
வெங்காயத்தை ஆங்கிலத்தில் "ஒணியன்"(Onion) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா?.......
"ஒணியோ" என்ற இலத்தீன் சொல்லில் இருந்துதான் "ஒணியன்" என்கின்ற ஆங்கிலச் சொல் வந்தது. "ஒணியோ" என்றால் இலத்தீன் மொழியில் பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயம் பெரிய முத்தைப்போல காணப்பட்டதால் அது "ஒணியோ" என அழைக்கப்பட்டது.
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
இலங்கை, மற்றும் இந்திய சந்தை நிலைவரங்களை நோக்குகின்றபோது, அண்மைய நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது..... அந்தவகையில் வெங்காயம் தொடர்பில் ரசித்துச்சுவைத்த கதை ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
ஒரு நாட்டின் அரசரை சந்திப்பதற்காக, அயல் நாட்டிலிருந்து ஒருவன் விஜயம் மேற்கொண்டிருந்தான். அவன் அந்த பயணத்தில் தன்னுடன் வெங்காயங்களை எடுத்துச் சென்றிருந்தான். அரசனை சந்தித்தபோது, அவன் தான் எடுத்துச்சென்றிருந்த வெங்காயங்களை, அதன் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். இதுவரையும் இதுபோன்றதொரு அற்புதமான பொருளினை கேள்விப்பட்டதில்லை என்ற அரசன் அவனுக்கு கைமாறாக தங்கம், வெள்ளி, முத்து, வைடூரியங்களினை அன்பளிப்பாக வழங்கி அவனை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பிவைத்தானாம்.

இந்த தகவலை கேள்வியுற்ற ஒருவன், அரசனைச் சந்திப்பதற்காக வெள்ளைப்பூண்டுகளை தன்னுடன் எடுத்து வந்தான். அரசனை சந்தித்த அவன் தான் எடுத்துச்சென்றிருந்த வெள்ளைப்பூண்டுகளை அதன் அருமைபெருமைகளை எடுத்துக்கூறி அரசனுக்கு அன்பளிப்பாக வழங்கினான். இதுவரையும் இதுபோன்றதொரு அற்புதமான பொருளினை கேள்விப்பட்டதில்லை என்ற அரசன் அவனுக்கு கைமாறாக வெங்காயங்களை அன்பளிப்பாக வழங்கி அனுப்பிவைத்தானாம்.
***
No comments:
Post a Comment