Monday, September 14, 2009

உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள முதல் 10 நகரங்கள்-2009


Mercer நிறுவனம் உலகளாவிய ரீதியில் மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம், உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


ஐரோப்பா மீண்டும் ஒருதடவை உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள முதல் 10 நகரங்களில் உயர்வினைக் காட்டுகின்றன.வியன்னா உலகளாவிய தரப்படுத்தலில் முதல் இடத்தை வகிக்கின்றது.அதிகமான ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கைத்தர வசதிகள் அதிகரித்துள்ளன.

வியன்னா நகரம்


அமெரிக்கப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை வட அமெரிக்க நகரங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.வாங்கோவர் முதல்10 இடங்களில் இடம்பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் ஹொனொலுலு தரப்படுத்தலில் 29ம் இடத்தை வகிக்கின்றது. வாசிங்டன், நியூயோர்க் நகரங்கள் முறையே மாற்றமின்றி 44ம்,49ம் இடத்தை வகிக்கின்றன.


மத்திய,தென் அமெரிக்காவில் சன் ஜுவன்-72ம் இடம் (பெட்டோரிக்கா), மொன்ரிவிடியோ -79ம் இடத்தை வகிக்கின்றன. அமெரிக்கப் பிராந்தியத்தில் ஹெய்ட்டி நாட்டின் போர்ட் ஒ பிரின்ஸ் (206ம் இடம்) தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெறுகின்றது .


ஆசியப் பிராந்தியத்தில் சிங்கப்பூர் 26ம் இடத்தையும் , சீனாவின் பீஜிங் 113 ம் இடத்தையும்,பாங்கொக் 120ம் இடத்தையும்,மும்பாய் 148ம் இடத்தையும் தரப்படுத்தலில் வகிக்கின்றன.ஆசியப் பிராந்தியத்தில் பங்களாதேஷ் டாக்கா இறுதி இடத்தை (205ம் இடம்) பெறுகின்றது.


பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த வாழ்க்கைத்தர வசதிகள் தொடர்பில் நியூசிலாந்து,அவுஸ்ரேலியா நகரங்களின் ஒக்லண்ட் ,சிட்னி முதல் 10 இடங்களில் இடம் பெறுகின்றன. நியூசிலாந்தின் வெலிங்டன் 12ம் இடத்தைப் பெறுகின்றது.


மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் டுபாய் (77ம் இடம்) மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் பாக்தாத் (215ம் இடம்) தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெறுகின்றது.


ஆபிரிக்கப் பிராந்தியத்தில் போர்ட் லூயிஸ் – மவ்ரிரியுஸ் (82ம் இடம்) மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.தென் ஆபிரிக்க கேப் டவுண் (80ம் இடம் & 2009ல் 87ம் இடம்) கடந்த வருடம் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள நகரமாக தரப்படுத்தப்பட்டிருந்தது. ஆபிரிக்கப் பிராந்தியத்தில் மத்திய ஆபிரிக்க குடியரசின் பாங்கை (215ம் இடம்) தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெறுகின்றது.



உலகில் மிகச்சிறந்த வாழ்க்கைத்தர வசதியுள்ள முதல் 10 நகரங்கள்-2009

1) வியன்னா (ஆஸ்திரியா)-2008ல் 2ம் இடம்

2) சூரிச் (சுவிஸ்சர்லாந்து)-2008ல் 1ம் இடம்

3) ஜெனிவா (சுவிஸ்சர்லாந்து)-2008ல் 2ம் இடம்

4) வான்கோவர் (கனடா)-2008ல் 4ம் இடம்

4) ஒக்லண்ட் (நியூசிலாந்து) -2008ல் 5ம் இடம்

6) டுசெல்டொர்ஃப் (ஜேர்மனி) -2008ல் 6ம் இடம்

7) முனிச் (ஜேர்மனி) -2008ல் 7ம் இடம்

8) பிராங்பேர்ட் (ஜேர்மனி) -2008ல் 7ம் இடம்

9) பேர்ன் (சுவிஸ்சர்லாந்து)-2008ல் 9ம் இடம்

10) சிட்னி (அவுஸ்ரேலியா)-2008ல் 10ம் இடம்



***

2 comments:

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றி நண்பரே ஏற்றுக்கொள்கின்றேன் .

அன்புடன் லோகநாதன்

Sivatharisan said...

உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.வாழ்த்துகள்

Blog Widget by LinkWithin