அக்டோபர்
மாதம் 21ம் திகதி உலக அப்பிள் தினமாகும். அந்தவகையில் அப்பிள் தொடர்பிலான சில
சுவையான தகவல்கள்.
Ø உலகளாவியரீதியில் 7500இற்கும்
மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன.
Ø வாழைப்பழங்கள்,
தோடம்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்கை
பண்ணப்படுவது அப்பிள் பழங்கள் ஆகும்.
Ø கஸ்பியன் மற்றும்
கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம்
பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே அப்பிள் மரங்கள் முதன்முதலில்
தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
Ø கி.மு 6500
ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான எச்சங்களினை புதைபொருளியலாளர்கள்/
தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Ø அப்பிள் மரங்கள், ஒரு
அப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.
Ø அப்பிள் மரங்களில்
சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும்
மேல் வாழக்கூடியவையாகும்.
Ø புராதன
உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக அப்பிள் விளங்கியது.
Ø அப்பிள்கள்
மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச்
சேர்ந்தவையாகும்.
Ø அப்பிளின்
இரசாயனவியல் பெயர்; "அப்ளிகுஸ் ரோசாசியா"
Ø அப்பிள் மரங்கள் 4
– 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க
தொடங்குகின்றன.
Ø தூய அப்பிள்
பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் அப்பிள்
பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.
Ø அப்பிள் பழங்களின்
தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.
Ø நடுத்தர அளவினை உடைய ஒரு அப்பிளில் 80 கலோரி
சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.
Ø உலகில் அதிகளவில்
அப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% வகிபாகம்)
, ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ்,
ரஷ்யா, சிலி.
Ø ஐசாக் நியூட்டன்
புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க அப்பிள் பழங்களே காரணமாகும்.
Ø "தினசரி
ஒரு அப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரினை நாடவேண்டிய தேவையே
இருக்காது" என்பது உலகளாவியரீதியிலான
ஒரு பிரபல்யமான மருத்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு
தேவையான பல்வேறு கனிப்பொருட்களினை அப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.
***
3 comments:
பயனுள்ள விளக்கமான பகிர்வு... வாழ்த்துக்கள்...
நன்றி...
தெரியாத பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்
பகிர்வுக்கு நன்றி தோழரே
நன்றிகள் சகோ.....
Post a Comment