Thursday, December 31, 2009

டைம்ஸ் சஞ்சிகையின் 2009ம் ஆண்டுக்கான நபர்


2009ம் ஆண்டுக்கான நபராக வென் வெர்நன்கே (Ben Bernanke) தெரிவு செய்யப்பட்டுள்ளார் . இவர் அமெரிக்காவின் மத்திய வங்கியின் ஆளுநர் ஆவார் . இவர் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை சரிவிலிருந்து மீள பெரிதும் பாடுபட்டமைக்காக அமெரிக்காவின் டைம்ஸ் சஞ்சிகையின் 2009ம் ஆண்டுக்கான நபராக தெரிவு செய்யப்பட்டார் . டைம்ஸ் சஞ்சிகையினால் 1927ம் ஆண்டிலிருந்து ஒவ்வொருவருடமும் ஆண்டுக்கான நபர் தெரிவு தெரிவு செய்யப்படுகின்றார் .


***


சென்றுவிடு…. மனதை வென்றுவிடு


பிறக்கின்ற 2010ம் ஆண்டானது எம்மக்கள் மனதில் நிறையவே மகிழ்ச்சிகள், சந்தோசங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும் என வாழ்த்துவதுடன் 2010ம் ஆண்டே எம்மக்கள் மனதினை வென்றுவிடு........


அதேபோல் விடைபெறுகின்ற 2009ம் ஆண்டே எம்மக்கள் மனங்களில் ஏற்படுத்திய மாறாத வடுக்களை எடுத்துச் சென்றுவிடு.........


அன்பு நண்பர்கள், சக வலைப்பதிவர்கள், அனைவருக்கும் பிறக்கும் 2010க்கான இனிய வாழ்த்துக்கள்!

***

Tuesday, December 29, 2009

2009 இல் விளையாட்டு உலகம்

  • ஜேர்மனியின் பெர்லினில் நடைபெற்ற 12வது உலக சாம்பியன்சிப்தடகளப்போட்டியில் 100மீற்றர், 200மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் உலகசாதனை படைத்தார். 100மீற்றர் ஓட்டப் போட்டியினை 9.58 செக்கன்களிலும், 200மீற்றர் ஓட்டப் போட்டியினை 19.19 செக்கன்களிலும் ஓடி முடித்து தன்னாலே படைக்கப்பட்ட சாதனைகளை ஜமைக்காவின் யுசைன் போல்ட் புதுப்பித்தார்.
  • அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிண்ணத்தை ஒருகுழந்தையின் தாயாகிய கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் (பெல்ஜியம்) கைப்பற்றியமைசிறப்பம்சமாகும்.
  • டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை(15) வென்றுசுவிற்சர்லாந்தின் ரொர் பெடரர் சாதனை படைத்தார். முன்னர் அமெரிக்காவின்பீட் சாம்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. ரொஜர் பெடரர் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தினை வென்றது சிறப்பம்சமாகும்.
  • எல்லா கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 6வது வீரராக ரொஜர் பெடரர் சாதனை படைத்தார்.
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில்(30) வெற்றி பெற்று ஸ்பெயினின் ரபெல் நடால் புதிய சாதனை.
  • ரஸ்யாவின் மராட் சபீன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2000ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தினையும், 2005ம் ஆண்டு அவுஸ்ரேலிய ஓபன் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார் என்பதும் இவர் 2000ம்ஆண்டு சர்வதேச டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடம் வகித்தார்.
  • டென்னிஸ் போட்டிகள் மூலம் 50மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்தமுதல் டென்னிஸ் வீரராக ரொஜர் பெடரர் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் பீட் சாம்ராஸ் 43.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்தமை குறிப்பிடத்தக்கது.
  • விளையாட்டின் மூலம் அதிக தொகை (23.5மில்லியன் அமெரிக்க டொலர்கள்) சம்பாதித்த வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ், கோல்ப் வீராங்கனை அனிகா சொசென்ஸ்சினை முந்தி சாதனை படைத்தார்.
  • உலகின் முதல் பில்லியன் டொலர் வீரராக அமெரிக்காவின் கோல்ப் வீரர் டைகர்வுட்ஸ் சாதனை படைத்தார்.
  • இந்தியாவின் சானியா மிர்ஸா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தினைவென்று சாதனை புரிந்தார். அவுஸ்ரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தினை சானியா-பூபதி ஜோடி பெற்றது.
  • அமெரிக்காவின் நட்சத்திர கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், பல பெண்களுன் தவறான பாலியல் தொடர்புகளை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியதையடுத்து அவரின் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டு கோல்ப் விளையாட்டிலிருந்து தற்காலிக ஓய்வினை அறிவித்தார். மேலும் இவருடான விளம்பர ஒப்பந்தங்களை பல நிறுவனங்கள் விலக்கிக்கொண்டன.
  • போர்த்துக்கல் கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1950 கோடிக்கு ரியல் மாட்ரிட் கழகத்துக்கு கைமாறினார். இவர் முன்னர் மஞ்செஸ்டர்கழகத்துக்காக விளையாடினார்.
  • தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கொன்பெடரேசன் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
  • 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் மேரியன் ஜோன்ஸ்சின் பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் 200மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையாக இலங்கையின் சுசந்திகா ஜயசிங்க அறிவிக்கப்பட்டார்.
  • இலங்கையின் சுசந்திகா ஜயசிங்க தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் நடுவர் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மே.தீவுகளின் பக்னர் அறிவித்தார்.
  • முன்னாள் பிரபல கிரிக்கெட் நடுவர் இங்கிலாந்தினைச் சேர்ந்த டேவிட் சேப்பார்ட் காலமானார். நெல்சன் இலக்கம் என்றவுடன் அனைவர் கண்முன்னாலும் நினைவுக்கு வருகின்றவர்.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது. மகளிர் பிரிவில் இங்கிலாந்து சாம்பியனானது.
  • இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
  • தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் கிண்ணப் போட்டிகளில்அவுஸ்ரேலியா வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டது.
  • அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற 9வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டிகளில் இங்கிலாந்து வெற்றியீட்டி கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.
  • ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தினைப் பெற்றுக்கொண்டது.
***

Monday, December 28, 2009

2009ல் நினைவில் நின்றவை

ஏனைய வருடங்களைப் போலவே 2009ம் வருடமும் நிறையவே தடயங்களை விட்டுச்செல்ல தயாராகிவிட்டது. அந்தவகையில் 2009ம் வருடத்தின் சில நினைவுச்சுவடுகள்;

ஜனவரி

ஐக்கிய அமெரிக்க தேசத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கறுப்பினத்தவர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். பராக் ஒபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாவார்.

பெப்ரவரி

  • 81வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக இரண்டு ஒஸ்கார் விருதுகளினைப் பெற்று தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார். மேலும் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் 8 ஒஸ்கார் விருகளை சுவீகரித்துக் கொண்து.
  • கொசாவோ தன்னை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தியது.

மார்ச்

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது பாகிஸ்தானில் வைத்து ஆயுததாரிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.(3/3) இதில் சில வீரர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 1972 மூனிச் ஒலிம்பிக்கின் பின்னர் ஆயுததாரிகளினால் விளையாட்டு வீரர்கள் மீது முதல் தடவையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்

இலங்கை உட்பட ஏராளமான நாடுகளில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி(ய)/வருகின்ற பன்றிக்காய்ச்சல் நோயானது(இன்புளுவென்சா A H1N1 வைரஸ் கிருமியால் ஏற்படுவது) முதன்முதலில் மெக்சிக்கோவில் கண்டறியப்பட்டது. பன்றிக்காய்ச்சல் நோயானது ஐ. நா சபையினால் தொற்று கொள்ளை நோயாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மே

நேபாள நாட்டுப் பிரதமர் பிரசண்டா, ஜனாதிபதியுடனான முரண்பாடுகள் காரணமாக பதவிவிலகினார். நேபாள நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்படுவதற்கு மாவோ கட்சியின் தலைவர் பிரசண்டா பெரியளவில் போராட்டங்களை மேற்கொண்டவராவார்.

ஜூன்

  • உலகப்புகழ் பெற்ற பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சன் மரணமானது அவரின் ஏராளமான ரசிகர்களிடையே ஆழ்ந்த அதிர்வலைகளினை ஏற்படுத்தியது.
  • 228பேருடன் காணாமல் போன எயார் பிரான்ஸ் A-333 விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஜூலை

  • 21ம் நூற்றாண்டில் அதிக நேரம் நீடித்த முழுசூரிய கிரகணம் ஜூலை 22ம் திகதி நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • யேமானிய விமானம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து 153 பேர் வரையில் பலியாகினர்.

ஆகஸ்ட்

இந்தியா சந்திரனுக்கு அனுப்பிய சந்திராயன்-1 செயற்கைக் கோளானது செயலிழந்ததாக இஸ்ரோ உத்தியோகபூர்வமாக அறிவித்தது. சந்திராயன் விண்கலமானது சந்திரனில் நீர் இருப்பதனை உறுதிப்படுத்தியது மிகப்பெரும் சாதனையாகப் கருதப்படுகின்றது.

செப்டம்பர்

  • கினியாவில் இராணுவ ஆட்சியாளருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது படைகள் சராமரியாக துப்பாக்கி பிரயோகம் செய்தன. பெண்கள் மீது கூட்டாக பாலியல் வல்லுறவினை மேற்கொண்டனவாம். 150க்கும் அதிகமானோர் பலி. பலர் காயம் அடைந்தனர்.
  • 2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரமாக பிரேசிலின் றியோ டி ஜெனிரோ தெரிவுசெய்யப்பட்டது.

ஒக்டோபர்

இலங்கை வம்சாவளி வர்த்தகர் ராஜ் ராஜரத்தினம் பங்கு சந்தை மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது . ராஜ் ராஜரத்தினம் போர்ப்ஸ் சஞ்சிகையின் உலக பணக்கார பட்டியலில் உள்ளார் .


நவம்பர்

  • மைக்கல் ஜக்சனுக்கு 4 அமெரிக்க இசை விருதுகள் வழங்கப்பட்டது
  • வியட்நாமை சூறாவளி தாக்கியதில் பலர் பலி

டிசம்பர்

  • இந்த வருடத்துக்கான சமாதான நோபல் பரிசானது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு ஒஸ்லோவில் வழங்கப்பட்டது. இது பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியது எனலாம். (டிசம்பர்10)
  • இந்தியாவில் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கை வலுப்பெற்று வன்முறைகள் தலைதூக்க ஆரம்பித்தன.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பனிமழையின் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

என் வாழ்வில் 2009

  • மே 31ம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் B.Com பட்டத்தினைப் பெற்றுக்கொண்டேன்.
  • ஜூன் 5ம் திகதி பதிவுலகத்தில் முதன்முறையாக கால் பதித்தது.
  • ஜூன்21ம் திகதி அன்புள்ள மருமகள் (அக்காவின் மகள்) ஜயபிரதா தன்னுடைய முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடியது.


***

Saturday, December 26, 2009

உலக வெப்பமயமாதலும் தாவரங்களுக்கான பாதிப்புக்களும்

உலகமானது இன்று வெப்பமயமாதலின் காரணமாக பல்வேறு வகைகளில் பாதிப்புக்களினை எதிர்நோக்கிய வண்ணம் பயணித்துக்கொண்டியங்குகின்றது. அந்தவகையில் உலக வெப்பமயமாதலும் தாவரங்களுக்கான பாதிப்புக்களும் என்ற இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே........


(நன்றி-வீரகேசரி வாரவெளியீடு 25.01.2009)
***

Thursday, December 24, 2009

தூக்கமில்லையா………?

இன்று நம்மவர்களில் பலர் தூக்கமின்றி தவிர்ப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது (ஆனால் நான் இங்கே நுளம்புகளின் தொல்லை பற்றிச் சொல்ல வரவில்லை நண்பர்களே....) அண்மையில் பிலிப்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம் வெளியிட்ட ஆய்வுத் தகவலில் 93%மான இந்தியர்கள் தூக்கமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது நீங்கள் அறிந்ததே.

ஆனால் இந்தப் பதிவானது தூக்கத்துக்கான வழிமுறையினை சொல்லித்தருவதாகும்.

2008ம் ஆண்டு மார்ச்சில், பெல்ஜியத்தின் Vrije பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு முடிவினை வெளியிட்டிருந்தது. அவ்வாய்வறிக்கையில் ஆழ்ந் நித்திரைக்கான ஒரு ஆலோசனையினை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையில் அன்றாடம் ஓட்டத்துடன் தொடர்புடைய உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் ஒரு மனிதனின் நித்திரையினை மேம்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாய்வுக்காக புதிதாக ட்ட நிகழ்ச்சியினை ஆரம்பிக்கும் 50பேரிடம் ஆய்வுகளினை மேற்கொண்ட போது அன்றாட ஓட்டத்துடன் தொடர்புடைய உடற்பயிற்சி செயற்பாடுகள் நித்திரையினை மேம்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 10 வாரங்களுக்கு பின்னர் இவ்வாய்வானது புதிதாக ஓட்ட நிகழ்ச்சியினை ஆரம்பித்தவர்கள் விரைவாக நித்திரையினை செய்வதனையும், அவர்கள் சிறப்பாக நித்திரையினை செய்வதனையும் அவ்வாய்வானது உறுதிப்படுத்தியது. அத்துடன் உடற்பயிற்சி உயர்செயற்பாட்டு அறிகுறிகளினையும் வெளிப்படுத்தியது.

3-4 மணித்தியாலங்கள் வரையான தொடர்ச்சியான கடின உழைப்பானது, உடல் வெப்பநிலையினை மட்டத்துக்கு கீழ் கொண்டுவந்து மயக்க நிலையினை தூண்டிவிடுகின்றதாம். ஆகவே உடற்பயிற்சிக்கு மிகச் சிறந்த நேரம் படுக்கைக்கு போகும் முன்னர் 3-4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும்.அது பிந்திய மாலைப்பொழுதாகவோ அல்லது முந்திய மாலைப்பொழுதாகவோ இருக்கலாம்.

விளையாட்டுச் செயற்பாடுகளானது, ஏனைய முறைகளில் நித்திரை பெறுவதற்கும் மற்றும் நித்திரை மாத்திரைக்கான ஒரு மாற்றீடுமாகும். நித்திரை கொள்ளுங்கள் அன்றைய நாளில் புத்துணர்ச்சியாக இருங்கள்.

***

Tuesday, December 22, 2009

சபாநாயகருக்கு பேசுவதற்கு அனுமதியில்லையா ?

  • உலகிலுள்ள சிறகில்லாத ஒரே ஒரு பறவை நியூசிலாந்தின் கிவி பறவை.
  • பெண் சிங்கங்களே அதிகளவான வேட்டையாடல்களினைச் செய்கின்றதாம்.(90%)
  • யானைகளினால் 3மைல் தூரங்களுக்கும் அப்பாலுள்ள நீரினையும் நுகரக்கூடிய(மோப்பம்) இயலுமை உள்ளதாம்.
  • ஒட்டகங்களினை விடவும் எலிகளினால் நீரின்றி நீண்ட தூரம் பயணம் செல்லமுடியுமாம்.
  • வரலாற்றில் பூரணமாக சந்திரன் தென்படாத மாதங்களாக 1865ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் 1999ம் ஆண்டு பெப்ரவரி மாதமும் விளங்குகின்றதாம்.
  • அதிகளவான இரும்புச் சத்தானது பசுப்பாலினை விடவும் ஒட்டகப் பாலிலே உள்ளதாம்.
  • மெண்டலிவ்வின் ஆவர்த்தன அட்டவணையில் " J " என்ற எழுத்தினை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ கொண்ட எந்த மூலகமும் இல்லை.
  • இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு பேசுவதற்கு அனுமதியில்லையாம்.
  • ஐஸ்லாந்து நாட்டின் பல்கலைக்கழகங்களின் வழங்கப்படும் பட்டப்படிப்பு பட்டங்கள் 2/3 பங்கு பெண்களாலாலேயே பெறப்படுகின்றதாம்.
***


இலங்கை,இந்திய அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது(டிசம்பர் 21).இந்திய அணி திட்டமிட்டு வெற்றி இலக்கினை அடைந்து கொண்டது. இந்திய அணி 44.2 ஓவர்களில் 3 விக்கடகளை மாத்திரமிழந்து 240 ஆகிய வெற்றி இலக்கினை அடைந்து கொண்டது.

நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றார். இது சச்சினின் 93வது அரைச்சதம் (இந்தப் பதிவு என்னுடைய 93வது பதிவு.. எப்படி ஒற்றுமை..ஹா..ஹா) என்பதுடன் இலங்கைக்கெதிரான 17வது அரைச்சதமாகும்.



***

Monday, December 21, 2009

காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்

இன்று உலகினை அச்சுறுத்துகின்ற பிரதானமானதொரு விடயமாக காலநிலை மாற்றங்கள் காணப்படுகின்றன. மேலும் இன்றைய உலகத்தில் வதியும் உயிரினங்களின் ஆயுள்களுக்கும்,வாழ்க்கை முறைமைக்கும் காலநிலை மாற்றங்களினால் அச்சுறுத்தலானது ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராய்யும் உலகத் தலைவர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் நிறையவே அதிருப்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.

அந்த காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராய்யும் உலகத் தலைவர்களின் மாநாடானது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்காக "காலநிலை மாற்றங்களும் அவற்றின் தாக்கங்களும்" தொடர்பில் ஆராய்கின்ற கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் நண்பர்களே...........

(நன்றி- வீரகேசரி வாரவெளியீடு 04.01.2009)

***

Sunday, December 20, 2009

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் கோப்பி,தேயிலை


அவுஸ்ரேலிய, சிட்னி பல்கலைக்கழக சர்வதேச சுகாதாரத்துக்கான ஜோர்ஜ் நிறுவக ஆய்வாளர் Rachel Huxley(D.Phil) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க கோப்பி மற்றும் தேயிலை ஆகியன உதவிபுரிவதாக கண்டறிந்துள்ளனர்.

இதற்காக அவரது குழுவினர் கோப்பியருந்தும் 457,922 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 18 ஆய்வுகளையும் , கபின் அற்ற கோப்பியருந்தும் 225,516 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 6 ஆய்வுகளையும் மேலும் தேநீர் அருந்தும் 286,701 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 7 ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஒரு நாளில் மேலதிகமாக அருந்துகின்ற ஒவ்வொரு கோப்பை கோப்பியினால் நீரிழிவு நோயின் அதிகரித்த அபாயமானது 7% இனால் குறைவடைவதாக கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளில் 3-4 கோப்பை அருந்துபவர்கள், 0-2 கோப்பை அருந்துபவர்களை அருந்துபவர்களை விடவும் 25% இற்கும் குறைவான அபாயங்களினை எதிர்நோக்குகின்றனர்.


மேலும் இந்த ஆய்வின் பிரகாரம் கபின் அற்ற கோப்பியருந்துபவர்கள் ஒருநாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், கோப்பி அருந்தாதவர்களைக்காட்டிலும் அண்ணளவாக 1/3 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின்அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தேநீர் அருந்துபவர்கள் ஒரு நாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், தேநீர் அருந்தாதவர்களைக் காட்டிலும்அண்ணளவாக 1/5 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின் அபாயத்தைஎதிர்கொள்கின்றனர்.


நாமும் நாள்தோறும் கோப்பி அல்லது தேநீர் அருந்தி நீரிழிவு நோயின் அபாயத்தினைக் குறைத்துக் கொள்வோமாக...........

***

Friday, December 18, 2009

அழிவின் விளிம்பில் கோலா கரடிகளும், பென்குவின்களும்

ஐ.நா சபையின் காலநிலை மாநாட்டில் கடந்த 14ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் காலநிலை மாற்றங்களின் காரணமாக அரச பென்குவினிலிருந்து அவுஸ்ரேலியாவின் கோலா கரடிகள் வரையான டசின் கணக்கான விலங்கினங்கள் அழிவினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டங்களின் அதிகரிப்பு ,சமுத்திரங்கள் அமிலமயமாதல் மற்றும் துருவப் பிரதேசங்களில் பனி சுருங்குதல் ஆகியவை உயிரினங்களின் அழிவில் பெரும்பங்கு வகிக்கின்றன, மேலும் மாசடைதல்களின் அழுத்தங்கள் அவற்றுடன் வாழிடங்கள் சுருங்குதல் ஆகியவற்றின் பாதிப்புகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டதாக இயற்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமாசம்-IUCN ன் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமை , பெலுகா திமிங்கிலங்கள், கிளவ்ன் மீன்(clownfish), அரச பென்குவின் மற்றும் சல்மொன் உட்பட 10 வகையா இனங்களை காலநிலை மாற்றங்கள் அவற்றினுடைய வாழ்க்கையினைப் எவ்வாறு பாதித்துள்ளன என அவ்வறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபனீரொட்சைட் வாயுவின் அதிகரிப்பின் காரணமாக அவுஸ்ரேலியா கோலாகளின் உணவாகிய யூக்கலிப்ட்ஸ் இலைகளின் போசணைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு கோலா கரடிகள் போசணைக் குறைபாடுகளையும், பசி பட்டினிகளையும் எதிர் நோக்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களினால், குறிப்பாக துருவ இனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரச பென்குவின், வளமாக வாழ்வதற்குரிய வாழிடங்கள் அந்தாட்டிக்கா நிலைமைகள் போன்ற சில ஒத்ததா தீமையான பிரச்சினைகளினை எதிர் நோக்கியுள்ளன. பனி படர்ந்த நிலைவரங்கள் குறைவடைதலானது அரச பென்குவின்களினுடைய இனப்பெருக்க நிலைவரங்களினையும் மற்றும் இளங் குஞ்சுகளை வளர்ப்பதினிலும் பாதிப்படையச் செய்கின்றன. மேலும் அவற்றிக்கான பிரதான உணவு மூலங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம்.

தற்சமயம் டென்மார்க், கோபன்ஹேகனில் நடைபெறும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மானிடர்களுக்கு மாத்திரமன்றி பறவைகள்,விலங்குகளின் வாழ்க்கைக்கும் மிகமிக முக்கியமானதாகும் என்றால் மிகையல்ல எனலாம்.

***

Wednesday, December 16, 2009

இமாலய இலக்கில் மயிரிழையில் இடறிவிழுந்த இலங்கை


நேற்று செவ்வாய்கிழமை ராஜ்கோட்டில்டைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இறுதிப் பந்து வீசப்படும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. இந்தப் போட்டியில் காணப்பட்ட விறுவிறுப்புக்கு காரணம் இரண்டு அணிகளும் 400 க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றமையாகும்.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் 102 பந்துகளை எதிர்கொண்டு 146 (4s-14 & 6’s-6) ஓட்டங்களைப் பெற்றார். மேலும் அணித்தலைவர் டோனி 72 (4s-7 & 6’s-3) ஓட்டங்களையும் சச்சின் டெண்டுல்கர் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய அணி 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியினை, இந்திய அணி மிக இலகுவாக வீழ்த்திவிடும் என பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருக்கலாம் காரணம் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் மோசமான தோல்விகளின் பெறுபேறுகளாலாகும். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கை அணி இவ்வளவு விஸ்வரூபம் எடுத்து ஆடும் என ரசிகர்கள் நினைத்திருக்கமாட்டார்கள் எனலாம். ஆம் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்தொட்டே அதிரடியாகச் சென்று இந்திய அணியினை விஞ்சுவதாக இருந்தாலும் இலங்கை அணியின் மத்தி மற்றும் பின்வரிசை வீரர்களின் தவறுகள் காரணமாக இறுதியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் பரிதாபகரமாக தோல்வியினை தழுவிக்கொண்டது.

இலங்கை அணியின் சார்பில் திலகரத்ன டில்சான் 160(4s-20 & 6’s-3) ஓட்டங்களையும் அணித்தலைவர் குமார் சங்கக்கார 43 பந்துகளில் 90(4s-10& 6’s-5) ஓட்டங்களையும் உபுல் தரங்க 67(4s-4 & 6’s-3) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இறுதி ஓவரில் 11 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலை இலங்கை அணிக்கு காணப்பட்டது. நெஹ்ரா இறுதி ஓவரினை வீச குலசேகர முதல் பந்தில் 1 ஓட்டத்தினைப் பெற மத்தியூஸ் அடுத்த இரண்டு பந்துகளிலும் 2 ஓட்டங்கள் வீதம் பெற்று நான்காம் பந்தில் ஆட்டமிழக்க, நான்காம் பந்தில் வெல்கெதர 1 ஓட்டத்தினைப் பெற இலங்கை அணி இறுதிப் பந்தில் 5 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலை காணப்பட்டது. இறுதிப் பந்தில் குலசேகர ஒரு ஓட்டம் மாத்திரம் பெறப்பட இலங்கை அணி 3 ஓட்டங்களால் பரிதாபகரமாக தோல்வியினை தழுவிக்கொண்டது. இலகுவாக பெறப்பட வேண்டிய வெற்றியினை இலங்கை அணியின் மத்திய , பின் வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வெற்றியானது கைநழுவிப்போய்விட்டது.



மேற்படி ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள்

  • இந்தியா எந்தவொரு அணிக்கெதிராகவும் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாக 414 பதியப்பட்டது. இதற்கு முன்னர் 2007 உலகக் கிண்ணப் போட்டியில் பெர்மூடா அணிக்கெதிராகப் பெற்ற 413 ஓட்டங்களே அதிகமாகவிருந்தது.
  • இந்திய அணி ராஜ்கோட் மைதானத்தில் முன்னர் 2008ல் இங்கிலாந்து அணிக்கெதிராகப் பெற்ற 387/5 ஓட்டங்களை நேற்றைய போட்டியில் முறியடித்து 414 ஓட்டங்களாகப் பதிவுசெய்தது.
  • இலங்கை அணி இந்திய அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 320/8 கொழும்பு(RPS) 2009
  • இந்திய அணி இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 373/6 ரவுண்டன் -1999
  • இந்திய அணி இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 387/5 VS இங்கிலாந்து 2008
  • இலங்கை அணி இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 302/8 Vs பங்களாதேஸ், மொகாலி -2006
  • இந்திய அணிக்கெதிராக இலங்கை வீரர் ஒருவர் இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. =>திலகரத்ன டில்சான் 160 ஓட்டங்கள். முன்னர் இந்த சாதனை சனத் ஜயசூரிய வசமிருந்தது -151* மும்பாய்-1997.
  • இலங்கை அணியின் இரண்டாவது அதிகவேக அரைச்சதம் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது.=>குமார் சங்ககார 24 பந்துகள். முதலாவது சாதனை சனத் ஜயசூரிய (17பந்துகள்) வசமிருக்கின்றது.
  • திலகரத்ன டில்சான் தனது தனிப்பட்ட அதிக ஓட்டங்களைப்(160) பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் 137* vsபாகிஸ்தான் 2009
  • விரேந்தர் சேவாக் தனது தனிப்பட்ட அதிக ஓட்டங்களைப்(146) பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் vs நியூஸிலாந்து 2003
  • ராஜ்கோட் போட்டியில் இலங்கை அணியும் , இந்திய அணியும் 400 ஓட்டங்களைப் இரண்டு தடவை கடந்த அணிகளாக தென்னாபிரிக்காவுடன் தமது பெயரை பதிவு செய்து கொண்டன.
  • இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப்(411) பெற்ற 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா 438 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்ரேலிய அணியை வெற்றி பெற்ற ஜோகனர்ஸ்பேர்க் போட்டி விளங்குகின்றது.
  • இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப்(411) பெற்றும் தோல்வியடைந்த போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் இந்தியா 347 Vs அவுஸ்ரேலியா -2009 (ஹைதராபாத்)
  • இரண்டு அணிகளும் இணைந்து அதிகபட்ச ஓட்டங்களைப்(825) பெற்ற 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பதிவாகியுள்ளது.(872)
  • 4 ஓட்டங்கள்(80) அதிகம் பெறப்பட்ட 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பதிவாகியுள்ளது.(87)
  • இலங்கை அணியின் வீரர் இந்தியாவுக்கெதிராக வேகமான சதம் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது.=>திலகரத்ன டில்சான் 73 பந்துகள். முன்னர் சாதனை சனத் ஜயசூரிய (79பந்துகள்-கராச்சி 2008) வசமிருக்கின்றது.

***
Blog Widget by LinkWithin