Saturday, January 8, 2011
ஒரேபார்வையில் உலகக்கிண்ண கிரிக்கெட் சாதனைகள்.......
எதிர்வருகின்ற பெப்ரவரி 19ம் திகதி முதல் ஏப்ரல் 2ம் திகதி வரை இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் கூட்டாக நடைபெறுகின்ற 10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரினை முன்னிட்டு பிரசுரிக்கப்படுகின்ற சிறப்புக்கட்டுரை......
ஓட்டங்கள்
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 413/5 ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007
ஒரு அணி பெற்ற குறைந்தபட்ச ஓட்டங்கள் 36 ~ கனடா எதிர் இலங்கை, 2003
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையினை கடந்தது வெற்றிபெற்ற சந்தர்ப்பம் 313/7 ~ இலங்கை எதிர் சிம்பாப்வே 1992, நியூபிளைமொத்
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 257 ஓட்டங்கள் ~ இந்தியா எதிர் பெர்முடா, 2007
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஒரு அணி குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையில் வெற்றிகொண்ட சந்தர்ப்பம் ~ 01 ஓட்டம், அவுஸ்திரேலியா எதிர் இந்தியா(1987,1992)
உலகக்கிண்ணப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 188* ~ கரி கேர்ஸ்டன் தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 1996, ராவல்பிண்டி
உலகக்கிண்ண இறுதிப்போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் 149 ~ அடம் கில்கிரிஸ்ட்( அவுஸ்திரேலியா எதிர் இலங்கை), 2007
உலகக்கிண்ணப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்கள் ~ 318 ஓட்டங்கள்/2வது விக்கட் இணைப்பாட்டம் ( ராகுல் ராவிட் & சவ்ரவ் கங்குலி ) இந்தியா எதிர் இலங்கை ~ 1999
அணிகள்
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற அணி ~ 23, அவுஸ்திரேலியா 1999-2007
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தொடர்ச்சியாக தோல்வியுற்ற அணி ~ 18, சிம்பாப்வே 1983-1992
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக வெற்றி சதவீதத்தினைக் கொண்ட அணி ~ அவுஸ்திரேலியா 74.63% ( விளையாடிய போட்டிகள் ~ 69, வெற்றி ~ 51)
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் வெற்றிகளைப் பெற்ற அணி ~ அவுஸ்திரேலியா(51)
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் தோல்வியுற்ற அணி ~ சிம்பாப்வே(33), இலங்கை(30)
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் சாம்பியனாகிய அணி ~ அவுஸ்திரேலியா (04தடவைகள்) ~1987 ,1999,2003,2007
துடுப்பாட்டம்
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 1796 ஓட்டங்கள்
உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள், 11 இன்னிங்ஸ் ~ 2003 உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத் தொடரில்
அதிவேக சதம் பெற்ற வீரர் ~ மத்தியூ ஹெய்டன், 66 பந்துகள், அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா
அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர் ~ பிறண்டன் மெக்கலம், 20 பந்துகள், நியூசிலாந்து எதிர் கனடா
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச strike rate (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ கபில் தேவ்(இந்தியா), 115.14
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிகபட்ச சராசரியினை (குறைந்தது 20 இன்னிங்ஸ் விளையாடி) கொண்ட வீரர் ~ விவ் ரிச்சட்ஸ்(மே.தீவுகள்), 63. 31
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக சதங்களைப் பெற்ற வீரர்கள் ~ சவ்ரவ் கங்குலி, மார்க் வோ, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ~ 04 சதங்கள்
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக தடவைகள் 50+ பெற்ற வீரர் ~ சச்சின் டெண்டுல்கர் ~ 17
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக தடவைகள் டக் அவுட்(0 ஓட்டங்கள்) ஆகியவீரர்கள் ~ நாதன் அஸ்லே ( நியூசிலாந்து) & இஜாஸ் அஹமட்(பாகிஸ்தான்) ~ 05 தடவைகள்
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அதிக 06 ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங் ~30
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் ~ சவ்ரவ் கங்குலி 110 ஓட்டங்கள் (இந்தியா எதிர் இலங்கை~1999)
பந்துவீச்சு
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 71விக்கட்கள்
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 7/15 எதிர் நமீபியா
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக விக்கட்களை தொடர்ச்சியாக வீழ்த்திய வீரர் ~ லசித் மாலிங்க (இலங்கை), 4 பந்துகளில் 4 விக்கட்கள் எதிர் தென்னாபிரிக்கா
உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக விக்கட்களை வீழ்த்திய வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 26 விக்கட்கள்
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகக்குறைந்த Economy rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ அண்டி ரொபர்ட்ஸ் ( மே.தீவுகள்), 3.24
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு strike rate இனை(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 27.5
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரியினைக்(குறைந்தது 1000பந்துகள் வீசி) கொண்ட வீரர் ~ கிளேன் மெக்ராத் (அவுஸ்திரேலியா), 18.19
களத்தடுப்பு
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 24 பிடிகள்
உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 52 ஆட்டமிழப்புக்கள்
உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ முஹம்மட் கைப் ( இந்தியா), 4 பிடிகள்
உலகக்கிண்ண போட்டியொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 6 ஆட்டமிழப்புக்கள்
உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக பிடிகளைப் பெற்ற வீரர் ~ ரிக்கி பொண்டிங்(அவுஸ்திரேலியா), 11 பிடிகள்
உலகக்கிண்ண தொடரொன்றில் அதிக ஆட்டமிழப்புக்களை மேற்கொண்ட விக்கட் காப்பாளர் ~ அடம் கில்கிறிஸ்ட்(அவுஸ்திரேலியா), 12 ஆட்டமிழப்புக்கள்
***
Labels:
உலகக்கிண்ணம்,
உலகம்,
கிரிக்கெட்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையான தொகுப்பு !!!!
நண்பரே நன்றிகள்.....
Post a Comment