Showing posts with label விலங்குகள். Show all posts
Showing posts with label விலங்குகள். Show all posts

Monday, June 22, 2015

ஜூன் 22 -------› உலக ஒட்டக தினம்

“பாலைவனக் கப்பல்” என்றழைக்கப்படுகின்ற ஒட்டகங்களின் சூழல் முக்கியத்துவத்தினை உணர்த்தும்முகமாக ஜூன் மாதம் 22ம் திகதி உலக ஒட்டக தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது.
ஒட்டகங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள் சில…!


ஒட்டகத்தின் ஆங்கில வார்த்தையான கேமல் (Camel) என்பது அரேபிய மொழியிலிருந்து உதிர்த்தது. அரேபிய மொழியில் “அழகு” என்பது அதன் அர்த்தமாகும். ஒட்டகம் என்றாலே பாலைவனமும் அது தனக்குள் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரும்தான் பலரது நினைவுக்கு வரும். ஒட்டகம் நீண்ட பயணத்திற்கு தயார்படுத்துவது சற்று வித்தியாசமானதாக இருக்கும். பயணத்திற்கு முன் ஒட்டகத்தில் பயணம் செய்ய இருப்பவர் ஒட்டகத்திற்கு அதிகப்படியான உப்பைக் கொடுப்பார். உப்பின் தன்மையால் அது அதிகளவான தண்ணீரைக் குடிக்கும். கிட்டத்தட்ட 80 லீற்றர் தண்ணீரை ஒட்டகம் குடித்துவிடும். ஒட்டகத்தின் கூன் தண்ணீரை சேமிப்பதில்லை. மாறாக அதில் கொழுப்பு சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் உடல் முழுவதும் வெப்பத்தை அதிகம் ஈர்க்காததாக அமைந்துள்ளது.


ஒட்டகத்திற்கு மூன்று வயிறு இருக்கிறது. முதலாவது வயிற்றில் தனக்குத் தேவையான உணவை சேகரித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் அந்த உணவை வாயில் அசைபோட்டு உட்கொள்ளும். இரண்டாவது வயிறு, உணவுகளை ஜீரணப்படுத்துவதற்கான திரவியங்களை சுரக்கும் இடமாக இருக்கின்றது. மூன்றாவது வயிற்றில் அசைபோட்ட உணவுப்பண்டங்கள் சென்று சேர்கின்றன. அங்குதான் உணவு ஜீரணிக்கப்படுகின்றது. இதில் மூன்றாவது வயிற்றைத் தவிர முதலிரண்டு வயிறுகளின் பக்கவாட்டுச் சுவர்களில் நிறைய பை போன்ற அமைப்புக்கள் காணப்படுகின்றன. இந்தப் பைகளில் தண்ணீரை ஒட்டகங்கள் சேர்த்து வைத்துக் கொள்கின்றன. எப்போது அதற்கு தண்ணீர் தேவைப்படுகிறதோ, அப்போது திறந்து சுரக்கும் நீரை எடுத்துக் கொள்ளும்.


வெகு நாட்களுக்கு ஒட்டகம் தண்ணீர் அருந்தாமல் வாழமுடியும். ஏனெனில் அவைகளின் இரத்த அணுக்களின் வடிவம் முட்டை வடிவத்திலிருக்கின்றன. டீஹைட்ரேஷன் அல்லது உடலில் தண்ணீர் இழந்த பின்னரும் இரத்த அணுக்கள் முட்டை வடிவத்தில் இருப்பதால் உடலில் ஒட்டிக்கொண்டே இருக்கும். மனித உடலில் உள்ள இரத்த அணுக்கள் வட்டமாக உள்ளதால் உடலில் தண்ணீர் குறையும்போது இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒன்றாக குவிந்துவிடும். ஒட்டகங்களின் உடலின் வெப்பம் இரவில் 34 பாகை செல்சியஸ், பகலில் 41 பாகை செல்சியஸ் ஆகும். பகலில் 41 பாகை வரை உடல் சூடான பின்னரே ஒட்டகங்களுக்கு வியர்வை வர ஆரம்பிக்கும். தங்கள் உடலில் 25 சதவீதம் தண்ணீர இழந்தாலும் அவற்றின் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால் மற்ற மிருகங்கள் 15 சதவீதம் தண்ணீரை இழந்தவுடனே அவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். பச்சையாக இருக்கின்ற செடிகளினை உண்பதினாலும், தண்ணீர் குடிப்பதினாலும் ஒட்டகங்களுக்கு ஈரப்பசை கிடைக்கின்றது. ஒரு ஒட்டகத்தில் அதிக பாரம் ஏற்றாமல், வேகமாக நடக்காமல், ஓரளவு சாதாரண வேகத்தில் நடந்து சென்றால் எந்தப் பாலைவனத்திலும் ஒட்டகம் 10 நாட்கள் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கும்.

 ***

Tuesday, August 12, 2014

ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி – உலக யானை தினம்

உலகளாவியரீதியில் யானைகளினை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக யானை தினம் கொண்டாடப்படுகின்றது.


உலகளாவியரீதியில் யானைகள் தத்தங்களுக்காகவும், ஏனைய செயற்பாடுகளுக்காகவும் கொல்லப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன, மேலும்  மனிதன் - யானை மோதல்களின் காரணமாகவும் யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளும் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.


www.facebook.com/kkloganphotography

1980ம் ஆண்டளவில் ஆபிரிக்காவில் 1.2 மில்லியன் யானைகள்  வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் தற்சமயம் அண்ணளவாக 430,000 யானைகளே வாழ்வதாக கணிப்பிடப்படப்பட்டுள்ளது.  

அந்தவகையில், யானைகள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!
  • தரைவாழ் விலங்கினங்களில் மிகப்பெரிய விலங்கினமான யானைகளில் ஆபிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்ற இரண்டு வகையினங்கள் உண்டு. ஆசிய யானைகளை விடவும் ஆபிரிக்க யானைகள் பெரியவையாகும்.
  • ஆபிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு இனங்களுக்கும் கொம்புகள் உண்டு. ஆனால் ஆசிய யானைகளில் ஆண் இனத்திற்கு மாத்திரமே கொம்பு உண்டு. யானைகள் தனது கொம்பினை நிலத்தினை தோண்டுவதற்கும், உணவினை கண்டறிவதற்கும் பயன்படுத்துகின்றன.

  • தரைவாழ் உயிரினங்களில் மிகப்பெரிய மூளையினைக் கொண்டவையாக யானைகள் விளக்குகின்றன. இதன் நிறை 5 கிலோகிராமிலும் அதிகமாகும்.
  • யானைகள் பெரும்பாலும் நின்றுகொண்டே தூங்கும் தன்மை கொண்டவையாகும். யானை தூங்கும் போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
  • விலங்கினங்களில் மிகநீண்ட கர்ப்ப காலத்தைக் கொண்ட விலங்கினம் யானை ஆகும். பெண் யானைகள் 22 மாதங்களின் பின் குட்டியினை பிரசவிக்கின்றது.
  • யானையின் தும்பிக்கையில் 40,000 இற்கும் மேற்பட்ட தசைநார்கள் உண்டு.
  • யானைகளுக்கு 24 பற்கள் உண்டு.
  • யானைகள் தெளிவான கண்பார்வையினைக் கொண்டிருக்காவிடினும், அவை மிகச்சிறந்த மோப்ப சக்தியினையும், கேட்டல் சக்தியினையும் கொண்டவையாகும்.
  • பாலூட்டிகளில் துள்ளிக் குதிக்க முடியாத ஒரே உயிரினம் யானை ஆகும்.
  • யானை ஒரே நேரத்தில் தனது தும்பிக்கையினால் 7.5 லீற்றர் நீரினை உறிஞ்சிக்கொள்ள முடியும்.
  • ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், மொசாம்பிக், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு யானை ஆகும்.

"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebookஇல் தொடர…!

***

Sunday, August 10, 2014

ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி – உலக சிங்க தினம்


உலகளாவியரீதியில் அருகிவருகின்ற உயிரனமாக IUCN அமையத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக சிங்க தினம் கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், சிங்கங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக…!

  • சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும்.
  • சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின் குதிகால்கள் தரையில் படுவதில்லை.
  • சிங்கங்கள் ஒரு நாளில் 16 – 20 மணித்தியாலங்களை தூக்கத்திலும், ஓய்விலுமே செலவிடுகின்றன.
  • சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேர பார்வையினைக் கொண்டவையாகும். இதன் காரணமாக அவை சில வேட்டையாடுதல்களை இரவு நேரத்திலேயே மேற்கொள்கின்றன.
  • ஆண் சிங்கங்களை விடவும், பெண் சிங்கங்களே பெரும்பாலான வேட்டையாடல்களை மேற்கொள்கின்றன. ஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.

  • பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள் மாத்திரமே சமூகவியலானவையாகும். சிங்கங்கள் வழமையில் குழுக்களாகவே வாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும்.  ரு குழுவில் அண்ணளவாக 30 வரையான சிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.

  • சிங்கங்கள் மணித்தியாலத்திற்கு 81 கிலோமீற்றர் (50 mph) வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.

  • சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனது காலத்தினை கழிக்கக்கூடியவையாகும்.

  • தனது உடற் பருமனுடன் ஒப்பிடுகின்றபோது மிகச்சிறிய இதயத்தினைக் கொண்டுள்ள விலங்கினம் சிங்கம் ஆகும். சிங்கத்தின் இதயமானது, அதன் உடற்பருமனில் 1% இலும் குறைந்த வகிபாகத்தினையே வகிக்கின்றது.

  • ஒரேஅமர்வில் சிங்கங்கள் 30 kg இற்கும் இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.

  • உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும்.  ஆர்மேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், , பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ  ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.

 Y உங்களுக்குத் தெரியுமா - 1972ம் ஆண்டுவரை இந்தியாவின் தேசிய விலங்கினமாக சிங்கம் விளங்கியது.

"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebookஇல் தொடர…!


***
Blog Widget by LinkWithin