Tuesday, June 29, 2010
உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"
ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், செத்தல் மிளகாயிலுள்ள "கெப்சசெய்ன்" என்கின்ற இரசாயமானது உடம்பில் ஏராளமான நன்மைபயக்கும் புரத மாற்றங்களினை ஏற்படுத்தி உடற்பருமனைக் குறைக்க உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.
ஜொங் வொன் யுன் மற்றும் அவரது குழுவினர் உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர். ஆய்வுகூட முடிவுகளின் பிரகாரம், "கெப்சசெய்ன்" இரசாயனமானது, கலோரியினை உள்ளெடுப்பதனை குறைக்கின்றது, கொழுப்பு திசுக்களினை சுருக்குகின்றது, இரத்தத்தில் கொழுப்பின் மட்டத்தினை குறைந்தளவில் பேண உதவுகின்றது. இதன்காரணமாக உடற்பருமனைக் குறைக்க உதவுகின்றது.
இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் ஆய்வுகூட எலிகள் மீது "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தியும், "கெப்சசெய்ன்" இரசாயனத்தினை செலுத்தாமலும் ஆய்வினை மேற்கொண்டனர். "கெப்சசெய்ன்" இரசாயனம் செலுத்தப்பட்ட எலிகள், அதன் உடல் நிறையில் 8 சதவீதத்தினை இழந்துள்ளதுடன், கொழுப்பில் காணப்படுகின்ற ஆகக் குறைந்தது முக்கியமான 20 புரதங்களின் அளவுகளில் மாற்றங்களை காட்டியது. இந்த புரதங்கள் கொழுப்பினை கரைப்பதற்காக பணிபுரிகின்றது.
இந்த மாற்றங்கள் மூலம் உடற்பருமனிலிருந்து போராட "கெப்சசெய்ன்" உதவுவதன் காரணத்தினால் புதிய செயற்பாடுகளுக்கு இது உந்துசக்தியாக விளங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் உடற்பருமனா என்ன முடிவெடுத்துள்ளீர்கள்???...........
***
Labels:
உடல் நலம்,
மருத்துவம்
Sunday, June 27, 2010
பறவைகள்... விந்தைகள்!
பறவைகளினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்களினைக் கொண்ட பதிவு.........
பறவைகளில் மிகப்பெரிய முட்டையிடும் பறவை தீக்கோழி ஆகும்.
பறவைகளில் தன் உடலமைப்புடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய முட்டையிடும் பறவை கிவி பறவை. கிவி பறவையின் முட்டையானது அதனது உடம்புடன் ஒப்பிடும்போது 1/3 பங்காகும்.
பறவைகளின் முட்டைகளில், தீக்கோழியின் முட்டையானது மிகக் கெட்டியான ஓட்டினைக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இதனை அவிப்பதற்கு 2 மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றதாம்.
பறவைகளில் மிகச்சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங்பேர்ட் பறவை. இதன் முட்டையின் நீளம் 0.39 அங்குலம் & நிறை 0.0132 oz
Royal Albatross' பறவைகள் அடைகாத்து அதன் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியாவதற்கு 79 நாட்கள் தேவைப்படுகின்றது.
Albatross பறவைகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவைதான் முட்டையிடுகின்றதாம்.
பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துபோன மடகாஸ்கரின் யானைப் பறவையானது 27பவுண்டுகளுக்கும் அதிகமான நிறையில் முட்டையிட்டதாம்.
முட்டையிடும் ஒரு சராசரி பெட்டைக்கோழியானது வருடாந்தம் 257 முட்டைகளினை இடுகின்றதாம்.
சாதாரணமாக ஒரு முட்டையின் நிறையில் 12சதவீத வகிபாகத்தினை முட்டையின் மேல் ஓடானது பெறுகின்றது.

அரிய தகவல்கள்,
பறவைகள்
Thursday, June 24, 2010
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பெறப்பட்ட பிரமாண்டமான வெற்றிகள்
தென்னாபிரிக்க மண்ணில் தற்சமயம் 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற G குழுவிற்கான போட்டியில் போர்த்துக்கல் நாடானது வட கொரியா அணியினை 7-0 என அபாரமாக வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட மிகப் பிரமாண்டமான வெற்றிகளில் ஒன்றாக பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பெற்றப்பட்ட பிரமாண்டமான முதல் 10வெற்றிகள்..........
#10. துருக்கி(7கோல்கள்) V தென்கொரியா(0)
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் துருக்கி அணியானது தென்கொரியா அணியினை 7–0 என வீழ்த்தியது.
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியிலேயே தென் கொரியா முதன்முதலில் பங்குபற்றியது.
#09. உருகுவே(7கோல்கள்) V ஸ்கொட்லாந்து(0)
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே அணியானது ஸ்கொட்லாந்து அணியினை 7–0 என வீழ்த்தியது.
#08. போலந்து(7கோல்கள்) V ஹெய்ட்டி(0)
1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் போலந்து அணியானது ஹெய்ட்டி அணியினை 7–0 என வீழ்த்தியது.
1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தனது ஆரம்பப் போட்டியில் இத்தாலி அணியுடான போட்டியில் முன்னிலை வகித்த ஹெய்ட்டி அணியானது இறுதியில் 3-1 என தோல்வியடைந்தமை நினைவுகூரத்தக்க விடயமாகும்.
#07. போர்த்துக்கல்(7கோல்கள்) V வட கொரியா(0)
தற்சமயம் தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவருகின்ற 19வது உலகக் கிண்ணத் தொடரில் (2010) போர்த்துக்கல் அணியானது வட கொரியா அணியினை 7–0 என வீழ்த்தியது.
தனது ஆரம்ப குழுப் போட்டியில் பிரேசில் அணியிடம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் போராடி தோற்ற வடகொரியா, போர்த்துக்கல் அணிக்கு சவாலாக விளங்குமென்று அனைவராலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இடைவேளைக்கு முன்னர் 1 கோலினை மாத்திரமே பெற்ற போர்த்துக்கல் அணி இடைவேளைக்கு பின்னர் 6 கோல்களினை அபாரமாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரமாண்டமான வெற்றி பெறப்பட்ட இந்தப் போட்டியில் மாத்திரமே எந்தவொரு வீரரும் ஹெட் - ரிக் கோல்களினைப் பெறவில்லை குறிப்பிடத்தக்கதாகும்.
#06. சுவீடன்(8கோல்கள்) V கியூபா(0)
1938ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் சுவீடன் அணியானது கியூபா அணியினை 8–0 என வீழ்த்தியது.
#05. உருகுவே(8கோல்கள்) V பொலிவியா(0)
1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உருகுவே அணியானது பொலிவியா அணியினை 8–0 என வீழ்த்தியது.
#04. ஜேர்மனி(8கோல்கள்) V சவுதி அரேபியா(0)
2002ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஜேர்மனி அணியானது சவுதி அரேபியா அணியினை 8–0 என வீழ்த்தியது
#03. ஹங்கேரி(9கோல்கள்) V தென்கொரியா(0)
1954ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஹங்கேரி அணியானது தென்கொரியா அணியினை 9–0 என வீழ்த்தியது.
தென் கொரியா 7-0 என இதற்கு முந்தைய தனது போட்டியில், துருக்கி அணியிடம் தோல்வியினை தழுவியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
#02. யுகோஸ்லாவியா(9கோல்கள்) V சயர்(0)
1974ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் யுகோஸ்லாவியா அணியானது சயர் [தற்சமயம் கொங்கோ ஜனநாயக குடியரசு] அணியினை 9–0 என வீழ்த்தியது.
இந்த உலகக் கிண்ணமே சயர் அணியின் முதலாவதும் இறுதியுமான உலகக் கிண்ணமாகும்.
#01. ஹங்கேரி(10கோல்கள்) V எல் சல்வடோர்(1)
1982ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஹங்கேரி அணியானது எல் சல்வடோர் அணியினை 10–1 என வீழ்த்தியமை உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் மிகச் சிறந்த அதிக கோல்களினால் பெறப்பட்ட வெற்றியாக கருதப்படுகின்றது.
இங்கே சுவாரஷ்சிய விடயமென்னவென்றால் முதல் சுற்றில் ஹங்கேரி அணியானது, பெல்ஜியம் அணியுடனான இறுதி குழுப்போட்டியினை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டதனால் ஹங்கேரி அணியானது முதல் சுற்றுடன் வெளியேறியது.
***
Labels:
உதைபந்தாட்டம்,
உலகக் கிண்ணம்
Tuesday, June 22, 2010
ஒற்றை இலக்க ஓட்டத்தினை மாத்திரம் கொடுத்து சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றவர்கள்
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் கால்பந்தாட்டம் தொடர்பிலான செய்திகளே விளையாட்டு ரசிகர்களை ஆக்கிரமித்துள்ளன. அந்தவகையில் ஒருமாறுதலாக கிரிக்கெட் ரசிகர்களுக்காக நீண்ட நாட்களுக்குப் பின்னர் கிரிக்கெட் தொடர்பான பதிவு என்னிடமிருந்து....
இலங்கையில் தற்சமயம் நடைபெற்றுவருகின்ற ஆசியகிண்ண கிரிக்கெட் சுற்றுதொடரில் கடந்த 16ம்திகதி நடைபெற்ற இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணியின் விரேந்தர் சேவாக் 6ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கட்களை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தார். இந்த பந்துவீச்சுப்பெறுதியானது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒற்றை இலக்க ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4விக்கட்களைப் பதம்பார்த்த 2வது சிறப்பு பெறுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில் ஒற்றை இலக்க ஓட்டத்தினை மாத்திரம் கொடுத்து சிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு....
கெட்னி வோல்ஸ் (மே.தீவுகள் Vs இலங்கை), சார்ஜா, 4.3 ஓவர்கள் - 3 ஓட்டமற்ற ஓவர்கள் - 1 ஓட்டம் - 5 விக்கட்கள் , 1986/87
சுனில் ஜோசி (இந்தியா Vs தென்னாபிரிக்கா), நைரோபி, 10-6-6-5, 1999/00
டானியல் விற்றோரி (நியூசிலாந்து Vs பங்களாதேஷ்), குயின்ஸ்டவுன், 6-2-7-5, 2007/08
முத்தையா முரளிதரன் (இலங்கை Vs நியூசிலாந்து), சார்ஜா, 10-3-9-5, 2001/02
பில் சிம்மன்ஸ் (மே.தீவுகள் Vs பாகிஸ்தான்) , சிட்னி , 10 – 8 – 3 – 4 ,1992/93
விரேந்தர் சேவாக் (இந்தியா Vs பங்களாதேஷ்), தம்புள்ளை, 2.5 – 0 - 6 -4, 2010
யுவராஜ் சிங் (இந்தியா Vs நமீபியா) ,பீற்றர்மட்ரிஸ்பேர்க், 4.3 – 2 - 6 – 4, 2002/03
கிறிஸ் ஹரீஸ் (நியூசிலாந்து Vs ஸ்கொட்லாந்து) ,எடின்பேர்க், 3.1-0-7-4, 1999
டரன் லீமன் (அவுஸ்திரேலியா Vs சிம்பாப்வே) ,ஹராரே, 4.3-1-7-4, 2004
கிறிஸ் ஓல்ட் (கனடா Vs இங்கிலாந்து), மன்ஷ்செஸ்டர், 10-5-8-4, 1979
கிளென் மக்ராத் (அவுஸ்ரேலியா Vs இந்தியா), சிட்னி, 10-4-8-4, 1999/00
டெவோன் ஸ்மித் (மே.தீவுகள் Vs நெதர்லாந்து), டப்ளின், 6-1-8-4, 2007
ஹீத் ஸ்ரிக் (சிம்பாப்வே Vs மே.தீவுகள்), சிட்னி, 8-4-8-4, 2000/01
அப்துல் காதிர் (பாகிஸ்தான் Vs நியூசிலாந்து), சார்ஜா, 10-4-9-4, 1985/86

Sunday, June 20, 2010
உலகில் மிகப்பெரிய பூ
உலகில் மிகப்பெரிய பூவாக ரப்லீசியா விளங்குகின்றது. ரப்லீசியாவானது 5 இதழ்களைக் கொண்ட பூவாகும். இந்த பூவின் விட்டமானது 106 சென்ரிமீற்றரிலும் [3அடி] அதிகமாகும். அத்துடன் இந்த பூவின் நிறையானது 10கிலோவிலும் அதிகமாகும். இப்பூவின் நடுவிலுள்ள கிண்ணம் போன்ற பகுதியில் 10லீட்டர் தண்ணீர் ஊற்றலாம்.
செடியிலோ, மரத்திலோ இந்தப் பூ பூப்பதில்லை.இதொரு ஒட்டுண்ணி. இந்தப் பூ முழுமையாக வளர்ச்சியடைந்து மலர்வதற்கு ஒரு மாதமாகும். பின்னர் இந்தப் பூவானது 5-7 வரையான குறுகிய நாட்களையே வாழ்நாளாகக் கொண்டதாகும்.
ரப்லீசியாவானது இந்தோனேசியாவின் தீவுகளான சுமாத்திரா, மற்றும் வொர்னியோ தீவுகளின் மழைக்காடுகளில் சுதேச மலராக காணப்படுகின்றது.
இந்தப் பூவினைக் கண்டுபிடித்து வெளியுலகத்துக்கு தெரிவித்தவர் இங்கிலாந்தினைச் சேர்ந்த சேர் ஸ்டம்போர்ட் ரப்ல்ஸ் ஆவார். பல ஆசிய நாடுகள் இங்கிலாந்தின் ஆட்சியின் கீழிருந்தபோது, சேர் ஸ்டம்போர்ட் ரப்ல்ஸ் இந்தோனேசியாக் காடுகளுக்கு சென்றபோது இந்தபூவினை கண்டுபிடிதார். இதனால் இப்பூ அவரது பெயரால் "ரப்லீசியா" என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
உலகில் மிகப்பெரிய பூவாகிய இதன் இன்னுமொரு சிறப்பம்சம் யாதெனில்; இந்த தாவரமானது உலகில் மிகவும் சகிக்க முடியாத வாசனையுடையதொன்றாக கருதப்படுகின்றது.
+++++.........++++++++...................+++++++++++++.....................
இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்கள்.........
நாளை 21ம்திகதி தனது 2வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் "ஜயபிரதா" செல்லத்துக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........
பத்திரிகையில் வெளியான எங்கள் மருமகளின் பிறந்தநாள் வாழ்த்து......

ஏனெனில் இந்த பூவானது பழுதடைந்த இறைச்சியின் மணத்தினை போன்றதான வாசனையினை வெளிப்படுத்துகின்றதாம்.
+++++.........++++++++...................+++++++++++++.....................
இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்கள்.........
நாளை 21ம்திகதி தனது 2வது பிறந்த நாளைக் கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் "ஜயபிரதா" செல்லத்துக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் 21ம் திகதி உலக இசை தினமாகும். இசைபோல உலகமெங்கும் நின் புகழ் பரவ வாழ்த்துக்களை அன்பு மாமா தெரிவித்துக்கொள்கின்றேன்.........
Happy Birthday Wishes………….
பத்திரிகையில் வெளியான எங்கள் மருமகளின் பிறந்தநாள் வாழ்த்து......
***
Labels:
உலகம்,
பிறந்த நாள்,
பூ,
மிகப்பெரியவை
Sunday, June 13, 2010
“O” என்ற பெயரில் ஒரு இடமா?
· ரோமப் பேரரசர் கலிகுலா தனது குதிரையினை செனட்டராக நியமித்தானாம்.
· சீனா நாட்டில் உள்ள தேநீர்களில் ஒரு வகை வெண் தேநீர் ஆகும். வெண் தேநீர் என்பது யாதெனில் சாதாரணமாக சூடாக்கப்பட்ட நீரினையே குறிக்கும்.
· பற்தூரிகையானது முதன்முதலில் 1498ம் ஆண்டு சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
· உலகில் அதிக எண்ணிக்கையான மக்கள் பேசுகின்ற மொழி யாதெனில் சீனாவின் மண்டேரியன் மொழி ஆகும். எனினும் ஆங்கில மொழி அதிகமானவர்கள் பேசுகின்ற நாடு யாதெனில் அது அமெரிக்காதான். சீனா இந்த வரிசையில் பின்நிலையிலேயே உள்ளது.
· நீங்கள் அதிகமாக கரட்டினை சாப்பிடும் போது தற்காலிகமாக செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைவீர்கள்.
· நீல நிறமும், வெள்ளை நிறமும் தான் உலகில் பொதுவான பாடசாலை நிறங்களாகும்.
· உலகில் 2பில்லியன் மக்களுக்கு ஒருவரே 116 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுவரை உயிருடன் வாழ்கின்றனராம்.
· ஜப்பான் நாட்டிலுள்ள ஒரு இடமானது “ O” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றது.
· பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈபிள் கோபுரமானது 2,500,000 ஆணிகளைக் கொண்டுள்ளது.

ஆச்சரியத் தகவல்கள்,
பொது அறிவு
Wednesday, June 9, 2010
சாம்பியன் நாடானது எந்தவிதமான கோல்களினையும் பெறமுடியாமல் வெளியேறியதா??? .......
எதிர்வருகின்ற 11ம் திகதி வெள்ளிக்கிழமை, உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் தென்னாபிரிக்க மண்ணில் அரங்கேற காத்திருக்கின்றன என்பது நீங்கள் அறிந்ததே. அந்தவகையில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துடன் தொடர்புடைய சில சுவாரஷ்சியமான தகவல்கள் உங்களுக்காக இதோ.........
• உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் முதன்முதலாக விளையாடிய நாடுகள் ~ மெக்சிக்கோ Vs பிரான்ஸ் – மொன்ரிவிடோ, உருகுவே, 13/07/1930
• உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் பங்குபற்றிய முதல் ஆசிய நாடு ~ டச்சு கிழக்கிந்தியா [தற்சமயம் இந்தோனேசியா] – 1938
• உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் காலிறுதி ஆட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட நாடுகளில் மிகச் சிறிய நாடு[பரப்பளவில்] ~ வட அயர்லாந்து – 1958 உலகக் கிண்ணம்
• உலகக் கிண்ணத்தினை இரண்டு தடவைகள் பெற்றுக்கொடுத்த ஒரே பயிற்சியாளர் ~ விற்றோரியோ போஸ்சோ – இத்தாலி அணிக்கு , 1934 & 1938
• தான் பயிற்றுவித்த அணிகளை அரையிறுதி ஆட்டங்களுக்கு இரண்டு வெவ்வேறு நாடுகளை முன்னேறச் செய்த பயிற்சியாளர் ~ டச்சு பயிற்றுனர் குஸ் ஹிட்டின்ங் – 1998ம் ஆண்டு நெதர்லாந்து அணி, & 2002ம் ஆண்டு தென்கொரிய அணி
• தனது கண்டத்திற்கு வெளியே உலகக் கிண்ணத்தினை வெற்றி கொண்ட ஒரே நாடு ~ பிரேசில் – 1958[சுவீடன் – ஐரோப்பா கண்டம்] & 2002[கொரியா/ஜப்பான் - ஆசியா கண்டம்]
• உலகக் கிண்ண போட்டிகளின்போது அணிகள் குழுக்களாக வகைப்படுத்தப்படும்.
அந்தவகையில் தமது குழு போட்டிகளில் எதிர்மறை கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே நாடு ~ கமரூன் [1990 உலகக் கிண்ணத்தில் , குழு "B" யில் (-2) கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது]
• உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட நாடானது, உலகக் கிண்ண தொடரொன்றில் எந்தவிதமான கோல்களினையும் அடிக்காமல் வெளியேறிய ஒரே நாடு ~ பிரான்ஸ், 2002 உலகக் கிண்ணத்தில் தனது 3 போட்டிகளில் எந்த கோல்களையும் பெறமுடியாமல் முதல்சுற்றுடன் பரிதாபகரமாக வெளியேறியது.
***
உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இவைதான்
*
*
Labels:
உதைபந்தாட்டம்,
உலகக் கிண்ணம்
Monday, June 7, 2010
Saturday, June 5, 2010
வலையுலகில் ஒரு வருடம்...
ஆம்.... இன்றைய தினத்துடன், நான் வலையுலகில் தடம்பதித்து வெற்றிகரமாக ஓராண்டு பூர்த்தியடைகின்றது. இந்த ஒரு வருட காலத்தில் வலையுலகில் என்னுடைய வலைப்பூவுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த/அளித்துவருகின்ற பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், பத்திரிகைகள், இணையங்கள், சஞ்சிகைகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். தொடர்ந்தும் எனக்கு உங்கள் ஆதரவினையும், ஊக்கத்தினையும் வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.
என் எழுத்துப்பணிக்கு வாய்ப்புக்கள் வழங்கக்கூடிய/வழங்கி ஊக்கவிக்க விரும்புகின்ற உலகளாவிய தமிழ் பத்திரிகை நண்பர்கள் தங்கள் கருத்துக்களினை என்னிடம் பகிர்ந்துகொள்ள kklogan2@gmail.com என்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
***+++****++++*****+++++******
பிறந்த நாளாம்........ பிறந்த நாள்...........
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் பதிவர் மற்றும் வெற்றி FM முகாமையாளர் , அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி. லோஷன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்களினை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
Happy Birthday Wishes ……………..
*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
***
Tuesday, June 1, 2010
உலகக் கிண்ணம் வெல்வது யார்? ஒரு Numerology ஆய்வு
இந்த மாதம் 11ம் திகதி ஆபிரிக்க கண்டத்தில்[தென்னாபிரிக்கா] முதல்தடவையாக நடைபெறுகின்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியில் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொள்ளக்கூடிய நாடு எதுவாக இருக்கும்? இதற்கு விடை பகிர்வது கடினம்தான், ஆனாலும் இந்தப் பதிவானது ஒரு வித்தியாசமான முறைமையில் இலக்கமுறைமைகளைக் கொண்டு ஆய்வுசெய்கின்றது.
5 முறை உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட நாடு பிரேசில்...........
2002ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1994
1994ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1970
மொத்தம் = 1994 + 1970 = 3964
மொத்தத்திலிருந்து [3964] பிரேசில் இறுதியாக உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டினை கழித்தால்[2002] = 3964 – 2002 = 1962
ஆம்................ 1962ம் ஆண்டு பிரேசில் நாடே சாம்பியனாகியது.
ஆர்ஜென்ரீனா
இறுதியாக உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1978
1978ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1986
மொத்தம் = 1994 + 1970 = 3964
ஜேர்மனி
இறுதியாக உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1990
1990ம் ஆண்டுக்கு முன்னர் உலகக் கிண்ணத்தினை வெற்றிகொண்ட ஆண்டு ~ 1974
மொத்தம் = 1990 + 1974 = 3964
மொத்தத்திலிருந்து [3964] தற்சமயம் உலகக் கிண்ணம் நடைபெறுகின்ற ஆண்டினை கழித்தால்[2010] = 3964 – 2010 = 1954
ஆம்................ 1954ம் ஆண்டு ஜேர்மனி நாடே சாம்பியனாகியது.
மேற்கூறிய இலக்கமுறைமைகளினை கொண்டு ஆய்வு செய்கின்றபோது 2010ம் ஆண்டு நடைபெறுகின்ற 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் சுற்றுப்போட்டியில் ஜேர்மனி நாடு சாம்பியன் பட்டம் பெறுமா?
வெற்றிக்கொடி கட்டுமா ஜேர்மனி
ஆம்..... ஒரு மாதம் பொறுமையாக இருந்து பார்ப்போம்.
ஜேர்மனி நாடு சாம்பியன் பட்டம் வென்றால் எப்படி நம்ம ஆய்வு சூப்பர் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகின்றது
[அப்படி ஜேர்மனி சாம்பியனாகவில்லையாயின்............... என்னை நீங்கள் ??? ....... சொல்லிப்புட்டேன்........... அட எங்க போறன் என்றா பார்க்கின்றீர்கள்??? தென்னாபிரிக்காவுக்குதான்.... ]
நம்ம கையில என்ன இருக்கின்றது........... திறமையும், அதிர்ஷ்ட்டமும் இருக்கின்ற நாடு கிண்ணம் வெல்லும் என்று நீங்கள் சொல்வதும் என் காதில் விழுகின்றது.......
***
Labels:
Numerology,
உதைபந்தாட்டம்,
உலகக் கிண்ணம்
Subscribe to:
Posts (Atom)