உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்.........
• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.
• டெல்மேசன் நாய்க்குட்டிகள் பிறக்கும்போது தூய வெள்ளையாகவே இருக்கும். அவை வளர்ச்சியடைந்த பின்பே அவற்றின் உடம்பில் புள்ளிகள் உருவாகின்றன.
• பூனைகளில் 100இற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.
• கிவி பறவைகளுக்கு கண் பார்வை இல்லை. இதன் காரணத்தினால் இவை மோப்பசக்தியினைக் கொண்டே உணவினை தேடிக்கொள்கின்றன.
• இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது.
• ஆர்மடில்லோக்கள், ஒரு தடவையில் நான்கு குட்டிகளினை ஈன்கின்றபோது அந்த நான்கு குட்டிகளும் ஒரே பாலினத்தினை சேர்ந்தவையாகவே இருக்கும்.
• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.
• உலகில், 350இற்கும் மேற்பட்ட கிளி இனங்கள் உள்ளன.
• உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்.
• தேனீக்கள் நித்திரைகொள்வதே இல்லையாம்.
• பாலூட்டிகளின் இரத்தத்தின் நிறம் சிவப்பு & பூச்சிகளின் இரத்தத்தின் நிறம் மஞ்சள் ஆகும்.
***
6 comments:
//• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.// Not acceptable. நாங்க ஒரு பூனை வளர்த்தோம், அதற்க்கு சர்க்கரை, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா என நாங்கள் எப்படி குடிக்கிறோமோ அப்படியே ஊற்றி பழக்கிவிட்டோம். அதற்க்கப்புறம் எப்போதாவது சர்க்கர்கரை இல்லாத பாலை ஊற்றினால் அது ஒரு முறை நாக்கை வைத்து விட்டு, சுற்றும் முற்றும் பார்த்து மியாவ்.... என்று சொல்லிவிட்டு இடைத்தைக் காலி பண்ணிவிடும். இது ஒரு பூனைக்கென்று அல்ல நாங்கள் வளர்த்த எல்ல பூனைகளுமே அப்படித்தான். சர்க்கரைச் சுவையை அவற்றால் அறிய முடியாதென்றால் அவை ஏன் இவ்வாறு செய்கின்றன?
//• இறால்களுக்கு தலையிலேயே இதயம் அமைந்துள்ளது.// அப்ப மூளை எங்கே இருக்கும்!!
//• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.// ஒரே ஒரு முட்டை என்பதைத்தான் இப்படி எழுதியிருக்கிறீர்களா!!
//• தேனீக்கள் நித்திரைகொள்வதே இல்லையாம்.// அரை லிட்டர் தேனைச் சேகரிக்க தேனீக்கள் எல்லாம் சேர்ந்து மொத்தமாக அந்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு பயனிக்கிரதாம். அதுங்க அப்படி கஷ்டப் பட்டு சேர்ப்பதை நம்மாளுங்க சுளுவா அபகரிச்சு காசு பண்ணிடறாங்க.
நண்பரே உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.....
//• பூனைகளினால் இனிப்புச் சுவையினை உணரமுடியாது.// Not acceptable. நாங்க ஒரு பூனை வளர்த்தோம், அதற்க்கு சர்க்கரை, ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா என நாங்கள் எப்படி குடிக்கிறோமோ அப்படியே ஊற்றி பழக்கிவிட்டோம். அதற்க்கப்புறம் எப்போதாவது சர்க்கர்கரை இல்லாத பாலை ஊற்றினால் அது ஒரு முறை நாக்கை வைத்து விட்டு, சுற்றும் முற்றும் பார்த்து மியாவ்.... என்று சொல்லிவிட்டு இடைத்தைக் காலி பண்ணிவிடும். இது ஒரு பூனைக்கென்று அல்ல நாங்கள் வளர்த்த எல்ல பூனைகளுமே அப்படித்தான். சர்க்கரைச் சுவையை அவற்றால் அறிய முடியாதென்றால் அவை ஏன் இவ்வாறு செய்கின்றன?
+++ ஆய்வுகளின் பிரகாரம், பூனைகளுக்கு இனிப்பு சுவை அரும்புகள் கிடையாது.
//• கிளிகள் வருடத்திற்கு 01 முட்டையினையே இடுகின்றன.// ஒரே ஒரு முட்டை என்பதைத்தான் இப்படி எழுதியிருக்கிறீர்களா!!
+++ ஆம் ...
வளர்ந்த பின்னும் டால்மேசியனுக்கு புள்ளி வரவில்லை என்றால் அது செவிட்டு நாயாகிவிட வாய்ப்பு அதிகம்
Post a Comment