
அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மைக்கல் ஜோர்டான் உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட நட்சத்திரமாவார். கூடைப் பந்தாட்டத்தில் இவர் வெளிப்படுத்திய திறமைகளின் காரணத்தினால் இவரின் பெயர் வரலாற்றில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளது என்பது நாமறிந்ததே.
1963 பெப்ரவரி 17ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் பிறந்த மைக்கல் ஜோர்டான் தான் விளையாடிய போட்டிகளில் 23ம் இலக்க மேலங்கியினை அணிந்தே விளையாடுவார். மைக்கல் ஜோர்டான் 23ம் இலக்க மேலங்கியினை தெரிவு செய்தமை தொடர்பில் சுவையான விடயமொன்றுள்ளது. அது யாது தெரியுமா?.......
ஆரம்ப காலகட்டத்தில், மைக்கல் ஜோர்டான் தான் கல்விகற்ற உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாட தெரிவுசெய்யப்பட்டபோது அவர் தனது மேலங்கியினுடைய இலக்கமாக தனது அபிமானத்துக்குரிய இலக்கம் 45இனை தெரிவுசெய்தார். ஆனால் தனது உயர் பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணியின் வீரரொருவரால் 45ம் இலக்கமானது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தினால் இலக்கம் 45இன் அரைவாசியினை தன் இலக்கமாக தெரிவுசெய்ய விரும்பினார். அதன்படி இலக்கம் 45இனது அரைவாசி 22.5 ஆகும். இந்த எண்ணினை முழுஎண்ணாக மாற்றி தனது மேலங்கியின் எண்ணை 23ஆக மைக்கல் ஜோர்டான் தெரிவுசெய்தார்.
இந்த 45ம் இலக்க மேலங்கியின் சொந்தக்காரர் வேறுயாருமல்ல மைக்கல் ஜோர்டானின் மூத்த சகோதரர் லரி அவர்களேதான்.
மைக்கல் ஜோர்டான் கூடைப்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெறும்வரை, தான் கல்வி கற்ற உயர் பாடசாலை, கல்லூரி, தொழில்ரீதியான கழக போட்டிகளின்போதும் அதிகமாக 23ம் இலக்க மேலங்கியினையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட கழகங்களில்[Chicago Bulls~ சிக்காக்கோ வுல்ஸ்(1984-93, 1995-98) & Washington Wizards ~வாஷிங்டன் விசாட்ஸ்(2001-2003)] பங்கேற்று தன் திறமைகளினை வெளிக்காட்டிய மைக்கல் ஜோர்டான் விளம்பரங்கள்மூலமும் அதிகம் சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு எடுத்துக்காட்டாக; மலேசியாவிலுள்ள "நைக்" தொழிற்துறை தொழிலாளர்கள் வருடாந்தம் ஒட்டுமொத்தமாக பெற்ற தொகையிலும் அதிகமாக, "நைக்" நிறுவனத்திடமிருந்து தனது அணுசரனைக்காக மைக்கல் ஜோர்டான் பணத்தினைப் பெற்றுக்கொண்டார்.
1984ல் அமெரிக்க லொஸ் ஏஞ்சல் மற்றும் 1992ல் ஸ்பெய்ன் பார்சிலோனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியில் பங்கேற்று மைக்கல் ஜோர்டான் தங்கப்பதக்கம் வென்றார்.
மைக்கல் ஜோர்டானின் கூடைப்பந்தாட்டத்தில் வெளிக்காட்டிய திறமைகள்ன் காரணத்தினால் அவரின் செல்லப்பெயர் எயார் ஜோர்டான்["Air Jordan" ] என்பதாக நிலைத்துவிட்டது.
***
No comments:
Post a Comment