தமக்கென சொந்தமான தேசியகீதம் இல்லாத ஒரே நாடாக சைப்பிரஸ் விளங்குகின்றது. சைப்பிரஸ் நாடானது கிரேக்க நாட்டின் தேசியகீதத்தினையே பயன்படுத்துகின்றது.
உலகில் அதிக வரிகளினைக்(158வரிகள்) கொண்ட தேசியகீதம் கிரேக்க நாட்டினுடையதே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
கிரேக்கம்
------------------------------------------------------விடை பெற்றது "அட்லாண்டிஸ்" விண்கலம்
ஐக்கிய அமெரிக்காவின் "அட்லாண்டிஸ்" விண்கலம் தனது இறுதி விண்வெளிப் பயணத்தினை கடந்த மே 26ம் திகதியுடன் நிறைவுசெய்து கொண்டது. 1985ம் ஆண்டு ஒக்டோபர் 03ம் திகதி தனது முதல் விண்வெளிப் பயணத்தினை மேற்கொண்ட அட்லாண்டிஸ் விண்கலம் 32 விண்வெளிப் பயணங்களையும், 195 மில்லியன் கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
------------------------------------------------------
அண்மைய மருத்துவ ஆய்வுத் தகவல்கள்.........
கேம்பிரிட்ஜ் வெல்கம் நிதிய சன்கேர் நிறுவக ஆராய்ச்சியாளர் பீற்றர் கேம்பெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், நுரையீரல் புற்று நோயினை அதிகரிப்பதற்கு 15 சிகரெட்டுக்கள் போதுமானதாம் என கண்டறிந்துள்ளனர்.
ஐக்கிய ராச்சியத்தின் அவேட்ரேய் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த உளவியலாளர் மைக் டவ்மேன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் ஒருவரின் தட்டச்சு பரிமாணத்தினைக் கொண்டு அவரின் அழுத்தங்களினை அறிந்துகொள்ளலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.
--------------------------------------------------------------
சச்சின் 50.....!!!
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது சதத்தினை தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று பதிவுசெய்து உலக சாதனை படைத்தார். தனது 175வது டெஸ்ட் போட்டியில் சச்சின், இந்த மைற்கல்லினை அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
***
3 comments:
புதிய தகவல் நண்பா
சச்சினுக்கு வாழ்த்துக்கள்... கூடியே விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதே சாதனையை செய்யட்டும்...
நன்றிகள் நண்பர்களே......
Post a Comment