Friday, December 31, 2010

டைம்ஸ் சஞ்சிகையின் 2010ம் ஆண்டுக்கான நபர்…………




அமெரிக்காவிலிருந்து வெளிவருகின்ற உலகப்புகழ்பெற்ற சஞ்சிகையாக டைம்ஸ் சஞ்சிகை விளங்குகின்றது.

அந்தவகையில், டைம்ஸ் சஞ்சிகையினால் 2010ம் ஆண்டுக்கான நபராக Facebook சமூக இணையத்தள ஸ்தாபகர், மார்க் சூக்கேர்பேர்க் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக இணையத்தளங்களில் பிரதான இடம் வகிக்கின்ற Facebook இணையத்தளமானது 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மார்க் சூக்கேர்பேர்க்(Mark Zuckerberg) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.

உலகளாவியரீதியில் Facebook இணையத்தளத்தில் 524 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இணைந்துள்ளனர், அத்துடன் உலக மக்களில் 14பேரில் ஒருவர் Facebook இணையத்தளத்தில் இணைந்துள்ளனர் என்பது அண்மைய புள்ளிவிபரமாகும்.

26 வயதான மார்க் சூக்கேர்பேர்க், உலகில் இளம் பணக்காரர்களில் ஒருவராகவும், பில்லியனராகவும் உயர் ஸ்தானத்தினை அடைந்தமைக்கு Facebook இணையத்தளமே பிரதான காரணமாகும்.

குறைந்த வயதில், டைம்ஸ் சஞ்சிகையினால் ஆண்டுக்கான நபராக தெரிவுசெய்யப்பட்டவர்களில் மார்க் சூக்கேர்பேர்க் 2ம் இடத்தினைப் பெறுகின்றார், இதற்கு முன்னர் 1927ம் ஆண்டு அமெரிக்காவின் லின்ட்பேர்க் குறைந்த வயதில், டைம்ஸ் சஞ்சிகையினால் ஆண்டுக்கான நபராக தெரிவுசெய்யப்பட்டவர்களில் முதன்மை இடம் வகிக்கின்றார். 3ம் இடத்தினை 1952ம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட பிரிட்டன் மகாராணி எலிசபெத் பெறுகின்றார்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத், கடந்த மாதம் Facebookல் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மையில் வெளியாகிய “The Social Network,” என்கின்ற திரைப்படமானது மார்க் சூக்கேர்பேர்க்கரின் வாழ்க்கையினை பற்றியதாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.



முன்னைய என் பதிவு - டைம்ஸ் சஞ்சிகையின் 2009ம் ஆண்டுக்கான நபர்…………

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-


விலகிவிடு.........அரவணைத்துவிடு.........



2010ம் ஆண்டு எம் வாழ்வில் ஏற்படுத்திய வலிகளினைப் போக்கி, பிறக்கின்ற 2011ம் ஆண்டானது எம் வாழ்வில் மகிழ்ச்சிகளினை ஏற்படுத்தி மனதினை உன்வசப்படுத்துவாயாக........


வலையுலக நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.

***

1 comment:

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் மதி சுதா .. புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

Blog Widget by LinkWithin