உலகளாவியரீதியில் அருகிவருகின்ற உயிரனமாக IUCN அமையத்தினால் வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்முகமாக உலக சிங்க தினம் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில்,
சிங்கங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள்
உங்களுக்காக…!
- சிங்கங்களின் கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு அப்பாலும் கேட்கக்கூடியதாகும்.
- சிங்கங்கள் நடக்கின்றபோது அவற்றின் குதிகால்கள் தரையில் படுவதில்லை.
- சிங்கங்கள் ஒரு நாளில் 16 – 20 மணித்தியாலங்களை தூக்கத்திலும், ஓய்விலுமே செலவிடுகின்றன.
- சிங்கங்கள் மிகச்சிறப்பான இரவு நேர பார்வையினைக் கொண்டவையாகும். இதன் காரணமாக அவை சில வேட்டையாடுதல்களை இரவு நேரத்திலேயே மேற்கொள்கின்றன.
- ஆண் சிங்கங்களை விடவும், பெண் சிங்கங்களே பெரும்பாலான வேட்டையாடல்களை மேற்கொள்கின்றன. ஆண் சிங்கங்கள் தனது ஆட்சிபுலத்துக்குரிய பிராந்தியத்தினையும், தனது குட்டிகளினையும் பாதுகாப்பதிலேயே தனது நேரத்தினை செலவிடுகின்றது.
- பெரிய பூனை இனங்களில் சிங்கங்கள் மாத்திரமே சமூகவியலானவையாகும். சிங்கங்கள் வழமையில் குழுக்களாகவே வாழ்கின்ற இயல்பினைக் கொண்டவையாகும். ஒரு குழுவில் அண்ணளவாக 30 வரையான சிங்கங்கள் ஒன்றாகவே வாழ்கின்றன.
- சிங்கங்கள் மணித்தியாலத்திற்கு 81 கிலோமீற்றர் (50 mph) வேகத்தில் ஓடக்கூடியவையாகும்.
- சிங்கங்கள் 5-6 நாட்கள் வரையில் நீரின்றி தனது காலத்தினை கழிக்கக்கூடியவையாகும்.
- தனது உடற் பருமனுடன் ஒப்பிடுகின்றபோது மிகச்சிறிய இதயத்தினைக் கொண்டுள்ள விலங்கினம் சிங்கம் ஆகும். சிங்கத்தின் இதயமானது, அதன் உடற்பருமனில் 1% இலும் குறைந்த வகிபாகத்தினையே வகிக்கின்றது.
- ஒரேஅமர்வில் சிங்கங்கள் 30 kg இற்கும் இறைச்சியினை உட்கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாகும்.
- உலகில் மிகப்பிரபலமான தேசிய விலங்கு என்கின்ற பெருமைக்குரிய விலங்கினம் சிங்கம் ஆகும். ஆர்மேனியா, நெதர்லாந்து, பெல்ஜியம், , பல்கேரியா, லக்ஸ்சம்பேர்க், இங்கிலாந்து, எதியோப்பியா, ஈரான், கென்யா, லைபீரியா, லிபியா, மஸிடோனியா, மொராக்கோ ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு சிங்கம் ஆகும்.
"லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை Facebookஇல் தொடர…!
***
No comments:
Post a Comment