õ உலகளாவியரீதியில் மனிதனின் செல்லப் பிராணிகளில் நாய்களே முதலிடத்தினைப் பெறுகின்றன என்பது நாமறிந்த தகவலே....
பொதுவாக நாய்களின் நாக்குகள் பிங்க்(Pink) நிறமாகும். ஆனால் செளவ் செளவ் [Chow Chow] & ஷர் பெய் [Shar-pei] ஆகிய நாயினங்களின் நாக்குகள் கறுப்பு நிறமானவையாம்...
உலகிலுள்ள நாயினங்களில் குரைக்க முடியாத ஒரே நாயினம் வெசென்ஜி [Basenji]...
உலகில் எல்லா சீதோஷ்ண காலநிலைகளிலும் வாழக்கூடிய ஒரே உயிரினம் நாய்தான்.....
===========================================
தபால்களினை விநியோகிக்க உதவிய பூனைகள்.....
ï தபால் போக்குவரத்துக்கள் தோற்றம் பெற்ற காலகட்டத்திலும், அதன் பிற்பாடும் தபால்களினை மக்களிடையே விநியோகிக்க பல்வேறுபட்ட உயிரினங்கள்(ஒட்டகங்கள்,குதிரைகள், மான்கள்[Reindeer],நாய்கள்,புறாக்கள்) பயன்படுத்தப்பட்டன என்பது நாமறிந்ததே.
1879ம் ஆண்டு காலகட்டத்தில் பெல்ஜியத்தின், லீச்சில் தபால் பொதிகளினை கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக 37 பூனைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனவாம். இந்தச் சேவையானது நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லையாம்.
***
3 comments:
தகவல்களுக்கு நன்றி..
அரிய தகவலை அறிய தந்தமைக்கு நன்றி
நன்றிகள் நண்பர்களே ................
Post a Comment