25 வயதிற்கு
மேற்பட்ட ஒரு நபர் தொலைக்காட்சியினை ஒவ்வொரு மணித்தியாலம் பார்ப்பதன்மூலம் அவர்களின்
ஆயுள் எதிர்பார்க்கை 22 நிமிடங்கள் குறைவடைகின்றதென அவுஸ்திரேலிய நாட்டு
ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, தொலைக்காட்சி
பார்ப்பதன் மூலம் உங்கள் ஆயுள் எதிர்பார்க்கையில் 4.8 ஆண்டுகள் குறைவடைகின்றதென
அவுஸ்திரேலிய நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாளொன்றுக்கு சராசரியாக
6 மணித்தியாலங்கள் தொலக்காட்சி பார்ப்பவர்களினையும், தொலைக்காட்சி பார்க்காதவர்களினையும்
மையமாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
நான்கு
சூரியன்களைக்கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு....
ஐக்கிய
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட
ஆய்வின் பிரகாரம், புவியிலிருந்து 5000 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள கிரகம்
ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது வழமைக்கு மாறாக முதன்முறையாக 4
சூரியன்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
PH1 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கிரகமானது புவியினை விடவும்
6.2 மடங்கு ஆரையினைக் கொண்டிருப்பதுடன் நெப்ரியுன் கிரகத்தினை விடவும் சற்று
பெரியதாகும்.
இதற்கு முன்னர்
இரண்டு சூரியன்களைக்கொண்ட ஆறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
***
3 comments:
1. பார்ப்பதில்லை...
2. வியப்பு...
நன்றி...
அரிய தகவல்கள்
நன்றிகள் சகோ....
Post a Comment