Tuesday, September 29, 2009

நீர்குமிழிகளின் கைவண்ணம்

நீர்குமிழிகளின் மூலம் தோன்றமளிக்கும் சி வித்தியாசமான படங்கள் தோ..........

Sunday, September 27, 2009

உங்கள் மனைவியின் பிறந்தநாளை மறந்து விட்டீர்களா?


உங்களுக்கிருக்கின்ற வேலைப்பளுக்கு பிறந்தநாளை மட்டுமா ஏராளமான திட்டமிட்ட காரியங்களினையும் தவறவிடுவதுண்டு. ஞாபகமறதி நம்மவர்களை போட்டு ஆட்டிப்படைக்கலாம்,இதனால் பல சங்கடங்களை எதிர்கொண்ட அனுபவங்களும் பலருக்கும் உண்டு. ஞாபகமறதிக்கு மனைவியின் பிறந்தநாள் மட்டும் என்ன விதிவிலக்கா????....... நல்லகாலம் நாம தப்பிவிட்டோம் என்று நினைத்ததுண்டா......

ஆனால் பாருங்க ........தென்மத்திய பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சமோவா (Samoa) நாட்டில் தமது சொந்த மனைவியின் பிறந்தநாளை மறப்பது ஒரு குற்றச்செயலாகும்...இது மட்டுமே போதும் சமோவா நாட்டில் மனைவியரின் பலத்தினை அறிந்து கொள்வதற்கு...

நல்ல காலம் நாம எல்லாம் சமோவா நாட்டிலிருந்தால் எப்படியிருக்கும் ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்க நண்பர்களே...........................


===

Friday, September 25, 2009

உலகில் மிகப்பெரிய காளை மாடு


அரைச்சதம் அடித்துவிட்டேன் .ஆம் இது என்னுடைய 50 வது பதிவு நண்பர்களே.........

சில்லி
– Chilli என அழைக்கப்படும் கறுப்பு மற்றும் வெள்ளை பேர்சியன் இனத்தைச் சேர்ந்ததே உலகில் மிகப்பெரிய காளை மாடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இந்த காளை மாடானது 1.25 தொன் நிறையுடையதாகவும், 6.6’ உயரமுடையதாகவும் உள்ளதாம்.

தற்போது 9 வயதுடையதாக காணப்படும் சில்லி காளை மாடானது பிரிட்டன் சமசெட்டில் உள்ள ஃபெர்னெ விலங்குகள் ரணாலயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


***

Wednesday, September 23, 2009

சச்சின் டெண்டுல்கர் & 100


அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த Compaq மும்முனைத் தொடரில் இலங்கையுடனான இறுதிப் போட்டியில் சதம் பெற்று இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்ற சச்சின் டெண்டுல்கர் முக்கிய பங்காற்றினார்.

சச்சின் டெண்டுல்கரின் சதங்கள் தொடர்பான சில சுவையான சாதனை தகவல்கள்
  • 44 : மொத்த சதங்கள்
  •  40 : ஆரம்ப துடுப்பாட்ட வீரராக
  •  5 : இறுதிப் போட்டியில்
  •  8 : இலங்கை அணிக்கெதிராக
  •  5 : இலங்கையில்
  •  4 : இலங்கை அணிக்கெதிராக இலங்கையில்
  •  16 : உள்நாட்டில்
  •  28 : இந்தியாவுக்கு வெளியே
  •  32 : இந்தியா வெற்றி
  •  11 : இந்தியா தோல்வி
  •  1 : கைவிடப்பட்ட போட்டி
  •  36 : பகல் வேளையில்
  •  8 : மின்னொளியில்
  •  28 : இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது
  •  16 : இந்தியா இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய போது
  •  2 : 2009 ம் ஆண்டில்

Tuesday, September 22, 2009

என்னைத் தேடி வந்த தேவதை...


ஆசைகள் யாரைத்தான் விட்டது, மனித மனங்களில் நிறையவே ஆசைகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த ஆசைகளுக்கு நண்பர் சந்துரு களம் அமைத்துத் தந்துள்ளார். அந்தவகையில் என்னிடம் வரம் தரும் தேவதையை அனுப்பிவிட்டார் அத்துடன் என்னை பத்து வரங்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்துவிட்டார்.

வரம் தானே கேட்டுவிடுவது என்று முடிவெடுத்து பின்வரும் வரங்களை தேவதையிடம் கேட்கலாம் என முடிவு செய்து பட்டியலிடுகின்றேன்.

1) வறுமை என்ற பதம் உலகிலிருந்து அகல வேண்டும்.
இந்த உலகில் வறுமையின் கோர விளைவுகளை நன்கு அனுபவித்தவன் என்ற வகையில் அதன் விளைவுகளை நான் நன்கு அறிவேன். அத்தகைய வறுமையினால் இன்று உலகளவில் பலர் பாதிக்கப்படுகின்றனர்/ பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அத்தகைய வறுமை உலகிலிருந்து அகல வேண்டும்.

2) புலமைப்பரிசில் நிதியம் ஒன்றினை ஸ்தாபித்தல்.
இன்று உலகளவில் தமது கல்வியினை தொடந்து முன்னெடுத்துச் செல்ல முடியாமல் பாதிப்பினை எதிர்நோக்குகின்ற இளம் சிறார்களுக்கு தமது கல்வினை முன்கொண்டு செல்லும் வகையில் உதவி புரிவதற்காக புலமைப்பரிசில் நிதியம் ஒன்றினை ஸ்தாபிக்கும் வல்லமையினை தேவதை எனக்கு வரமாக தர வேண்டும்.

3) இயற்கை பொய்க்கூடாது/அழிக்கக்கூடாது.
இயற்கையினை நம்பியே இன்று பெருமளவான மக்கள் உயிர் வாழ்கின்றனர். அந்த வகையில் பருவமழை உட்பட இயற்கையின் நன்நிகழ்ச்சிகள் பொய்க்கூடாது. காரணம் இன்று இயற்கையின் ஏமாற்றங்களால் எம்மக்கள் பல்வேறு பாதிப்புக்களினை தமது வாழ்வாதாரங்களினை எதிர் நோக்குகின்றனர். அந்த வகையில் வாழ்க்கையினை கொண்டு செல்ல இயற்கை உதவி புரிய வேண்டும்.

4) அன்பு, மனிதாபிமானம் உலகில் தழைக்க வேண்டும்.
இன்றைய உலகில் மனித மனங்களில் பல்விதமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றன. அந்த எண்ணங்கள் யாவும் மனித மனங்களை ஆட்டிப்படைக்கின்றன. அந்த வகையில் உலகில் அருகிச் செல்கின்ற அன்பு, மனிதாபிமானம் மீண்டும் தழைக்க வேண்டும்.

5) உலகினைச் சுற்றி பயணம் செல்லல்.
இந்த உலகில் பிறந்த நாம் இந்த உலகிலுள்ள அனைத்து பிரதேசங்களையும் தரிசிக்கும் ஆசைகளையும், சந்தர்ப்பங்களையும் கனவாக நம்மிடம் கொண்டுள்ளோம் அந்த கனவு நிறைவேற தேவதை எனக்கு வரம் தர வேண்டும்.

6) இந்த உலகில் தமிழ்மொழி,தமிழ் கலைகள்,தமிழர் பண்பாடுகள், கலாசாரங்கள் சீரழியாது பேண என்னால் முடிந்தளவு பாடுபடும் வல்லமையினை தேவதை எனக்கு வரமாக தர வேண்டும்.

7) டாக்டர் அப்துல் கலாமிடம் நிறையவே அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. அந்தவகையில் டாக்டர் அப்துல் கலாமிடம் தேவதை என்னை அழைத்துச் செல்ல வேண்டும்.

8) என் இதயத்தில் நிலைத்திருக்கின்ற என் அன்புக்குரியவர்கள் என்றென்றும் நிலைத்திருக்க, என் முன் தோன்ற தேவதை எனக்கு வரம் தர வேண்டும்.

9) இளைஞர்களுக்கு தமது திறமை வெளிக்காட்டுவதற்கு வேறுபாடுகளின்றி தகுந்த வாய்ப்புகள் , சந்தர்ப்பங்கள் ,களங்கள் கிடைக்க வேண்டும்.

10) நான் நினைக்கின்ற/செய்கின்ற காரியங்கள், செயற்பாடுகள் வெற்றி பெற வேண்டும்.

பல பதிவர்களுக்கு நிறையவே ஆசை இருப்பதை அறிந்தேன். என்னிடம் வந்த தேவதையை பின்வரும் நண்பர்களிடம் அனுப்புகின்றேன்.

1)செ.பொ.கோபிநாத்
2)சிவதர்சன்
3)"விழியும் செவியும்"
4)இது நம்ம ஆளு

*******

Wednesday, September 16, 2009

சனத் ஜயசூரிய & 90’S

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புடைய சாதனையான- சனத் ஜயசூரிய & 90’S தகவல்களை உங்கள் முன் பகிர்கின்றேன்.

எந்த ஒரு துடுப்பாட்ட வீரருக்கும் LBW மு
றை ஆட்டமிழப்பு தீர்மானத்தைஜீரணித்துக் கொள்வது என்பது கஸ்டமான விடயமே. அந்த தீர்மானம் சரியோஅல்லது தவறானதோ எதுவாயினும்...என்றாலும் மிகையாகாது. அதிலும் 90 ஓட்ட இலக்குகளில் ஆட்டமிழப்பது என்பது துடுப்பாட்ட வீரருக் கு வலியைஏற்படுத்தும் எனலாம். அந்த வகையில் இலங்கை அணியின் சனத் ஜயசூரியகடந்த 12ம் திகதி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 98 ஓட்டங்களுக்கு LBW முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் சனத் ஜயசூரியஆட்டமிழப்ப து முதல் தடவையல்ல.



அந்த வகையில் சனத் ஜயசூரிய 90 ஓட்ட இலக்குகளில் (90’S) அதிக தடவை LBW முறையில் ஆட்டமிழந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில்
சனத் ஜயசூரிய 90 ஓட்ட இலக்குகளில் 3 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார்.
அதே போல் இந்திய அணியின் விரேந்தர் சேவாக் 3 தடவைகள்
ஆட்டமிழந்துள்ளார்.

90 ஓட்ட இலக்குகளில் LBW முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற
சாதனைக்குரியவர் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கோடன் கிறினிட்ச் ( 96 ஓட்டங்களில் இந்திய அணிக்கெதிராக, இண்டோர் 1983/84) ஆவார்.

99 ஓட்டங்களில் LBW முறையில் ஆட்டமிழந்தவர்கள் என்ற
சாதனைக்குரியவர்கள் இந்திய முன்னாள் வீரர் சிறிக்காந்த் மற்றும் அவுஸ்ரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மத்திவ் ஹெய்டன் ஆகியோர்.

இதுவரை 19 துடுப்பாட்ட வீரர்கள் 90 ஓட்ட இலக்குகளில் LBW முறையில்
ஆட்டமிழந்துள்ளனர்.இதில் 6 துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியினைச் சேர்ந்தவர்கள், தலா 3 வீரர்கள் இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணியினைச் சேர்ந்தவர்கள்.

***

Monday, September 14, 2009

உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள முதல் 10 நகரங்கள்-2009


Mercer நிறுவனம் உலகளாவிய ரீதியில் மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம், உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


ஐரோப்பா மீண்டும் ஒருதடவை உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள முதல் 10 நகரங்களில் உயர்வினைக் காட்டுகின்றன.வியன்னா உலகளாவிய தரப்படுத்தலில் முதல் இடத்தை வகிக்கின்றது.அதிகமான ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கைத்தர வசதிகள் அதிகரித்துள்ளன.

வியன்னா நகரம்


அமெரிக்கப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை வட அமெரிக்க நகரங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.வாங்கோவர் முதல்10 இடங்களில் இடம்பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஹொனொலுலு தரப்படுத்தலில் 29ம் இடத்தை வகிக்கின்றது. வாசிங்டன், நியூயோர்க் நகரங்கள் முறையே மாற்றமின்றி 44ம்,49ம் இடத்தை வகிக்கின்றன.


மத்திய,தென் அமெரிக்காவில் சன் ஜுவன்-72ம் இடம் (பெட்டோரிக்கா), மொன்ரிவிடியோ -79ம் இடத்தை வகிக்கின்றன. அமெரிக்கப் பிராந்தியத்தில் ஹெய்ட்டி நாட்டின் போர்ட் ஒ பிரின்ஸ் (206ம் இடம்) தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெறுகின்றது .


ஆசியப் பிராந்தியத்தில் சிங்கப்பூர் 26ம் இடத்தையும் , சீனாவின் பீஜிங் 113 ம் இடத்தையும்,பாங்கொக் 120ம் இடத்தையும்,மும்பாய் 148ம் இடத்தையும் தரப்படுத்தலில் வகிக்கின்றன.ஆசியப் பிராந்தியத்தில் பங்களாதேஷ் டாக்கா இறுதி இடத்தை (205ம் இடம்) பெறுகின்றது.


பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த வாழ்க்கைத்தர வசதிகள் தொடர்பில் நியூசிலாந்து,அவுஸ்ரேலியா நகரங்களின் ஒக்லண்ட் ,சிட்னி முதல் 10 இடங்களில் இடம் பெறுகின்றன. நியூசிலாந்தின் வெலிங்டன் 12ம் இடத்தைப் பெறுகின்றது.


மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் டுபாய் (77ம் இடம்) மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் பாக்தாத் (215ம் இடம்) தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெறுகின்றது.


ஆபிரிக்கப் பிராந்தியத்தில் போர்ட் லூயிஸ் – மவ்ரிரியுஸ் (82ம் இடம்) மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.தென் ஆபிரிக்க கேப் டவுண் (80ம் இடம் & 2009ல் 87ம் இடம்) கடந்த வருடம் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரமாக தரப்படுத்தப்பட்டிருந்தது. ஆபிரிக்கப் பிராந்தியத்தில் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்கை (215ம் இடம்) தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெறுகின்றது.



உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள முதல் 10 நகரங்கள்-2009

1) வியன்னா (ஆஸ்திரியா)-2008ல் 2ம் இடம்

2) சூரிச் (சுவிஸ்சர்லாந்து)-2008ல் 1ம் இடம்

3) ஜெனிவா (சுவிஸ்சர்லாந்து)-2008ல் 2ம் இடம்

4) வான்கோவர் (கனடா)-2008ல் 4ம் இடம்

4) ஒக்லண்ட் (நியூசிலாந்து) -2008ல் 5ம் இடம்

6) டுசெல்டொர்ஃப் (ஜேர்மனி) -2008ல் 6ம் இடம்

7) முனிச் (ஜேர்மனி) -2008ல் 7ம் இடம்

8) பிராங்பேர்ட் (ஜேர்மனி) -2008ல் 7ம் இடம்

9) பேர்ன் (சுவிஸ்சர்லாந்து)-2008ல் 9ம் இடம்

10) சிட்னி (அவுஸ்ரேலியா)-2008ல் 10ம் இடம்



***

Friday, September 11, 2009

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அபூர்வமான ஹெட்-ரிக்

கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ச்சியாக 3 பந்துகளுக்கு 3 விக்கட்களை வீழ்த்துவது ஹெட்-ரிக் எனப்படும்.இது கிரிக்கெட்டில் ஒரு அபூர்வமான காரியம் தான்.

இந்த ஹெட்-ரிக்கிலும் நிகழ்த்தப்பட்ட அபூர்வமான சாதனை ஒன்றினை உங்கள் முன் பகிர்கின்றேன். 1988-89 பருவகாலத்தில் அவுஸ்ரேலியா பேர்த்தில் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் மேவ் ஹியுஸ் தொடர்ச்சியாக 3 பந்துகளுக்கு 3 விக்கட்களை வீழ்த்தி ஹெட்-ரிக் நிகழ்த்தினார். இந்த ஹெட்-ரிக்கில் சிறப்பம்சம் யாதெனில் 3 வெவ்வெறான ஓவர்களில் இந்த அபூர்வமான ஹெட்-ரிக் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேவ் ஹியுஸ்

இந்த
அபூர்வமான ஹெட்-ரிக் சாதனையாளர் மேவ் ஹியுஸ் தனது 36 வது ஓவரின் இறுதிப்பந்தில் கேட்லி அம்வுறோஸ்ஸினை ஆட்டமிழக்கச் செய்ததுடன், தனது 37 வது ஓவரின் ஆரம்பப்பந்தில் பட்ரிக் பெற்றர்சனை ஆட்டமிழக்கச் செய்ததுடன் மேற்கிந்திய தீவுகளின் 1 வது இன்னிங்ஸ் நிறைவுக்குவருகின்றது. 2 நாட்களுக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகளின் 2வது இன்னிங்ஸ்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கோடன் கிறினிட்சினை விக்கட் முறையில் வீழ்த்தியதன் மூலம் மேவ் ஹியுஸ் 3 வெவ்வேறான ஓவர்களில் தொடர்ச்சியாக 3 விக்கட்களை வீழ்த்தி ஹெட்-ரிக் சாதனை நிகழ்த்தினார்.


கேட்னி வோல்ஸ்

அதேபோல் இந்த தொடரில் 1வது டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கேட்னி வோல்ஸ்சும் ஹெட்-ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிட்த்தக்கது. இந்த ஹெட்-ரிக்கில் அவுஸ்ரேலியாவின் 1 வது இன்னிங்ஸ்சில் டொனி டொட்மெய்ட்டினை ஆட்டமிழக்கச் செய்ததுடன், 2வது இன்னிங்ஸ்சில் மைக் வெலெட்டாவினையும் கிரேம் வூட்டினையும் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க செய்து கேட்னி வோல்ஸ்சும் ஹெட்-ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.


***

மனிதனுடைய உடம்பு தொடர்பான சில சுவையான தகவல்கள்

1) மனிதனுடைய தொடை என்புகள் கொங்கிறிட்டினை விட வலிமையானதாம்.

2) மனிதனுடைய பற்கள் பெரும்பாலும் பாறைகளைப் போன்று கடினமானதாம்.

3) மனிதனுடைய உடம்பிலுள்ள என்புகளில் நான்கில் ஒரு பங்கு என்புகள் பாதங்களிலேயே உள்ளதாம்.

4) மனிதனுடைய கைவிரல் நகங்கள் அண்ணளவாக 4 தடவைகள் வேகமாக கால்விரல் நகங்களை விட வளருகின்றதாம்.

5) மனிதனுடைய கைரேகைகள் எவ்வாறு ஆளுக்கால் வேறுபடுகின்றதோ அதேபோல் நாரேகைகளும் ஆளுக்கால் வேறுபடுகின்றது.

6) கண்களை திறந்து கொண்டு தும்முவது சாத்தியமற்றதே. (யாரும் முயற்சி செய்து பார்க்காதீர்கள்???)

7) மனிதனுடைய உடம்பில் மிகவும் வலுவான தசையைக் கொண்டது நாக்கு தானாம்.
8) மனிதனுடைய மூளையானது கிட்டத்தட்ட 85% நீரைக் கொண்டுள்ளது.

***

Wednesday, September 9, 2009

நன்றிகள்! ! நன்றிகள்! ! நன்றிகள்! ! !


கடந்த 8ம் திகதி என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த,தெரிவிக்க நினைத்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் முதலில் எனது அன்பு நன்றிகள்.

மேலும் முக்கியமாக வெற்றி FM வானலை மூலமாக வாழ்த்து தெரிவித்த லோஷன் அண்ணா மற்றும் ஏனைய என் அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


பதிவுலகில் நுழைந்த பின்னர் வருகின்ற என்னுடைய 1வது பிறந்த நாள் இது என்பதனையும் நண்பர்கள் அறிவீர்கள்.


மேலும் கடந்த 8ம் திகதி பிறந்த நாளைக் கொண்டாடிய பதிவர் மற்றும் நண்பர் பிரபாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

***

Monday, September 7, 2009

உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

உலகிலேயே அதிகளவில் பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் 10 பேரின் பெயர்களை பிரபலபோர்ப்ஸ்சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் முதல் இடத்தைப் பெறுகின்றார்.

உலகில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 கிரிக்கெட் வீரர்கள்

1) மஹேந்திர சிங் தோனி(இந்தியா) - 10 மில்லியன் டொலர்கள்
2) சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 8 மில்லியன் டொலர்கள்

3) யுவராஜ் சிங் (இந்தியா) – 5.5 மில்லியன் டொலர்கள்

4) ராகுல் ராவிட் (இந்தியா) – 5 மில்லியன் டொலர்கள்


5) அன்ரூ பிளிண்டொப் (இங்கிலாந்து) – 4 மில்லியன் டொலர்கள்


6) சவ்ரவ் கங்குலி (இந்தியா) – 3.5 மில்லியன் டொலர்கள்

6) ரிக்கி பொண்டிங் (அவுஸ்ரேலியா) – 3.5 மில்லியன் டொலர்கள்


8) பிரெட் லீ (அவுஸ்ரேலியா) – 3 மில்லியன் டொலர்கள்

8) கெவின் பீற்றர்சன் (தென்னாபிரிக்கா) – 3 மில்லியன் டொலர்கள்


10) மைக்கல் கிளார்க் (அவுஸ்ரேலியா) – 2.5 மில்லியன் டொலர்கள்


உலகளவில் கடந்த 12 மாதங்களில் கிரிக்கெட் வீரர்கள் கழக மற்றும் தேசிய அணி சம்பளங்கள், வர்த்தக வருமானங்கள் ஆகியவற்றின் மூலம் சம்பாதித்த தொகையை கணக்கிட்டதலில் இந்த தகவல் கிடைத்திருப்பதாகபோர்ப்ஸ்சஞ்சிகை தெரிவித்துள்ளது.

உலகில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 கிரிக்கெட் வீரர்களில் 9பேர் IPL ல் பங்குபெறுகின்றனர்.

இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியை எடுத்துக் கொண்டால் ஏனைய வீரர்களை விட 45% அதிகமாக விளம்பரங்களில் சம்பாதிக்கின்றார் மேலும் தோனி தனது ஒவ்வொரு ஓட்டத்துக்கும் 5426$ பெறுகின்றாராம் என்கிறதுபோர்ப்ஸ்சஞ்சிகை.

எல்லா இந்திய தடகள மற்றும் பொழுது போக்குகளுடன் தொடர்புடையவர்களுடன் (சினிமா) ஒப்பிடும் போது மஹேந்திர சிங் தோனி 17 விளம்பர நிறுவனங்களின் பங்காளராக உள்ளார். தொடந்து 2ம் இடத்தில் பொலிவூட் நட்சத்திரம் சாருக் கான் உள்ளார், என்கிறதுபோர்ப்ஸ்சஞ்சிகை.

சச்சின் டெண்டுல்கர் IPL -மும்பை இந்தியன்ஸ் அணியில் 1.1 மில்லியன் டொலர்கள் பெறுகின்றார்.


***

Sunday, September 6, 2009

UAE பாடசாலைகளில் தேசியகீதம் கட்டாயமாகின்றது


UAE அரசாங்கமானது, தனது நாட்டில் அமைந்துள்ள எல்லா அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் நாளாந்த காலை நேர ஒன்றுகூடல்களில் அல்லது பாடசாலை நாள் ஆரம்பிக்கும் முன்னர் தேசிய கொடியினை ஏற்றுவதுடன் தேசிய கீதத்தினை பாட வேண்டும் என்றும் சட்டம் இயற்றியுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே தேசிய அடையாளத்தினை அதிகரிப்பதற்காக எல்லா கல்வி சம்மேளங்களையும்,அதிகார சபைகளையும், வலயங்களையும் இவற்றினை நேரடியாக அமுல்படுத்த அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு UAE கல்வி அமைச்சர் குமைட் அல் குதமி பணித்துள்ளார்.

தனிப்பட்டவர்களிடையேயும், சமூகத்திடையேயும் நேரான சுமுகநிலைக்கும் ,அடையாளத்தை அதிகரிப்பதற்கும் தேசிய கீதமானது ஒரு முக்கிய திறவுகோலாகும் எனவும் UAE கல்வி அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.


***

Friday, September 4, 2009

டானியல் விற்றோரி & No.8 சாதனை

அண்மையில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணித்தலைவர் டானியல் விற்றோரி 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 140 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு முயன்றும் வெற்றி பெறமுடியாமல் போனது தெரிந்த விடயம். ஆனாலும் அவர் நிகழ்த்திய சாதனை மறக்கமுடியாதது.டெஸ்ட் போட்டி ஒன்றில் 4ம் இன்னிங்சில் 8ம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாட வந்து அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரராக அவுஸ்ரேலியாவின் மிச்செல் ஜோன்சன் விளங்கினார்.ஜோன்சன் ஆட்டமிழக்காது 123 ஓட்டங்களை இந்த பருவ காலத்தில் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

டானியல் விற்றோரி


இதுவரை 10 துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமே டெஸ்ட் போட்டி ஒன்றில் 4ம் இன்னிங்சில் 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து சதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு இன்னிங்சிலும் 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாட வந்து அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக பாகிஸ்தானைச் சேர்ந்த வசிம் அக்ரம் விளங்குகின்றார். வசிம் அக்ரம் 1996-97 பருவ காலத்தில் சிம்பாப்வேயில் நடைபெற்ற போட்டியில் 257 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாட வந்து இரட்டை சதம் பெற்ற வீரர்கள் இரண்டு பேர் மாத்திரமே.இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வசிம் அக்ரம் மற்றும் இம்தியாஸ் அஹ்மெட் ஆகிய வீரர்கள்.

டானியல் விற்றோரி 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாட வந்து இதுவரை 3 சதங்களைப் பெற்றுள்ளார்.

***

Tuesday, September 1, 2009

உலகில் வாழ்க்கைச்செலவு குறைந்த முதல் 10 நகரங்கள்-2009

எனது பதிவு28 ஆனது உலகில் வாழ்க்கைச்செலவு மிகுந்த முதல் 10 நகரங்களைப் பற்றியதாக இருந்தது. இந்த பதிவானது உலகில் வாழ்க்கைச்செலவு குறைந்த முதல் 10 நகரங்களைப் பற்றியதாகும்.

உலகளாவிய ரீதியில் Mercer நிறுவனமானது 6 கண்டங்களின் 143 நகரங்கள் பூராகவும் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் உலகளவில் வாழ்க்கைச் செலவுமிக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


உலகில் வாழ்க்கைச்செலவு குறைந்த முதல் 10 நகரங்கள்-2009
1) ஜொகனஸ்பேர்க் நகரம்
தென்னாபிரிக்க நகரமான ஜொகனஸ்பேர்க் உலகில் வாழ்க்கைச்செலவு குறைந்த நகரமாகும்.

2) மொன்ரெர்ரி நகரம் (மெக்சிக்கோ)

3) அசுன்சியன் நகரம்
தென் அமெரிக்க நாடான பரகுவேயின் அசுன்சியன் நகரமானது 2008ம் ஆண்டு உலகில் வாழ்க்கைச்செலவு குறைந்த நகரமாக முதலிடத்தை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

4) கராச்சி நகரம்
பாகிஸ்தானின் கராச்சி நகரமானது ஆசியாவில் வாழ்க்கைச்செலவு குறைந்த நகரமாக முதலிடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

5) வெலிங்டன்
நியூசிலாந்தின் வடதீவாக விளங்கும் வெலிங்டன் நகரம் 5வது இடத்தை வகிக்கின்றது.

6) ஒக்லண்ட்
நியூசிலாந்தின் மற்றுமொரு முக்கிய நகரமான ஒக்லண்ட் நகரமும் வாழ்க்கைச்செலவு குறைந்த 6வது நகரமாக விளங்குகின்றது.

7) மெக்சிக்கோ நகரம்
மெக்சிக்கோ நகரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் வீழ்ச்சியினைக் காட்டுகின்றது.பெருமளவான ஐரோப்பிய நகரங்கள் 2009ம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் வாழ்க்கைச்செலவு குறைந்த நகரங்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன.

8) குவைட்டோ (ஈகுவடோர்)

9) சென்னை
இந்தியாவின் சென்னை நகரமானது புதுடில்லி,மும்பாய் நகரங்களை விட வாழ்க்கைச்செலவு குறைந்த நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய ரூபாயானது அமெரிக்க டொலருக்கெதிராக முக்கியான இழப்பினை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


10) துனிஸ்
துனிஸியாவின் துனிஸ் நகரமானது வருடாந்த தரப்படுத்தலில் 10ம் இடத்தை வகிக்கின்றது. பெருமளவான ஆபிரிக்க நகரங்கள் கடந்த வருடத்தை விடவும் அதிக செலவான நகரங்களாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

Blog Widget by LinkWithin