Sunday, May 30, 2010

உயிர் எடுக்கும் புகையிலை .........




ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ம் திகதி உலக புகையிலை தடை தினமாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது .

என்னுடைய ஆக்கத்தினை பிரசுரித்த ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்கு நன்றிகள் .

நண்பர்களே இக்கட்டுரையினை பெரிதாக்கி வாசிக்கவும் ...



[ நன்றி - ஞாயிறு தினக்குரல் 30.05.2010]

***

Friday, May 28, 2010

தாயகத்தில் உலகக் கிண்ணம் வெல்லாத ஒரே அணி

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் தொடர்பான சுவையான தகவல்கள் ...........



 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியனாகவில்லையாம்.

 இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் 6 நாடுகள் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில், இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற நாடுகளில் பிரேசில் நாடும் மாத்திரமே தாயகத்தில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் [11 தடவைகள்] விளையாடிய நாடு ஜேர்மனி.~ 1934, 1954, 1958, 1966, 1970, 1974, 1982, 1986, 1990 வரை மே.ஜேர்மனி, 2002 & 2006 - ஒன்றிணைந்த ஜேர்மனியாகவும் பங்குபற்றியுள்ளன.

 இதுவரை 18 தடவைகள் நடைபெற்றுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான இறுதிப் போட்டிகளில் [7 தடவைகள்~ 1950, 1958, 1962, 1970, 1994,1998 & 2002] விளையாடிய நாடு பிரேசில் & ஜேர்மனி (1954,1966,1974,1982,1986,1990~ மே.ஜேர்மனி,2002~ஒன்றிணைந்த ஜேர்மனி). இதில் பிரேசில் 5தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.~ 1958, 1962, 1970, 1994 & 2002.

 1958ம் ஆண்டு நடைபெற்ற கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பெரிய பிரித்தானியாவின் அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து ஆகிய 4 நாடுகளும் பங்குபற்றின.


***

Wednesday, May 26, 2010

ATM மூலம் இனி தங்கமும் பெறலாம்

இதுவரை காலமும் ATM மூலம் பணம் பெறுவதனையே நாம் மேற்கொண்டு வந்தோம்/ அறிந்திருந்தோம்.

ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது அபுதாபியிலுள்ள உயர்மட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான அபுதாபி எமிரேட்ஸ் பலேஸ் ஹோட்டல் இந்தச் சேவையினை மே12, 2010 தொடக்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ATM இயந்திரம் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை தங்கச் சந்தை விலைகளினை கணனி முறை மூலம் இற்றைப்படுத்துகின்றதாம்.




இந்த ATM இயந்திரம் மூலம் 24கரட் கொண்ட 1கிராம், 5கிராம், 10கிராம் நிறையுடைய தங்கங்களை கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்கம் பெறும் இந்த ATM இயந்திரமானது ஜேர்மன் தொழில்முயற்சியாளர் தோமஸ் கீஸ்ஸ்லெர் [TG Gold-Super-Markt நிறுவன இயக்குனர்] என்பவரின் கண்டுபிடிப்பாகும்.



ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரமானது 2009ம் ஆண்டு முதன்முதலில் ஜேர்மனியில் பரீட்சிக்கப்பட்டாலும், தோமஸ் அவர்கள் ATM மூலம் தங்கம் பெறும் இயந்திரத்தினை உத்தியோகபூர்வமாக ஸ்தாபிப்பதற்கு அபுதாபியினை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் யாதெனில் தங்கத்துக்கு அங்கே அதிகரித்த கேள்வி நிலவிகின்றமையாலாகும்.



அடடா.....அபுதாபி சென்றால் ATM மூலம் தங்கம் பெறலாமே.... நீங்கள் தயாரா?..........

***
ATM தொடர்பான இன்னுமொரு செய்தி..........



உலகுக்கு ATM[The second first ATM] இயந்திரத்தினை அறிமுகப்படுத்தி வங்கிகளில் பணம் பெறுவதனை இலகுபடுத்திய ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்கள் தனது 84வது வயதில் ஸ்கொட்லாந்தில் அண்மையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வங்கி வாடிக்கையாளர்களே ATM இயந்திரத்தில் உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஜோன் ஷெப்பேர்ட் பர்ரோன் அவர்களை நினைவில்கொள்ளுங்கள்.

***

Sunday, May 23, 2010

Y என்ற பெயரில் ஒரு இடமா ?

 பசுபிக் சமுத்திரத்தினை விட அத்திலாண்டிக் சமுத்திரம் உவர்ப்பானதாகும்.

 சிறுத்தைகள் தமது வேகத்தினை 2 செக்கன்களில் 0 இல் இருந்து 70 கிலோமீற்றர் வேகத்திற்கு விரைவுபடுத்தும் இயலுமை கொண்டதாகும்.

 1666ம் ஆண்டு லண்டன் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தொன்றின் காரணமாக லண்டன் நகரின் அரைவாசிக்கும் அதிகமான பகுதி எரிந்து நாசமாகியதாம். ஆனால் இத்தீவிபத்தின் காரணமாக 6 பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகினர்.

 90%க்கும் அதிகமான நிக்கரகுவா மக்கள் ரோமன் கத்தோலிக்கத்தினையே பின்பற்றுகின்றனர்.

 வெனிசுலாவில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சியானது , நயாகாரா நீர்வீழ்ச்சியினை விட அண்ணளவாக16மடங்கு உயரமானதாகும்.


நயாகாரா நீர்வீழ்ச்சி


ஏஞ்சல் நீர்வீழ்ச்சி


 கரீபியன் பிராந்தியத்தில் புகையிரதப் பாதைகளை கொண்டுள்ள ஒரே தீவு கியூபா தேசம்தான்.

 பிரிட்டன் மகாராணியாரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பக்கிங்ஹாம் மாளிகையாகும். பக்கிங்ஹாம் மாளிகையானது 602 அறைகளைக் கொண்டுள்ளது.




 பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ Y” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.

 ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம் அலஸ்கா மாநிலமாகும். அலஸ்கா மாநிலமானது, ரஷ்யாவிடமிருந்து ஏக்கருக்கு 2சதங்கள் வீதம் செலுத்தி அமெரிக்காவினால் கொள்வனவு செய்யப்பட்டதாம்.


***

Friday, May 21, 2010

உலகில் மிக உயரமான வெளிச்சவீடு

வெளிச்சவீடுகள் தொடர்பிலான ஏராளமான சுவாரஷ்சியமான தகவல்களை கொண்டமைந்த பதிவினை படித்து ரசியுங்கள்........


உலகில் கட்டப்பட்ட முதல் வெளிச்சவீடாக[கலங்கரை விளக்கம் ] அலெக்ஸ்சாண்டிரா வெளிச்ச வீடானது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளிச்சவீடானது கி.மு 200ம் நூற்றாண்டளவில் பேரோஸ் தீவுகளில் எகிப்திய பேரரசனான போலமி [Ptolemy] என்பவனால் கட்டப்பட்டது. இது புராதனமான ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இது 492அடி[150மீற்றர்] உயரமானதாகும். இது நவீனகால வெளிச்சவீடுகளின் உயரங்களிலும் பார்க்க 3மடங்கு உயரமானதாகும்.



ரோமப் பேரரசர்கள், கடற்பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு உதவி புரிவதற்காக அதிகமான வெளிச்சவீடுகளை நிர்மாணித்தனர். கி.பி 90ம் ஆண்டளவில் பேரரசர் கலிகுலா, இங்கிலாந்து டோவரில் வெளிச்சவீட்டினை நிர்மாணிக்க உத்தரவு பிறப்பித்தார். இது இங்கிலாந்தில் மிகப் பழமையான வெளிச்சவீடு என்பதுடன் இது டோவர் துறைமுக தளத்தில் நிலைத்திருக்கின்றதாம்.

செங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட உலகில் மிகஉயரமான வெளிச்சவீடாக இத்தாலி, ஜேனோயாவிலுள்ள லன்ரேர்னா விளங்குகின்றது. இது 1543ம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்டதாகும். இது 246அடி [75மீற்றர்] உயரமானதாகும்.



உலகின் முதல் கருங்கல் வெளிச்சவீடாக இங்கிலாந்து, பிளைமவுத்தின் தென்புறமாக கட்டப்பட்ட சிமிற்ரொன் எடிஸ்ரோன் விளங்குகின்றது. இது 1756ம் ஆண்டளவில் “சமூக பொறியியலின் தந்தை” [Father of Civil Engineering] என அழைக்கப்படுகின்ற ஜோன் சிமிற்ரொன் அவர்களால் கட்டப்பட்டதாகும். இது 24 மெழுகுதிரிகளுடன் மாத்திரம் வெளிச்சம் வழங்கியது. எடிஸ்ரோன் 47 ஆண்டுகள் வரை நெருப்பின் மூலம் பிரகாசித்தது. பின்னர் இதன் பாவனை நின்றதனால் அருகிலமைந்துள்ள குன்றில் கட்டப்பட்டது.



இன்றைய வெளிச்சவீடுகளினுடைய வெளிச்சங்கள் 20மில்லியன் மெழுகுதிரிகளுக்கு சமமானதாகும். இவை உயரழுத்த சினோன் விளக்குகளால் வெளிச்சம் வழங்குகின்றது.

உலகில் மிகஉயரமான வெளிச்சவீடாக ஜப்பான், யோகோஹமா, யமசிட்டா பார்க்கிலுள்ள உருக்கிலான யோகோஹமா கடற்கரைக் கோபுரம் விளங்குகின்றது. இது 348அடி [106மீற்றர்] உயரமானதாகும்.



***

Wednesday, May 19, 2010

அச்சச்சோ.... அச்சச்சோ......

உங்களை வியப்பில் ஆழ்த்தும் சில அழகிய புகைப்படங்களை பார்த்து ரசியுங்கள்..........















***

Monday, May 17, 2010

உலகக் கிண்ணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டும் பாதணிகளின்மையால் வெளியேறிய நாடு...

எதிர்வருகின்ற ஜூன் மாதம் தென்னாபிரிக்க மண்ணில் உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துடன் தொடர்புடைய அரிய சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக இதோ..........

 1950ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற 4வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு இந்திய அணி தெரிவு செய்யப்பட்டது. ஆனாலும் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஏனெனில் பீபா[FIFA] இந்திய அணிக்கு பாதணிகளின்றி போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை.




 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு நாடுகளினை தெரிவுசெய்யும்போது அவற்றுக்கு தகுதிகாண் போட்டிகள் முக்கியமாகும். தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு நுழைவுக் கட்டணம் செலுத்தமுடியாமல் ஒரு நாடானது போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொண்டது. அந்த நாடு..... வேறென்ன இலங்கை அணிதான். - 11வது உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டி [1978ம் ஆண்டு]

 தென் அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இதுவரை தலா 9 தடவைகள் உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரித்துள்ளன. ஏனைய கண்டத்து நாடுகளால் இதுவரை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சாம்பியன் பட்டங்களை சுவீகரிக்க முடியவில்லை.

 பயிற்சியாளர் பொரா மிலுடினொவிக் 1986ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை நடைபெற்ற ஒவ்வொரு உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளின்போதும் வெவ்வேறு நாடுகளுக்கு பயிற்றுனராக விளங்கினார்.முறையே..... மெக்சிக்கோ, கொஸ்ரா ரிகா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு...

 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே வீரர் யார் தெரியாமா? டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற விவ்வியன் ரிச்சர்ட்ஸ் அவர்களேதான்... [அன்ரிகுவா - உதைபந்தாட்டம் & மே.தீவுகள் - கிரிக்கெட்]




 இதுவரை நடைபெற்ற சகல உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளிலும் பங்குபற்றிய ஒரே நாடு பிரேசில் [1930-2010]

***


T20 உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்




மேற்கிந்திய தீவுகள் மண்ணில் நடைபெற்ற 2010ம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை இங்கிலாந்து அணி கைப்பற்றி நேற்று புதிய சாதனையினைப் படைத்தது.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 147 ஓட்ட இலக்கினை 18 பந்துகள் மீதமிருக்க இங்கிலாந்து அணி 7விக்கட்களால் வெற்றி பெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிரேக் கீத்வெஸ்ரர் தெரிவு செய்யப்பட்டதுடன், போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரராக கெவின் பீற்றர்சன் தெரிவு செய்யப்பட்டார்.




கிரிக்கெட் விளையாட்டினை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாடானது கிரிக்கெட்டில் கைப்பற்றிய முதல் உலகக் கிண்ணம் இது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இதேவேளை மகளிர் பிரிவில் நியூசிலாந்து அணியினை 3 ஓட்டங்களால் தோற்கடித்து அவுஸ்திரேலிய அணி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியது.

***

Friday, May 14, 2010

பற்களின் உறுதியினைப் பாதுகாக்கும் பச்சை தேயிலை




தினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிடமிருந்து தூரவிலகி நிற்கலாம் என்கின்றது புதிய ஆராய்ச்சியொன்றின் பெறுபேறுகள்.


பச்சை தேயிலையானது[Green Tea], நுண்ணியிர்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் கெரிரென் என்கின்ற இரசாயனப் பொருளினை உள்ளடக்கியுள்ளதாம், இதன் மூலம் பற்சுகாதாரத்தினை மேம்படுத்த பச்சை தேயிலையானது உதவுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சீனி சுவை சேர்க்கப்பட்ட பச்சை தேயிலையினை மாத்திரம் அருந்துவது பக்றீரியா பாதிப்புக்களினை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக பற்கள் பாதிக்கப்படலாம் என்கின்றார் நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த அல்பிரிடோ மொராவியா.


அவர்களின் அறிக்கையின் பிரகாரம் இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியினை அருந்துவதும் தீமை பயக்கக்கூடியதாகும். கோப்பி தனியே பிரச்சினையினை கொண்டிருக்கவில்லையாயினும், இனிப்பு சுவை சேர்க்கப்பட்ட கோப்பியானது உங்கள் பற்களினை இழக்கச் செய்யலாம்.



இந்த ஆய்வில், 40-64 வயதிற்கிடைப்பட்ட 25000 ஜப்பானிய ஆண்,பெண் இருபாலாரிடையேயும் ரொஹொகு பல்கலைக்கழக மருத்துவ பட்டப்படிப்பு பள்ளியின் யசூசி கொயமா மற்றும் அவரது குழாமினர் ஆய்வுக்குட்படுத்தினர்.

இந்த ஆய்வின் பிரகாரம், ஒரு நாளில் குறைந்தது 1 கோப்பை பச்சை தேனீர் அருந்திவருகின்ற ஆண்களில் 19 சதவீதமானவர்களே 20பற்களிலும் குறைவாக கொண்டுள்ளனர், பெண்களில் இது 13 சதவீதமாகும். பச்சை தேனீர் அருந்தாதவர்களில் இது அதிக சதவீதமாகும்.

தினமும் ஒரு கோப்பை பச்சை தேயிலை அருந்திவருவதன் மூலம் பல்மருத்துவர்களிலிருந்து தூரவிலகி நிற்கலாமே!!!


***

Wednesday, May 12, 2010

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை....



ஆய்வொன்றின் பிரகாரம், குறைந்தளவான கலோரியினை உள்ளெடுப்பதன் மூலம் நீண்டகாலம் வாழ்வது மேம்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கத்தையவர்களில் மூன்றில் ஒரு பங்கானவர்கள் அதிக நிறையானவர்களாக [பருமன்] இருக்கின்ற அதேவேளை ஆண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 72ஆகவும், பெண்களின் சராசரி வாழ்க்கை வயதானது 79ஆகவும் உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்படுகின்றது.



அதேதருணம், ஹாவார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் பிரகாரம் விலங்குகள் கூட்டாக வாழ்கின்றபோது அவைகள் நீண்டகாலம் வாழ்கின்றனவாம் என அந்தஆராய்ச்சி பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் சங்கங்கள், கழகங்கள், மத அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றவர்கள், குழுக்களாக அதாவது கூட்டுக்குடும்பங்கள் போன்றதாக சேர்ந்து வாழ்கின்றபோது மனிதர்களின் வாழ்காலமானது அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

***

ஒவ்வொரு வருடமும் மே மாதம் 15ம் திகதி குடும்பங்களுக்கான சர்வதேச தினமாகும். அந்தவகையில் சர்வதேச குடும்ப தினத்தினையொட்டி நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.




***
கூடிக்குலாவி ஒற்றுமையாக வாழ்வதற்கு
வேற்றுமைகளை புறம் தள்ளுவோம்
உதவிகள் செய்வோம்
விட்டுக்கொடுப்போம்
தினமும் நாம் மனநிம்மதியுடன் வாழலாம்..........

***

Sunday, May 9, 2010

பாத்திரம் சுத்தம் செய்பவராக இருந்து பிரபல கணினி நிறுவன ஸ்தாபகராக முன்னேறியவர்....

  • டெல் கணினி நிறுவனத்தினுடைய ஸ்தாபகராகவும், இயக்குனராகவும் விளங்குகின்றவர் மைக்கல் டெல் ஆவார். ஆரம்ப காலத்தில் மைக்கல் டெல், மணித்தியாலத்துக்கு $2.30 சம்பளத்தில் சீன உணவகமொன்றில் பாத்திரம் சுத்தம் செய்பவராக வேலை பார்த்தாராம்.
  • மாமன்னன் ஜூலியஸ் சீசர் பிரபல்யமா ஒரு நீச்சல்காரராக விளங்கியவராம்.
  • மாவீரன் நெப்போலியன் தான் மேற்கொள்ளும் எல்லாப் போர் நடவடிக்கைகளின்போதும் சொக்லேட்டினை தன்வசம் எடுத்துக் கொண்டுசெல்வானாம்.
  • புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி சேர் ஐசாக் நியூட்டன் ஆவார். புவியீர்ப்பு விசை தொடர்பான கண்டுபிடிப்பினை மேற்கொண்ட போது நியூட்டனின் வயது 23 மாத்திரமே ஆகும்.
  • பிரபல நாவலாசிரியர் சார்ளஸ் டிக்கன்ஸ், வடக்கு பக்கம் தலை வைத்தே உறங்குவாராம். னெனில் வ்வாறு உறங்குவதன் காரணமாக தன்னுடையஎழுத்தாற்றல் மேம்படுவதா அவர் நம்பினார்.
  • அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த தியோடர் ரூஸ்வெல்ட், 1907ம் ஆண்டு புத்தாண்டு தினத்தின் போது 8513 மக்களுடன் கைகுலுக்கினாராம்.
  • பிரிட்டன் பிரதமராக பதவிவகித்த சேர் வின்சன் சேர்ச்சில் நடனமாடும் பெண்களின் அறையிலேயே பிறந்தவராம்.

***

ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் வாரத்து ஞாயிறு சர்வதேச அன்னையர் தினமாகும். அந்தவகையில் தாயாக, தந்தையாக எங்கள் குடும்பத்துக்கு வழிகாட்டுகின்ற எங்கள் அன்பு அம்மாவுக்கு என் முதற்கண் சல்யூட்.

உலக அன்னையர்கள் அனைவருக்கும் சர்வதேச அன்னையர் தினத்தினை முன்னிட்டு என் சல்யூட்கள்.

***

அன்பின் ஆதாரமாக

பண்பின் ஊற்றாக

முன்னேற்றத்தின் ஆசானாக

வாழ்வின் வழிகாட்டியாக

விளங்கும் அன்னைக்கு

என் வணக்கங்கள் ;

அன்னையின் ஆசி

இந்த உலகத்தில் எங்களை

உயர்விக்கும்..........

***

Friday, May 7, 2010

பிளமிங்கோ பறவைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன?




பிளமிங்கோ பறவைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன என்பதற்கான பதிலினைத் தருகின்ற ஒரு சுவாரஷ்சியமான பதிவு............

இப்பதிவினை பெரிதாக்கி வாசிக்கவும்....


( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 25.04.2010)

***

Tuesday, May 4, 2010

உலகில் மிக உயரமான பாலங்கள்

 உலகத்தில் மிக உயரத்தில் அமைந்து காணப்படுகின்ற பாலமானது இந்தியாவின் இமய மலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது இமய மலைப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற ட்ரஸ் மற்றும் சுரு ஆறுகளிடைய அமைந்துள்ள லடக் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கானது இந்தியப்பகுதி காஷ்மீரின் கடல் மட்டத்திலிருந்து 5602மீற்றர் [18379அடி] உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. “வைய்லி பாலம்” என அழைக்கப்படுகின்ற இப்பாலமானது 30மீற்றர் [98அடி] நீளமானதே என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாலமானது 1982 ஆகஸ்ட்டில் இந்திய இராணுவத்தினால் கட்டப்பட்டதாகும்.



 நீர்நிலை மேலே மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது அமெரிக்கா, கொலராடோவில் அர்கன்சாஸ் ஆற்றின் மேலாக அமைந்துள்ள “ரோயல் கோர்ஜ்” பாலமாகும். இப்பாலமானது 1929ம் ஆண்டு $ 350000 செலவில் கட்டப்பட்டதுடன் , நீர்நிலையிலிருந்து 321மீற்றர் [1053 அடி] உயரத்தில் காணப்படுகின்றது.




 வாராவதித் தூண்களைக் கொண்டு மிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலமானது பிரான்சில் மசிவ் மத்திய மலைகளின் ரான் ஆற்றின் மேலாகக் கட்டப்பட்டுள்ள “மிலாவ் வைய்டக்” பாலமாகும். இப்பாலமானது 300மீற்றர் [984அடி] இலும் அதிக உயரமானதுடன், 2.5கி.மீ [1.5மைல்கள்] நீளமானதாகும்.





***

Saturday, May 1, 2010

பெனாசீர் பூட்டோ தொடர்பிலான Numerology ஆய்வு





பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமர் மற்றும் முஸ்லிம் நாட்டின் முதல் பெண் பிரதமர்[1988] என்ற பெருமைக்குரியவருமாகிய பெனாசீர் பூட்டோ 2007ம் ஆண்டு டிசம்பர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் பலியானார். இவரின் கொலை தொடர்பில் ஐ. நா விசாரணைக் குழுவினர் மேர்கொண்ட ஆய்வின் பிரகாரம், ஆட்சியிலிருந்த பர்வேஷ் முஷாரப் தலைமையிலான அரசாங்கம் போதுமான பாதுகாப்பினை பெனாசீர் பூட்டோவுக்கு வழங்கியிருந்தால் பெனாசீரின் இழப்பினை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலக்கங்கள் தொடர்பில் நம்பிக்கை கொள்பவர்களே; பெனாசீர் பூட்டோ தொடர்பிலான சுவாரஷ்சியமான ஒரு Numerology ஆய்வு;

 பெனாசீர் பூட்டோ பிறந்த ஆண்டு 1953
1+9+5+3 = 18 = 1+8 = 9


 பெனாசீர் பூட்டோ பிறந்த பிறந்த மாதம், திகதி [ஜூலை,21]
6+2+1 = 9


 பெனாசீர் பூட்டோ பிறந்த ஆண்டு மாதம், திகதி
1+9+5+3+6+2+1= 27= 2+7= 9


 பெனாசீர் மீதான 1வது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. [2007] ஒக்டோபர் 18
1+8 = 9

 பெனாசீர் மீதான 2வது தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெனாசீர் பலியானர். [2007] டிசம்பர் 27
2+7 = 9

 பெனாசீர் கொல்லப்பட்ட ஆண்டு - 2007
2+0+0+7 = 9

 பெனாசீர் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்ந்த வருடங்கள்[1953 - 2007] 54 ஆண்டுகள்
5+4 = 9

 பெனாசீர் திருமணம் முடித்த திகதி [டிசம்பர்] 18
1+8 = 9

 பெனாசீர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது - 1998ம் ஆண்டு
1+9+9+8 = 27 = 2+7 = 9

 பெனாசீர் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பியது- 2007ம் ஆண்டு
2+0+0+7 = 9

 பெனாசீரின் வெளிநாட்டு வாழ்க்கை [1998-2007] - 9வருடங்கள்

 பெனாசீரின் சகோதரர் ஷானாவாஷ் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட ஆண்டு - 1980
1+9+8+0 =18 =1+8 =9

 பெனாசீர் பூட்டோ என்று உருது மொழியில் எழுத வரும் மொத்த எழுத்துக்கள் - 9

மேற்கூறியவற்றினை நோக்குகின்ற போது பெனாசீர் பூட்டோவுடன் இலக்கம் 9 ஆனது நெருங்கிய தொடர்பினை வகிக்கின்றது.

இது எனது 153வது பதிவாகும். [153= 1+5+3=9]

***












இன்று உலக தொழிலாளர் தினமாகும்.[ மே 1 ]










***
Blog Widget by LinkWithin