சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியுடன் தொடர்புடைய சாதனையான- சனத் ஜயசூரிய & 90’S தகவல்களை உங்கள் முன் பகிர்கின்றேன்.
எந்த ஒரு துடுப்பாட்ட வீரருக்கும் LBW முறை ஆட்டமிழப்பு தீர்மானத்தைஜீரணித்துக் கொள்வது என்பது கஸ்டமான விடயமே. அந்த தீர்மானம் சரியோஅல்லது தவறானதோ எதுவாயினும்...என்றாலும் மிகையாகாது. அதிலும் 90 ஓட்ட இலக்குகளில் ஆட்டமிழப்பது என்பது துடுப்பாட்ட வீரருக் கு வலியைஏற்படுத்தும் எனலாம். அந்த வகையில் இலங்கை அணியின் சனத் ஜயசூரியகடந்த 12ம் திகதி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 98 ஓட்டங்களுக்கு LBW முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் சனத் ஜயசூரியஆட்டமிழப்ப து முதல் தடவையல்ல.
அந்த வகையில் சனத் ஜயசூரிய 90 ஓட்ட இலக்குகளில் (90’S) அதிக தடவை LBW முறையில் ஆட்டமிழந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் சனத் ஜயசூரிய 90 ஓட்ட இலக்குகளில் 3 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார்.
அதே போல் இந்திய அணியின் விரேந்தர் சேவாக் 3 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார்.
90 ஓட்ட இலக்குகளில் LBW முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற சாதனைக்குரியவர் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கோடன் கிறினிட்ச் ( 96 ஓட்டங்களில் இந்திய அணிக்கெதிராக, இண்டோர் 1983/84) ஆவார்.
99 ஓட்டங்களில் LBW முறையில் ஆட்டமிழந்தவர்கள் என்ற சாதனைக்குரியவர்கள் இந்திய முன்னாள் வீரர் சிறிக்காந்த் மற்றும் அவுஸ்ரேலிய முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மத்திவ் ஹெய்டன் ஆகியோர்.
இதுவரை 19 துடுப்பாட்ட வீரர்கள் 90 ஓட்ட இலக்குகளில் LBW முறையில் ஆட்டமிழந்துள்ளனர்.இதில் 6 துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணியினைச் சேர்ந்தவர்கள், தலா 3 வீரர்கள் இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணியினைச் சேர்ந்தவர்கள்.
***
No comments:
Post a Comment