சுவாரஷ்சியமான தகவல்களை பல்சுவைத் தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக…………………
உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக பொலிவியா விளங்குகின்றது. 1825ம், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்ற பொலிவியா நாட்டில் 200 இற்கும் அதிகமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதேவேளை, 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக இத்தாலி விளங்குகின்றது. 50 இற்கும் அதிகமான அரசாங்கங்களும், 20 இற்கும் அதிகமான பிரதம மந்திரிகளையும் இத்தாலி நாடு 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவின் தேசிய விலங்கு புலி(Panthera Tigris) என்பது நாமறிந்ததே. ஆனால் 1972ம் ஆண்டுவரையும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே விளங்கியது
உலகில் அதிக நிறை கொண்ட வீட்டுப் பூனையாக ' ஹிம்மி ~ Himmy விளங்கியதாம். இதன் நிறை 21.3 கிலோகிராம் ஆகும். ஹிம்மி 1984ம் ஆண்டு இறந்துவிட்டது.
ஒவ்வொரு துளி கடல் நீரிலும் சராசரியாக 1 பில்லியன் தங்க அணுக்கள் உள்ளதாம்.
எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.
***
No comments:
Post a Comment