ஈராக் அரசாங்கத்தினால் தூக்கு தண்டனைக்குள்ளாகி மரணமானர். சதாம் என்ற பெயரின் அரபு விளக்கம் “எப்போதும் யுத்தத்துக்கு தயாரானவராம்”.
• ஜேர்மனி நாட்டினை ஆட்சி செய்த சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் “எனது போராட்டம்”. அதேவேளை சதாம் ஹுசைன் எழுதிய நூலின் பெயர் “எங்களுடைய போராட்டம்”.

• எட்வேட் கென்னடி, ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற போது ஸ்பானிஷ் பரீட்சையில் மோசடி செய்தமைக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டாராம்.
• தொலைபேசியினை உலகுக்கு அறிமுகம் செய்தவர் அலெக்சாண்டர் கிரஹம்பெல் என்பதனை நாமறிவோம். இவரின் இறுதிச் சடங்கின் போது அமெரிக்காவிலும், கனடாவிலும் 1 நிமிடத்துக்கு தொலைபேசிகளின் பாவனை அனைத்தும் நிறுத்தப்பட்டது.

• அமெரிக்க ஜனாதிபதியாக தற்சமயம் பதவிவகிக்கும் பராக் ஒபாமா, 2006ம் ஆண்டு ஒலிப்பதிவு செய்யப்பட்ட சிறந்த பேச்சுக்காக கிராமி விருதினைப் பெற்றுக்கொண்டார். “என் தந்தையின் கனவுகளிலிருந்து” என்ற தனது புத்தகத்தின் ஒலிப்பதிவு வடிவமே இதுவாகும்.
***






