
செல்வந்தர்களே ஒரு கணமாவது எங்களை மனதில் கொள்; ஒரு வேளை உணவையாவது எமக்களிக்க முன் வாருங்கள்… பசியினால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குழந்தைகளின் சார்பில் ஓர் அன்புக்குரல்………..
ஐ.நா உணவு விவசாய நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 110கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி,பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர். குறிப்பாக ஆசியா, மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் 65கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினரும், ஆபிரிக்காவின் சகாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள நாடுகளில் 28கோடி மக்கள் தொகையினரும் பசி, பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர்.
பசி,பட்டினியின் காரணமாக வருடாந்தம் 15மில்லியன் குழந்தைகள் மரணிக்கின்றன.
பசி, பட்டினியால் வாழும் மக்கள் தொகையினர் உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
உலக மக்களில் 12 பேரில் ஒருவர் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5வயதுக்குட்பட்ட 160மில்லியன் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. [மூலம்~ ஐ.நா உணவு, விவசாய அமையம்]
நாளொன்றுக்கு சராசரியாக 1800 கலோரியினைவிடவும் குறைவான கலோரியினை உண்பவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றார்கள்..; போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில், அரைப்பங்கினர் தெற்காசியாவிலும், மூன்றிலொரு பங்கினர் உப-சகாரா நாடுகளிலும் வாழ்கின்றனர்.
உலகில், 120 கோடி மக்கள் நாளாந்தம் 1800 கலோரியினைவிடவும் குறைவாகவே உட்கொள்கின்றனர்.
உலகில் அண்ணளவாக 183மில்லியன் குழந்தைகள் தமது வயதிற்கேற்ற நிறையினைக் கொண்டிருக்கவில்லை.
உலகில், ஒவ்வொரு 6 செக்கன்களுக்கும் பசி,பட்டினியின் காரணமாக ஒருவர் இறக்கின்றார்.
உலகில் 3பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொலரினையே உழைக்கின்றனராம்.
***
3 comments:
வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....
எனது தளத்திற்கான உங்கள் வரவுக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி..
உங்கள் தொடர் ஆதரவினை எதிர்பார்க்கும் நண்பன்:
கே.கே.லோகநாதன்....
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..!
Post a Comment