
ஆசைகள் யாரைத்தான் விட்டது, மனித மனங்களில் நிறையவே ஆசைகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த ஆசைகளுக்கு நண்பர் சந்துரு களம் அமைத்துத் தந்துள்ளார். அந்தவகையில் என்னிடம் வரம் தரும் தேவதையை அனுப்பிவிட்டார் அத்துடன் என்னை பத்து வரங்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்துவிட்டார்.
வரம் தானே கேட்டுவிடுவது என்று முடிவெடுத்து பின்வரும் வரங்களை தேவதையிடம் கேட்கலாம் என முடிவு செய்து பட்டியலிடுகின்றேன்.
1) வறுமை என்ற பதம் உலகிலிருந்து அகல வேண்டும்.
இந்த உலகில் வறுமையின் கோர விளைவுகளை நன்கு அனுபவித்தவன் என்ற வகையில் அதன் விளைவுகளை நான் நன்கு அறிவேன். அத்தகைய வறுமையினால் இன்று உலகளவில் பலர் பாதிக்கப்படுகின்றனர்/ பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அத்தகைய வறுமை உலகிலிருந்து அகல வேண்டும்.
2) புலமைப்பரிசில் நிதியம் ஒன்றினை ஸ்தாபித்தல்.
இன்று உலகளவில் தமது கல்வியினை தொடந்து முன்னெடுத்துச் செல்ல முடியாமல் பாதிப்பினை எதிர்நோக்குகின்ற இளம் சிறார்களுக்கு தமது கல்வினை முன்கொண்டு செல்லும் வகையில் உதவி புரிவதற்காக புலமைப்பரிசில் நிதியம் ஒன்றினை ஸ்தாபிக்கும் வல்லமையினை தேவதை எனக்கு வரமாக தர வேண்டும்.
3) இயற்கை பொய்க்கூடாது/அழிக்கக்கூடாது.
இயற்கையினை நம்பியே இன்று பெருமளவான மக்கள் உயிர் வாழ்கின்றனர். அந்த வகையில் பருவமழை உட்பட இயற்கையின் நன்நிகழ்ச்சிகள் பொய்க்கூடாது. காரணம் இன்று இயற்கையின் ஏமாற்றங்களால் எம்மக்கள் பல்வேறு பாதிப்புக்களினை தமது வாழ்வாதாரங்களினை எதிர் நோக்குகின்றனர். அந்த வகையில் வாழ்க்கையினை கொண்டு செல்ல இயற்கை உதவி புரிய வேண்டும்.
4) அன்பு, மனிதாபிமானம் உலகில் தழைக்க வேண்டும்.
இன்றைய உலகில் மனித மனங்களில் பல்விதமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றன. அந்த எண்ணங்கள் யாவும் மனித மனங்களை ஆட்டிப்படைக்கின்றன. அந்த வகையில் உலகில் அருகிச் செல்கின்ற அன்பு, மனிதாபிமானம் மீண்டும் தழைக்க வேண்டும்.
5) உலகினைச் சுற்றி பயணம் செல்லல்.
இந்த உலகில் பிறந்த நாம் இந்த உலகிலுள்ள அனைத்து பிரதேசங்களையும் தரிசிக்கும் ஆசைகளையும், சந்தர்ப்பங்களையும் கனவாக நம்மிடம் கொண்டுள்ளோம் அந்த கனவு நிறைவேற தேவதை எனக்கு வரம் தர வேண்டும்.
6) இந்த உலகில் தமிழ்மொழி,தமிழ் கலைகள்,தமிழர் பண்பாடுகள், கலாசாரங்கள் சீரழியாது பேண என்னால் முடிந்தளவு பாடுபடும் வல்லமையினை தேவதை எனக்கு வரமாக தர வேண்டும்.
7) டாக்டர் அப்துல் கலாமிடம் நிறையவே அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. அந்தவகையில் டாக்டர் அப்துல் கலாமிடம் தேவதை என்னை அழைத்துச் செல்ல வேண்டும்.
8) என் இதயத்தில் நிலைத்திருக்கின்ற என் அன்புக்குரியவர்கள் என்றென்றும் நிலைத்திருக்க, என் முன் தோன்ற தேவதை எனக்கு வரம் தர வேண்டும்.
9) இளைஞர்களுக்கு தமது திறமை வெளிக்காட்டுவதற்கு வேறுபாடுகளின்றி தகுந்த வாய்ப்புகள் , சந்தர்ப்பங்கள் ,களங்கள் கிடைக்க வேண்டும்.
10) நான் நினைக்கின்ற/செய்கின்ற காரியங்கள், செயற்பாடுகள் வெற்றி பெற வேண்டும்.
பல பதிவர்களுக்கு நிறையவே ஆசை இருப்பதை அறிந்தேன். என்னிடம் வந்த தேவதையை பின்வரும் நண்பர்களிடம் அனுப்புகின்றேன்.
1)செ.பொ.கோபிநாத்
2)சிவதர்சன்
3)"விழியும் செவியும்"
4)இது நம்ம ஆளு
*******
5 comments:
நன்றி நண்பரே உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி
வரம் தரும் தேவதயை என்னிடம் அனுப்பியதற்கு !
உங்கள் பத்து வரங்களும் பலிக்க வேண்டும் !
தேவதை யிடம் கேட்ட வரங்கள் யாவும் பலித்து வளமான வாழ்வு வாழ என்வாழ்த்துக்கள்.
நண்பரே, உங்கள் அழைப்புக்கு நன்றிகள், மாத இறுதி அறிக்கைகள் என்று வேலையிடத்தில் பணி அதிகம் இருப்பதால் உடனடியாக உங்களுக்கு பதிலையும், தொடர்பதிவையும் இடமுடியவில்லை. என்னை முதன் முதலாக தொடர்பதிவுக்கு அழைத்த நபர் நீங்கள் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, இந்த வாரஇறுதி நாட்களில் நிச்சயம் பதிவிட்டு விடுகின்றேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்றுதான் நேரம் கிடைத்தது. உங்கள் தொடர்பதிவுக்கு இணைவதற்கு. http://spggobi.blogspot.com/2009/10/10.html
Post a Comment