Showing posts with label மீன்கள். Show all posts
Showing posts with label மீன்கள். Show all posts

Sunday, March 6, 2011

இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனம்.....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.

 நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.

 ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.

 சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.

 மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.

 பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.

 உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.




 இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.

 குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.

 உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.

***

Sunday, February 13, 2011

அழகான & ஆபத்தான சிங்கமீன்கள்(Lionfish).........




பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ரம்மியமாகும் காட்சியளிக்கும் சிவப்பு சிங்கமீன்கள்(Red Lionfish) இதுவரையும் மனிதர்களுக்கே பாதிப்பினை ஏற்படுத்துவதாக அறியப்பட்டிருந்தன. ஆனால் இந்த மீனினங்கள் மனிதர்களுக்கு மாத்திரமின்றி அவை வாழுகின்ற இயற்கை சூழற்றொகுதிக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.


ஒரு சிங்க மீனானது, முருகைக்கற் சூழற்றொகுதியொன்றில் அறிமுகமாகின்றபோது, அவை அறிமுகமாகிய ஒரு சில வாரங்களிலேயே அந்த முருகைக்கற் சூழற்றொகுதியில் வாழ்கின்ற சிறிய மீனினங்களில் 80% ஆனவை அழிவடைந்துபோவதாக அமெரிக்க நாட்டினைச் ஒரிகொன் மாநில பல்கலைக்கழக கடற்சூழலியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனில் சிங்க மீனினங்கள் உயர்ந்தபட்சத்தில் ஏனைய உயிரினங்களை வேட்டையாடும் தன்மை கொண்டவையாகும்.

மேற்கு பசுபிக் கடலின் சுதேச நீர்ப்பரப்புகளின் சூழற்றொகுதிகள் சிங்க மீனினங்களின் வாழிடமாக விளகுகின்றன, இந்த சூழற்றொகுதிகள், சிங்க மீனினங்கள் ஏனைய உயிரினங்களை தின்கின்ற நடத்தையின் காரணமாக தம்மை மாற்றிக்கொண்டுள்ளன.

இந்த மீனினங்கள் இனப்பெருக்கம் செய்து மிகவிரைவாக பல்கிப்பெருகுவதுடன், இவை வாழ்கின்ற சூழலின் வெளியே இவற்றினை உணவாக்கிக்கொள்ள எதிரிகள் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய ஆண்டுகளில், இந்த மீனினங்கள் அவற்றின் வழமையான சுதேச வாழிடங்களினை விடவும் மேலும் சில பிராந்தியங்களில் அதாவது கரீபியன், தென் அமெரிக்க முருகைக்கற் சூழற்றொகுதியில் பாரியளவில் தோன்ற ஆரம்பித்துவிட்டன.

இந்த மீன்களின் அறிமுகமானது கரீபியன் பிராந்திய முருகைக்கற் சூழற்தொகுதியில் புதுமையினை , விந்தையினை ஏற்படுத்திவிடக்கூடும். இது சுற்றுலாத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும்.

இதனால் மெக்சிக்கோ, பெலிஸ் போன்ற சில நாடுகள் சுழியோடிகளுக்கு, பிடிக்கின்ற மீன்களின் தொகைக்கேற்ப பணத்தினை வழங்கி இவற்றினை கட்டுப்படுத்த முனைகின்றன. ஆனாலும் இவை பாரியளவில் காணப்படுகின்றன என்பது சுழியோடிகளுக்கு வழங்கப்படுகின்ற பணத்தொகையிலிருந்து புலப்படுகின்றனது என்பது கவலைதரும் செய்தியாகும். பாரம்பரிய மீன்பிடிமுறைகளான வலைகளைப் பயன்படுத்தி இவற்றினை கட்டுப்படுத்தமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் சில பகுதிகளில் மிகப்பிரபலமான உணவாக இந்த மீனினங்கள் விளங்கினாலும், அலங்கார மீன் தொழிற்துறையில் மிக அதிகமான விலை கொண்ட மீனினமாகவும் இந்த மீனினங்கள் விளங்குகின்றன.

கடல் சூழற்றொகுதிகளினை பாதுகாப்பதற்காக இந்த மீனினங்களை அதிகளவில் உணவாக்கிகொள்ள மக்களுக்கு விஞ்ஞானிகள் அழைப்புவிடுகின்றனர்.


Lionfish தொடர்பான பொதுவான தகவல்கள்

ஸ்கோப்பியன் மீன் குடும்பத்தினைச் சேர்ந்த இந்த மீனினங்களின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் ~ 5-10 ஆண்டுகள் ஆகும். அத்துடன் இந்த மீனினங்கள் 15 அங்குலங்கள் வரை வளரக்கூடியவை.

இந்த மீனினங்கள் வெளிப்புறமாக ஊசி போன்ற முற்கள் 18இனைக் கொண்டுள்ளன. இவை அதிக விஷமுடையவை ஆகும்.

இந்த மீனினங்கள் தனது ஊசி போன்ற முற்களால் மனிதனை தாக்குகின்றபோது மிகக் கடுமையான வலிகள் ஏற்படுத்துவதுடன், வாந்தி, சுவாசப்பிரச்சினைகள், பாரிச வாதம் அத்துடன் அரிதாக மரணத்தினையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

***

Monday, January 24, 2011

பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியுமா ?.....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.

• டெல்மேசன் நாய்க்குட்டிகள் பிறக்கும்போது தூய வெள்ளையாகவே இருக்கும். அவை வளர்ச்சியடைந்த பின்பே அவற்றின் உடம்பில் புள்ளிகள் உருவாகின்றன.




• பூனைகளில் 100இற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

• கிவி பறவைகளுக்கு கண் பார்வை இல்லை. இதன் காரணத்தினால் இவை மோப்பசக்தியினைக் கொண்டே உணவினை தேடிக்கொள்கின்றன.

• இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது.

• ஆர்மடில்லோக்கள், ஒரு தடவையில் நான்கு குட்டிகளினை ஈன்கின்றபோது அந்த நான்கு குட்டிகளும் ஒரே பாலினத்தினை சேர்ந்தவையாகவே இருக்கும்.

• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.

• உலகில், 350இற்கும் மேற்பட்ட கிளி இனங்கள் உள்ளன.

• உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.

• தேனீக்கள் நித்திரைகொள்வதே இல்லையாம்.




• பாலூட்டிகளின் இரத்தத்தின் நிறம் சிவப்பு & பூச்சிகளின் இரத்தத்தின் நிறம் மஞ்சள் ஆகும்.

***

Monday, December 13, 2010

முத்தை உண்ணும் ஒரே உயிரினம்........

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 உலகில், பாலூட்டிகளில் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கிலமாகும்.
பிறக்கும்போது இதன் நிறை 5 தொன்களாகும். பூரண வளர்ச்சியடைந்த பின்னர் இதன் நிறை 150 தொன்களினை விடவும் அதிகமாகும்.

 நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி பறவை ஆகும். இவை வருடத்துக்கு ஒரு முட்டையினையே இடுகின்றன.

 நவரத்தினங்களில் ஒன்றான முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம் மட்டும்தான்.




 உலகில், உயிரினங்களிலேயே மிகப்பெரிய முட்டையினை இடுவது சுறா மீன் ஆகும்.




 குதிரையின் காதினை விடவும் கழுதையின் காது நீளமானதாகும்.

 வீட்டு இலையான்களின் சராசரி ஆயுட்காலம் 14 நாட்கள் ஆகும்.

 பாம்புகளின் விஷத்தில் 90% புரதம் உள்ளடங்கியுள்ளது.

 சுறா மீன்கள் 100 வருடங்களுக்கும் அதிகமாகவும் வாழக்கூடியவையாகும்.

***
Blog Widget by LinkWithin