Friday, September 11, 2009

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அபூர்வமான ஹெட்-ரிக்

கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ச்சியாக 3 பந்துகளுக்கு 3 விக்கட்களை வீழ்த்துவது ஹெட்-ரிக் எனப்படும்.இது கிரிக்கெட்டில் ஒரு அபூர்வமான காரியம் தான்.

இந்த ஹெட்-ரிக்கிலும் நிகழ்த்தப்பட்ட அபூர்வமான சாதனை ஒன்றினை உங்கள் முன் பகிர்கின்றேன். 1988-89 பருவகாலத்தில் அவுஸ்ரேலியா பேர்த்தில் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் மேவ் ஹியுஸ் தொடர்ச்சியாக 3 பந்துகளுக்கு 3 விக்கட்களை வீழ்த்தி ஹெட்-ரிக் நிகழ்த்தினார். இந்த ஹெட்-ரிக்கில் சிறப்பம்சம் யாதெனில் 3 வெவ்வெறான ஓவர்களில் இந்த அபூர்வமான ஹெட்-ரிக் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேவ் ஹியுஸ்

இந்த
அபூர்வமான ஹெட்-ரிக் சாதனையாளர் மேவ் ஹியுஸ் தனது 36 வது ஓவரின் இறுதிப்பந்தில் கேட்லி அம்வுறோஸ்ஸினை ஆட்டமிழக்கச் செய்ததுடன், தனது 37 வது ஓவரின் ஆரம்பப்பந்தில் பட்ரிக் பெற்றர்சனை ஆட்டமிழக்கச் செய்ததுடன் மேற்கிந்திய தீவுகளின் 1 வது இன்னிங்ஸ் நிறைவுக்குவருகின்றது. 2 நாட்களுக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகளின் 2வது இன்னிங்ஸ்சில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கோடன் கிறினிட்சினை விக்கட் முறையில் வீழ்த்தியதன் மூலம் மேவ் ஹியுஸ் 3 வெவ்வேறான ஓவர்களில் தொடர்ச்சியாக 3 விக்கட்களை வீழ்த்தி ஹெட்-ரிக் சாதனை நிகழ்த்தினார்.


கேட்னி வோல்ஸ்

அதேபோல் இந்த தொடரில் 1வது டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கேட்னி வோல்ஸ்சும் ஹெட்-ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிட்த்தக்கது. இந்த ஹெட்-ரிக்கில் அவுஸ்ரேலியாவின் 1 வது இன்னிங்ஸ்சில் டொனி டொட்மெய்ட்டினை ஆட்டமிழக்கச் செய்ததுடன், 2வது இன்னிங்ஸ்சில் மைக் வெலெட்டாவினையும் கிரேம் வூட்டினையும் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க செய்து கேட்னி வோல்ஸ்சும் ஹெட்-ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.


***
Blog Widget by LinkWithin