Wednesday, January 20, 2010

ஒரு தசாப்த காலமாக தொடரும் தோல்விகள்

Vs



வுஸ்ரேலிய மண்ணில் நடைபெற்ற, அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரினை 3-0 என அவுஸ்ரேலிய அணி ,பாகிஸ்தான் அணியினை வெள்ளையடிப்புச் செய்து வெற்றி பெற்றுக் கொண்டது.


பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலிய அணியை டெஸ்ட் போட்டி ஒன்றிலாவது வீழ்த்தி வெற்றி பெற முடியாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பரிதாபகரமாக தவித்து வருகின்றது.

இதுவரை அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 55 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 11 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்ரேலிய அணி 27 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றி,தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது உத்தியோக டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் கராச்சியில் 1956,ஒக்டோபர்11-17 வரை நடைபெற்றது, இதில் பாகிஸ்தான் அணி 9 விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [ஆஸி 80 & 187; பாகிஸ்தான்199 & 69/1]

பாகிஸ்தான் அணி,அவுஸ்ரேலிய அணியினை டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக வெற்றி கொண்டது, சிட்னியில் 1995 நவம்பர் 30-டிசம்பர் 4 வரை நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட 3வது டெஸ்ட் போட்டியிலாகும். இதில் பாகிஸ்தான் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [பாகிஸ்தான் 299 & 204; ஆஸி 257 & 172]

கடந்த 10வருடங்களில் பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள் தொடர்பான ஒரு பார்வை ................

கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையே 15 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் வெற்றி,தோல்வியின்றி நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய 13 டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளதுடன், பாகிஸ்தான் அணி எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் 12 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்ரேலிய அணி,பாகிஸ்தான் அணியை தொடர்ச்சியாக வெற்றி பெற்று உலக சாதனையை இலங்கை அணியுடன் பகிர்ந்து கொண்டது. இலங்கை அணியானது பங்களாதேஷ் அணியினை தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாகிஸ்தான் மண்ணில் அவுஸ்ரேலிய அணி (1998/99)

1வது டெஸ்ட்(ஒக்டோபர் 1-5, 1998) – ராவல்பிண்டி- ஆஸி இன்னிங்ஸ் & 99 ஓட்டங்களால் வெற்றி (பாகிஸ்தான் 269 &145; ஆஸி513).

2வது டெஸ்ட்(ஒக்டோபர் 15-19, 1998) – பெஷாவர்- வெற்றி,தோல்வியின்றி சமநிலை (ஆஸி 599/4 d & 289/5; பாகிஸ்தான் 580/9 d).

3வது டெஸ்ட்(ஒக்டோபர் 15-19, 1998) – கராச்சி- வெற்றி,தோல்வியின்றி சமநிலை (ஆஸி 280 & 390; பாகிஸ்தான் 252&262/5).

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி (1999/2000)

1வது டெஸ்ட்( நவம்பர் 5-9, 1999) – பிரிஸ்பேர்ன்- ஆஸி 10 விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 367 &281; ஆஸி 575 &74/0).

2வது டெஸ்ட்(நவம்பர் 18-22, 1999) – ஹோவார்ட்- ஆஸி 4 விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 222 & 392; ஆஸி 246&369/6).

3வது டெஸ்ட்(நவம்பர் 26-28, 1999) – பேர்த்- ஆஸி இன்னிங்ஸ் & 20 ஓட்டங்களால் வெற்றி (பாகிஸ்தான் 155 &276; ஆஸி 451).

இலங்கை & ஐக்கிய அமீரக மண்ணில் (2002/03)

1வது டெஸ்ட்(ஒக்டோபர் 3-7, 2002) – கொழும்பு- ஆஸி 41 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 467 & 127; பாகிஸ்தான் 279&274).

2வது டெஸ்ட்(ஒக்டோபர் 11-12, 2002) – சார்ஜா- ஆஸி இன்னிங்ஸ் & 198 ஓட்டங்களால் வெற்றி (பாகிஸ்தான் 59 & 53; ஆஸி 310).

3வது டெஸ்ட்(ஒக்டோபர் 19-22, 2002) – சார்ஜா - ஆஸி இன்னிங்ஸ் & 20 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 444; பாகிஸ்தான் 221&203(f/o)).

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி (2004/05)

1வது டெஸ்ட்(டிசம்பர் 16-19, 2004) – பேர்த்- ஆஸி 491 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 381 & 361/5 d; பாகிஸ்தான் 179&72).

2வது டெஸ்ட்(டிசம்பர் 26-29, 2004) – மெல்பேர்ன்- ஆஸி 9விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 341 &163; ஆஸி 379&127/1).

3வது டெஸ்ட்(ஜனவரி 2-5, 2005) – சிட்னி- ஆஸி 9விக்கட்களால் வெற்றி (பாகிஸ்தான் 304 &325; ஆஸி 568&62/1).

அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி (2009/10)

1வது டெஸ்ட்(டிசம்பர் 26-30, 2009) – மெல்பேர்ன் - ஆஸி 170 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 454/5 d & 225/6 d; பாகிஸ்தான் 258&251).

2வது டெஸ்ட்(ஜனவரி 3-6, 2010) – சிட்னி - ஆஸி 36 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 127&381; பாகிஸ்தான் 333&127).

3வது டெஸ்ட்(ஜனவரி 14-18, 2010) – ஹோவார்ட் - ஆஸி 231 ஓட்டங்களால் வெற்றி (ஆஸி 519/8 d & 219/5 d; பாகிஸ்தான் 301&206).


***

No comments:

Blog Widget by LinkWithin