இந்தியாவில் அமைந்துள்ள, தாமிரபரணியின் துணை நதியான பாண தீர்த்தத்திலிருந்து 5 கிலோமீற்றருக்கு அப்பால் அதிசய மரமொன்று உள்ளதாம். இரவில் இந்த மரத்தின் இலையிலிருந்து சுரக்கும் தண்ணீர் மரத்தின் அடியில் நிற்பவரின் ஆடையினை நனைத்துவிடுகின்றதாம். இந்த மரம் மகிசவர்த்தினி மரம் என்றழைக்கப்படுகின்றது. இந்த மரத்தில் தண்ணீர் சொட்டுவதற்கு விஞ்ஞான காரணமுள்ளது. அதாவது இந்த மரம் ஒளிச்சேர்கையின்போது நீர்ச் சத்தினை உள்ளெடுத்துக்கொண்டு இரவு தன் தேவைக்கு மிகுந்த நீரை வெளியேற்றுகின்றதாம்.
***
சில சுவையான தகவல்கள் ........
☼ உயிருள்ள தாவரங்கள் எப்பொழுதும் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்குமாம்.
☼ பெரிய மரமொன்றானது நாளாந்தம் 400 கலனுக்கும் அதிகமான நீரினை வளிமண்டலத்துக்கு வெளியேற்றுகின்றதாம்.
☼ உலகத்துக்கு தேவையான 20%க்கும் அதிகமான ஒட்சிசன் வழங்கலினை அமேசன் மழைக்காடுகளே உற்பத்தி செய்கின்றனவாம்.
***
15 வருடங்களின்பின் பாகிஸ்தானுக்கு விடிவு கிடைத்தது.....
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. அதில் 2வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் 15வருடங்களின்பின் ஆஸியினை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
1995ம் ஆண்டே பாகிஸ்தான், ஆஸியினை இறுதியாக டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
3வது டெஸ்ட் – சிட்னி, நவம்பர் 30 - டிசம்பர் 4, 1995
(பாகிஸ்தான் 299 & 204; ஆஸி 257 & 172) பாகிஸ்தான் 74 ஓட்டங்களால் வெற்றி.....
ஆஸி அணியானது, பாகிஸ்தான் அணியினை 13 டெஸ்ட் போட்டிளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது. முன்னதாக இலங்கை, பங்களாதேஷ்சினை 12 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றமையே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையேயான டெஸ்ட் தொடர்கள் தொடர்பிலான என்னுடைய முன்னைய பதிவு.........
அந்தப் பதிவின் இறுதிப் பாகம்......
இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான்
(2010/11)
☼ 1வது டெஸ்ட் – லோட்ஸ் மைதானம், ஜூலை13-16,2010
ஆஸி 1வது இன்னிங்ஸ் – 253
பாகிஸ்தான் 1வது இன்னிங்ஸ் – 148
ஆஸி 2வது இன்னிங்ஸ் – 334
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ் – 289
ஆஸி 150 ஓட்டங்களால் வெற்றி
☼ 2வது டெஸ்ட் – லீட்ஸ், ஹெடிங்லே, ஜூலை 21-24,2010
ஆஸி 1வது இன்னிங்ஸ் – 88
பாகிஸ்தான் 1வது இன்னிங்ஸ் –258
ஆஸி 2வது இன்னிங்ஸ் – 349
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ் – 180/7
பாகிஸ்தான் 3 விக்கட்களால் வெற்றி
***
2 comments:
பாகிஸ்தான் அவுஸ்திரேலியா கிரிக்கட் தகவல்கள் சூப்பர்
நண்பரே நன்றிகள் ..............
Post a Comment