Showing posts with label அறிவியல் தகவல்கள். Show all posts
Showing posts with label அறிவியல் தகவல்கள். Show all posts

Tuesday, January 22, 2013

சுவாரஸ்சியமான அறிவியல் தகவல்கள்...!

►◄ 2ம் உலகப்போரில் ஐக்கிய அமெரிக்கா வெற்றி பெற்ற பின்னர் அதனை அமெரிக்கர்கள் ஐஸ்கிறீம் உடனே கொண்டாடினராம். 1946ம் ஆண்டு அமெரிக்கப் பிரஜை ஒருவரின் ஐஸ்கிறீம் கொள்வனவு 5 கலன்களாம்.



►◄ 1771ம் ஆண்டில் போலாந்து இராச்சியமானது, ஐரோப்பாவிலே ரஷ்சியாவினை அடுத்து மிகப் பெரிய நாடாக விளங்கியதுடன், சனத்தொகையில் பிரான்ஸ் நாட்டிற்கு அடுத்த ஸ்தானத்திலிருந்தது. ஆனால் 25 ஆண்டுகளில் போலாந்து இராச்சியமானது பல்வேறு பாகங்களாக பிரிவடைந்துவிட்டதாம்.

►◄ உலகில் சமாதான தருணங்களிலும், யுத்த தருணங்களிலும் வெவ்வேறு விதத்தில் தேசியக்கொடியினை பறக்கவிடும் ஒரே நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.  பிலிப்பைன்ஸ்  நாட்டின் தேசியக்கொடியானது நீலம் மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்டிருக்கின்றன.
சமாதான தருணங்களில் நீல நிறப்பாகமானது மேற்பாகத்திலிருக்குமாறு தேசியக்கொடி பறக்கவிடப்படும் அதேவேளை யுத்த தருணங்களில் சிவப்பு நிறப்பாகமானது மேற்பாகத்திலிருக்குமாறும் பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசியக்கொடி பறக்கவிடப்படும். 



►◄ ஒரு நாளில், பெண்ணொருவர் சராசரியாக 7000 சொற்களை பேசுகின்றாராம், ஆனால் ஆணொருவர் சராசரியாக 2000+ சொற்களையே பேசுகின்றாராம்.

►◄ உலகில் ஒரேயொரு புகையிரத நிலையத்தினைக் கொண்ட ஒரே நாடு சிங்கப்பூர் ஆகும்.

►◄ உலக நீர்ப்பரம்பலில் 46% வகிபாகத்தினை பசுபிக் சமுத்திரம் வகிக்கின்றது. மேலும், அத்திலாண்டிக் சமுத்திரம் 23.9%, இந்து சமுத்திரம் 20.3%, ஆர்ட்டிக் சமுத்திரம் 3.7% வகிபாகத்தினை வகிக்கின்றது.

►◄ பூமியின் மேற்பரப்பு 196,950,711 சதுர மைல்கள் (510,100,000 சதுர கிலோமீற்றர்கள்) ஆகும்.

►◄ சீனா நாட்டில் அண்ணளவாக 200 குடும்பப் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றதாம்.

►◄ கத்தரிக்கோலினைக் கண்டுபிடித்தவர் உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனாடோ டாவின்சி ஆவார்.





=====►=====►=====►=====►=====►=====►



முதல் 100 பணக்காரர்களின் ஆண்டு வருமானம் உலக வறுமையை ஒழிக்கப் போதுமானதாகும்….!


உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழை மக்களின் மோசமான வறுமையை ஒழிக்கத் தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என சர்வதேச தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.


கடந்த 2012ம் வருடத்தில், உலகின் முதல் 100  பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டொலருக்கும் குறைவான பணத்திலேயே வாழ்கின்றனர்.

 ***
 


Sunday, May 13, 2012

மரங்கொத்திப் பறவைகளின் அதிசயம்........



மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போம். ஒரு மனிதன் ஆணியை சுவரில் அடிக்க எவ்வளவு பலத்தைப் உபயோகிப்பானோ, அவ்வளவு பலத்தைப் மரங்கொத்திப் பறவைகள் உபயோகித்து மரத்தை துளையிடுகின்றது. மரங்கொத்திப் பறவையின் தலை, மரத்தைக் கொத்துவதேற்றாற் போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தை போல திசுக்கள் இருக்கின்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டு பாக அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக்கொள்கின்றன. மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள பலமான தசைகள் தாங்கிக்கொள்கின்றது. இரண்டு அல்லது மூன்று  நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.

மரங்கொத்திகள் துளையிடுவதற்கு பெரும்பாலும் பைன்(Pine) மரத்தையே தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் மரத்திற்கு 100 வயதிற்கு மேற்பட்டதாக இருக்கும். ஏனெனில்  100 வயதிற்கு மேற்பட்ட பைன் மரங்களுக்கு ஒரு வியாதி ஏற்படுவதினால் அவற்றின் தடிப்பான மரப்பட்டை மிருதுவாகி விடுகின்றன. விஞ்ஞானிகளால் இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

பைன் மரத்தைப் மரக்கொத்திகள் தெர்ந்தெடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. தங்கள் கூட்டை மரங்கொத்திகல் சிறு சிறு துவாரமிடுகின்றன. பைன் மரத்திலிருந்து வடியும் பிசின் அவற்றில் நிரம்பி சிறுகுளம் போலாகி விடுகின்றன. இந்தப் பிசின் குளங்கள் மரங்கொத்திப் பறவைகளின் மாபெரும் எதிரியான பாம்புகளிடமிருந்து பாதுகாப்பை அளிக்கின்றது.

Sunday, March 25, 2012

தமது உடல் நிறைக்கேற்ப வருமான வரி செலுத்துபவர்கள்....

சுவாரஸ்சியமான பொது அறிவியல் தகவல்கள் உங்களுக்காக..........


 ஆரம்ப காலங்களில், உயர்ந்த குதியினைக் கொண்ட பாதணிகள் உயர் குடி ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதாம்.


 ஐக்கிய அமெரிக்காவில் இரவல் வழங்கும் முதலாவது நூலகத்தினை 1731ம் ஆண்டு பெஞ்சமின் பிராங்ளின் ஸ்தாபித்தார்.

 கம்போடியா நாட்டின் தேசியக்கொடியானது அந்நாட்டின் புராதன ஆலயமாகவும், உலகில் மிகப்பெரிய இந்து ஆலயமாக விளங்கும் அங்கோர்வாட் ஆலயத்தின் உருவப் படத்தினைக் கொண்டுள்ளது.


 ஒரு சராசரி ஆணின் மூளையானது பெண்ணின் மூளையினைப் பெரியதாகும்.

 எமது விண்வெளியில் மிகச்சூடான கிரகம் புதன் கிரகம் என்பது நாமறிந்ததே. இதன் மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 தொழில்சார் சுமோ மல்யுத்த வீரர்கள் தமது உடல் நிறைக்கேற்பவே வருமான வரி செலுத்துகின்றனராம். சுமோ மல்யுத்தமானது ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டாகும்.


 குதிரைகளின் பற்களானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்குமாம்.

 தனது தலையினை 270 பாகைக்கு திருப்பக்கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டும்தான்.

***

Monday, March 12, 2012

ஏன் மனிதர்களினால் புல்லினை உட்கொள்ளமுடியாது?.......



கொள்கைரீதியாக, மனிதர்களால் புல்லை உண்ணமுடியும்; ஏனெனில் புல்லானது நச்சுத்தன்மையற்றதாகவும், சமைக்கக்கூடியதாகவும் உள்ளதால் ஆகும்.

ஆனால் மனிதர்களின் வயிறானது புற்கள் மற்றும் இலைகள் சமிபாடடைவதில் சிக்கலினை எதிர்நோக்குகின்றது. மறுபுறம், பசுக்கள் போன்ற விலங்குகள் புற்களை விரும்பி உண்கின்றன, ஏனெனில் பசுக்கள் போன்ற விலங்குகளின் வயிறானது புற்கள் சமிபாடடைவதற்கேற்ற நான்கு அறைகளுடன் கூடிய பிரத்தியேகமான வயிற்றினைக் கொண்டுள்ளன.



தாவரக்கலங்கள் செல்லுலோஸ் என்கின்ற இரசாயனப் பதார்த்தங்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றன. இரசாயனரீதியாக, நாம் உண்கின்ற உணவில் பெரும்பாலும் ஒத்த தன்மையைக் கொண்ட ஏராளமான காபோஹைதரேற் மூலக்கூறுகள்(குளுக்கோஸ், புருக்டோஸ் போன்றவை) உள்ளடங்கியுள்ளன.

ஆனால் செல்லுலோஸ் ஆனது ஒரேயொரு பிணைப்பினை மாத்திரம் கொண்டிருக்கின்றது, அது வித்தியாசமானதாகும், அத்துடன் ஏனைய மூலக்கூறுகளிலிருந்து நாம் சக்தியினைப் பெற்றுக்கொள்வதுபோல செல்லுலோஸ் பிணைப்பினை உடைத்து எம்மால் சக்தியினைப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், பசுக்கள் மற்றும் ஏனைய சில பாலூட்டிகளினால் புற்களை உண்ண முடியும். ஏனெனில் அவற்றின் வயிறுகளில் வாழ்கின்ற விசேடமான பக்டீரியா(இது Symbiont பக்டீரியா ஆகும்), செல்லுலோஸ் பிணைப்பினை உடைத்து சக்தியினைப் பெற்றுக்கொள்ள உதவிபுரிகின்றது. Symbiont பக்டீரியாவானது மனிதர்களின் வயிற்றில் காணப்படவில்லை என்பதனால் மனிதர்களினால் புற்களை உண்ணமுடியாது.

சமிபாடடைதல் பிரச்சினைகள் தவிர புல்லானது மென்று தின்னக்கூடிய உணவு ஆதாரமாக உள்ளது. அத்துடன் புல்லில் ஏராளமான சிலிக்கா அடங்கியுள்ளது. பற்களினை கீழே அசைக்கின்றபோது சிராய்ப்பினை விரைவாக ஏற்படுத்துகின்றது.

மேய்ச்சல் விலங்குகளானது பழுதடைந்த பற்களின் மேற்பரப்பினை மிக விரைவாக பதிலீடு செய்வதற்கு ஏற்றாற்போல் தொடர்ச்சியான வளர்ச்சியினை ஏற்றுக்கொள்கின்றது.

***

Tuesday, February 7, 2012

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....

அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம் பயன்படுத்தப்படுவது நாமறிந்ததே... '$' என்கின்ற இந்த அடையாளம் எவ்வாறு தோற்றம் பெற்றது...!!!



கைகளால் எழுதப்பட்ட பழைய அமெரிக்க - ஸ்பானிஷ் புத்தகங்களில் "பேசோ(Peso)" என்பதற்கான சுருக்கமாக 'ps' என்றே எழுதப்பட்டு வந்தது. இதிலிருந்தே அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம் தோற்றம் பெற்றதாம்.

'$' என்கின்ற இந்த அடையாளமானது முதன்முதலில் ஸ்பானிஷ்-அமெரிக்களிடையே வணிகத் தொடர்புகள் தோற்றம் பெற்ற 1770களில் ஆங்கில - அமெரிக்க கையெழுத்து ஆவணங்களில் இடம் பெற்றன. 1800களின் பிற்பாடு '$' என்கின்ற அடையாளம் அச்சேறத் தொடங்கிவிட்டது.



”டொலர்” என்கின்ற சொல்லானது ப்ளெமிஷ் அல்லது Joachimstaler என்கிற ஜெர்மன் சொல்லின் daler (taler) என்கிற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். அதாவது, ஜெர்மனிலுள்ள போஹெமியாவிலுள்ள(தற்போது இந்த இடம் செக் குடியரசில் உள்ள Jáchymov ஆகும்) ஜோசிம்ஸ்டல் வெள்ளி சுரங்கங்களிருந்து பெறப்படுகின்ற நாணயத்தைக் குறிப்பிடுவதாகும்.

ஸ்பானிஷ்-அமெரிக்க காலனிகளிலும், அமெரிக்க சுதந்திர போர் நடைபெற்ற பிரிட்டிஷ் வட அமெரிக்க காலனிகளிலும் பயன்படுத்தப்பட்ட நாணயத்திற்கு இந்த பதம் பின்னர் பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்குப் பிற்பாடு அமெரிக்க நாணயம் இந்தப் பெயரினை உள்வாங்கிக் கொண்டது.

***

Wednesday, February 1, 2012

உங்களுக்குத் தெரியுமா?.......

சுவாரஸ்சியமான பொது அறிவியல் தகவல்கள் உங்களுக்காக..........

பாலைவன போபாப் மரங்கள் தனது உடலில் 1000 லீற்றருக்கும் அதிகமான நீரினை சேமிக்கும் தன்மை கொண்டவையாகும்.



உலகில் மிகப்பெரிய பாலைவனம் சகாராப் பாலைவனமாகும் என்பது நாமறிந்ததே. 1979ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கே பனி பொழிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



1980ம் ஆண்டு வரையும், உலகில் தொலைபேசி பாவனையற்றதாக விளங்கிய ஒரே நாடு பூட்டான் மட்டும்தான்.



பூகம்பத்தின் போது அந்துப் பூச்சிகளினால் பறக்கவே முடியாது.

மனிதனின் வலது புற நுரையீரலானது இடது புற நுரையீரலினை விடவும் பெரியதாகும். ஏனெனில் வளி மற்றும் இதயத்தின் அமைவிடத்தினைக் கொண்டுள்ளமையாலாகும்.

உலகில் மிகக் குறைந்த வெப்பநிலைக் கொண்டுள்ள கடலாக ரஷ்சிய நாட்டில் அமைந்துள்ள வெண் கடலானது விளங்குகின்றது. இதன் வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் ஆகும்.

உலகில் மிகக் கூடிய வெப்பநிலைக் கொண்டுள்ள கடலாக பெர்சியன் வளைகுடாவில் அமைந்துள்ள கடலானது விளங்குகின்றது. வசந்த காலத்தில் இதன் வெப்பநிலை 35 .6 டிகிரி செல்சியஸ் ஆகும்.

***

Tuesday, September 27, 2011

பெயர் வரக் காரணம் என்ன?.... # 06



உலகில் மிகப்பெரிய சமுத்திரம் பசுபிக் சமுத்திரமாகும். பசுபிக் என இந்தச் சமுத்திரத்திற்கு பெயர் சூட்டியவர் யார் தெரியுமா?....... உலகின் முதல் நாடு காண் பயணியாகிய பேர்டினட் மகலன் ஆவான்.

போர்த்துக்கேயரான பேர்டினட் மகலன், அரச கடற்படையில் சேர்வதற்கான தனது விண்ணப்பத்தினை போர்த்துக்கேய நாட்டு அரசனாகிய இமானுவேல் நிராகரித்ததன் காரணமாக தன் நாடு மீது கொண்ட பற்றுறுதியை விலக்கிக்கொண்டு ஸ்பெய்ன் நாட்டுக்கு பயணமாகி, 1519ம் ஆண்டு செப்டம்பர் 20ம் நாள், மகலனும், அவனுடைய 270 சகாக்களும் ஸ்பெயினிலிருந்து ரிடினினாட், கொன்செப்சியன், சென் அன்ரோனியோ, விக்டோரியா, சன்ரியாகோ ஆகிய 05 சிறிய படகுகளிலில் உலகினைச் சுற்றிய தனது நாடு காண் பயணத்தினை ஆரம்பித்தான். புதிய நாடுகளைக் கண்டறியும் பல்வேறு இடர்களை தனது கடற்பயணத்தில் எதிர்கொண்டு எஞ்சிய 3 படகுகளுடன் 38 நாட்கள் தென் அமெரிக்க ஜலசந்தியைச் சுற்றிலும் பயணித்து நவம்பர் மாத இறுதிவாரத்தில், மகலன் தனது சகாக்களுடன் புதிய சமுத்திரத்தில் பிரவேசிக்கின்ற அந்த தருணத்தினை “அழகான, அமைதியான கடல்” (“Beautiful, Peaceful Ocean” )என மகலன் வர்ணிக்கின்றான். “Pacific - பசுபிக்” என்பதன் அர்த்தம் “அமைதியானது” என்பதாகும்.


பேர்டினட் மகலன்

முதல் நாடுகாண் பயணியாகிய பேர்டினட் மகலன் அவர்கள் புதிய இந்த சமுத்திரத்தினைக் கண்டுபிடித்தபோது இது பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டதால் இதற்கு “பசுபிக் - Pacific” என பெயர் சூட்டினாலும் உண்மையில், உலகில் பல கடல் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு தோற்றுவாயாக பசுபிக் சமுத்திரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பசுபிக் சமுத்திரத்தில் தனது பயணத்தினை தொடர்ந்த மகலன் 1521ம் ஆண்டு மார்ச் மாதம் தற்போது “பிலிப்பைன்ஸ்” என்றழைக்கப்படுகின்ற நாட்டினைக் கண்டுபிடித்தான். சில வாரங்களுக்குப் பின்னர் மகலன், பிலிப்பைன்ஸ் ஆதிவாசிகளுடனான சமரில் முழுமையாக காயமடைகின்றான். கடற்பயணத்தில் எஞ்சிய விக்டோரியா என்கின்ற படகில் மகலனின் 18 சகாக்கள் ஸ்பெய்ன் நாட்டினைச் சென்றடைந்து உலகினைச் சுற்றிய முதலாவது வெற்றிகரமான நாடு காண் பயணத்தினை நிறைவுசெய்துகொண்டனர்.
மகலனின் நாடு காண் கடற்பயணப் பாதையானது வாசனைத் திரவிய வர்த்தகத்தில் பொருத்தமில்லாத பயணப்பாதை நிரூபித்தாலும் பேர்டினட் மகலனின் கடற்பயணமானது ஒரு தனி நபரின் மிகச் சிறந்த சாதனையாக மதிக்கப்படுகின்றது.


பசுபிக் சமுத்திரம் தொடர்பான முக்கியமான தகவல்கள்.......
உலகில் மிகப்பெரிய சமுத்திரமாகிய பசுபிக் சமுத்திரமானது 155 மில்லியன் சதுர கிலோமீற்றர்கள்(60மில்லியன் சதுர மைல்கள்) பரப்பளவிற்கு பரந்து வியாபித்திருக்கின்றது. பசுபிக் சமுத்திரமானது, உலக மொத்த நிலப்பரப்பினை விடவும் பெரியதாகும், அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பினை விடவும் 15 மடங்கு பெரியதாகும்.

பசுபிக் சமுத்திரத்தின் சராசரி ஆழம் 4637மீற்றர்கள்(2.8மைல்) ஆகும். அத்துடன் உலகில் மிக ஆழமான இடமாகிய மரியானா ஆழி அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மரியானா ஆழியானது 10924மீற்றர்கள்(அண்ணளவாக 7மைல்கள்) ஆழமானதாகும். பசுபிக் சமுத்திரத்தின் ஆழத்தின் காரணமாக சுனாமி அலைகளானது(பூகம்பத்தின் காரணமாக ஏற்படுகின்ற பாரிய அலைகள்) மணித்தியாலத்திற்கு 750கிலோமீற்றர் வேகத்தில் கரைகளை அடைகின்றன.

பசுபிக் சமுத்திரத்தில் 17 சுதந்திர தேசங்கள் அமைந்துள்ளன. அவையாவன அவுஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாடி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நவ்ரு, நியூசிலாந்து, பலவ், பப்வுவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சமாவோ, சொலமன் தீவுகள், தாய்வான், தொங்கா, துவாலு, வனவாட்டு. அத்துடன் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவுகள் அமைந்திருப்பதும் பசுபிக் சமுத்திரத்தில்தான். மேலும், அவுஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், ஜப்பான், நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியங்களும், சிறு தீவுகளும் பசுபிக் சமுத்திரத்தில் காணப்படுகின்றன. பசுபிக் சமுத்திரத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பினை அவுஸ்திரேலியாக் கண்டமானது தன்னகத்தே கொண்டுள்ளது.


பசுபிக் சமுத்திரத்தில் 25000இற்கும் அதிகமான தீவுகள் காணப்படுகின்றன, உலகிலுள்ள ஏனைய சமுத்திரங்களில் அமைந்துள்ள தீவுகளினை ஒன்று சேர்க்கின்ற போதும் அவை பசுபிக் சமுத்திரத்திங்களில் அமைந்துள்ள தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


உலக காலநிலையில் பிரதான மாறுதல்களைக் ஏற்படுத்துகின்ற எல் நினோ, லா நினா ஆகிய காலநிலைகள் பசுபிக் சமுத்திரத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பொறுத்தே தோற்றம்பெறுகின்றன.


உலகிலுள்ள 75%மான எரிமலைகள் பசுபிக் வலயத்திலேயே அமைந்துள்ளன, இதனால் இவ்வலயமானது தீப்பிழம்பு வளையம் - Ring of Fire என அழைக்கப்படுகின்றது.


பசுபிக் சமுத்திரத்தின் பிரதான வளமாக மீன்கள் விளங்குகின்றன. 1996ம் ஆண்டு, உலகில் மீன் உற்பத்தியில் 60% ஆன வகிபாகத்தினை பசுபிக் சமுத்திரமே வழங்கியது. அத்துடன் அவுஸ்திரேலியா, பப்வுவா நியூ கினியா, நிக்கரகுவா, பனாமா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் முத்து உற்பத்தியில் விளைச்சலினைப் பெறுவதற்கு பசுபிக் சமுத்திரம் கைகொடுக்கின்றது. மேலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, ஐக்கிய அமெரிக்கா. பெரு ஆகிய நாடுகள் மசகு எண்ணெய், உயிர் வாயு ஆகிய சக்தி மூலங்களினைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதானமாக பசுபிக் சமுத்திர ஒதுக்கங்களிலேயே தங்கியுள்ளன.


பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிரதான துறைமுகங்களாக பாங்கொக்(தாய்லாந்து), கொங் கொங், லொஸ் ஏஞ்சல்(ஐ.அமெரிக்கா), மணிலா(பிலிப்பைன்ஸ்), புசான்(தென்கொரியா), சான் பிரான்சிஸ்கோ(ஐ.அமெரிக்கா), சீட்டில்(ஐ.அமெரிக்கா), ஷாங்காய்(சீனா), சிங்கப்பூர், சிட்னி(அவுஸ்திரேலியா), வெலிங்டன்( நியூசிலாந்து), யொகோஹமா(ஜப்பான்), விளாடிவொஸ்டோக்(ரஷ்யா), காவ் - சியுங்(தாய்வான்) ஆகியன விளங்குகின்றன.

***

Sunday, August 21, 2011

உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடு

சுவாரஷ்சியமான தகவல்களை பல்சுவைத் தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக…………………

 உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக பொலிவியா விளங்குகின்றது. 1825ம், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்ற பொலிவியா நாட்டில் 200 இற்கும் அதிகமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதேவேளை, 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக இத்தாலி விளங்குகின்றது. 50 இற்கும் அதிகமான அரசாங்கங்களும், 20 இற்கும் அதிகமான பிரதம மந்திரிகளையும் இத்தாலி நாடு 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்தியாவின் தேசிய விலங்கு புலி(Panthera Tigris) என்பது நாமறிந்ததே. ஆனால் 1972ம் ஆண்டுவரையும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே விளங்கியது



 உலகில் அதிக நிறை கொண்ட வீட்டுப் பூனையாக ' ஹிம்மி ~ Himmy விளங்கியதாம். இதன் நிறை 21.3 கிலோகிராம் ஆகும். ஹிம்மி 1984ம் ஆண்டு இறந்துவிட்டது.



 ஒவ்வொரு துளி கடல் நீரிலும் சராசரியாக 1 பில்லியன் தங்க அணுக்கள் உள்ளதாம்.

 எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.

***
Blog Widget by LinkWithin