Monday, March 12, 2012

ஏன் மனிதர்களினால் புல்லினை உட்கொள்ளமுடியாது?.......



கொள்கைரீதியாக, மனிதர்களால் புல்லை உண்ணமுடியும்; ஏனெனில் புல்லானது நச்சுத்தன்மையற்றதாகவும், சமைக்கக்கூடியதாகவும் உள்ளதால் ஆகும்.

ஆனால் மனிதர்களின் வயிறானது புற்கள் மற்றும் இலைகள் சமிபாடடைவதில் சிக்கலினை எதிர்நோக்குகின்றது. மறுபுறம், பசுக்கள் போன்ற விலங்குகள் புற்களை விரும்பி உண்கின்றன, ஏனெனில் பசுக்கள் போன்ற விலங்குகளின் வயிறானது புற்கள் சமிபாடடைவதற்கேற்ற நான்கு அறைகளுடன் கூடிய பிரத்தியேகமான வயிற்றினைக் கொண்டுள்ளன.



தாவரக்கலங்கள் செல்லுலோஸ் என்கின்ற இரசாயனப் பதார்த்தங்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றன. இரசாயனரீதியாக, நாம் உண்கின்ற உணவில் பெரும்பாலும் ஒத்த தன்மையைக் கொண்ட ஏராளமான காபோஹைதரேற் மூலக்கூறுகள்(குளுக்கோஸ், புருக்டோஸ் போன்றவை) உள்ளடங்கியுள்ளன.

ஆனால் செல்லுலோஸ் ஆனது ஒரேயொரு பிணைப்பினை மாத்திரம் கொண்டிருக்கின்றது, அது வித்தியாசமானதாகும், அத்துடன் ஏனைய மூலக்கூறுகளிலிருந்து நாம் சக்தியினைப் பெற்றுக்கொள்வதுபோல செல்லுலோஸ் பிணைப்பினை உடைத்து எம்மால் சக்தியினைப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், பசுக்கள் மற்றும் ஏனைய சில பாலூட்டிகளினால் புற்களை உண்ண முடியும். ஏனெனில் அவற்றின் வயிறுகளில் வாழ்கின்ற விசேடமான பக்டீரியா(இது Symbiont பக்டீரியா ஆகும்), செல்லுலோஸ் பிணைப்பினை உடைத்து சக்தியினைப் பெற்றுக்கொள்ள உதவிபுரிகின்றது. Symbiont பக்டீரியாவானது மனிதர்களின் வயிற்றில் காணப்படவில்லை என்பதனால் மனிதர்களினால் புற்களை உண்ணமுடியாது.

சமிபாடடைதல் பிரச்சினைகள் தவிர புல்லானது மென்று தின்னக்கூடிய உணவு ஆதாரமாக உள்ளது. அத்துடன் புல்லில் ஏராளமான சிலிக்கா அடங்கியுள்ளது. பற்களினை கீழே அசைக்கின்றபோது சிராய்ப்பினை விரைவாக ஏற்படுத்துகின்றது.

மேய்ச்சல் விலங்குகளானது பழுதடைந்த பற்களின் மேற்பரப்பினை மிக விரைவாக பதிலீடு செய்வதற்கு ஏற்றாற்போல் தொடர்ச்சியான வளர்ச்சியினை ஏற்றுக்கொள்கின்றது.

***

3 comments:

Dr.Dolittle said...

simple and nice

MARI The Great said...

தகவலுக்கு நன்றி நண்பா ..!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே.......

Blog Widget by LinkWithin