Monday, April 12, 2010
விமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்
கடந்த 10ம்திகதி ரஷ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றில் போலந்து நாட்டின் ஜனாதிபதி லெச் கக்ஸின்ஸ்கி உட்பட மேலும் 95 பேர் பலியாகினர். அந்தவகையில் விமான விபத்துக்களில் பலியான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் தொடர்பான விபரங்கள்.....
1) அர்விட் லிண்ட்மன் - சுவீடன் நாட்டின் பிரதமர் [1906-11 & 1928-1930 வரை பதவி வகித்தவர்] - 1936ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
2) வல்டிசிலாவ் சிகோஸ்கி- போலந்து நாட்டின் பிரதமர் - 1943ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
3) ரமொன் மக்சசெய்- பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி -1957ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
4) வர்திலெமி வொகண்டா - மத்திய ஆபிரிக்க குடியரசின் 1வது பிரதமர் - 1959ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
5) அப்துல் சலாம் அரிப் - ஈராக் நாட்டின் ஜனாதிபதி - 1966ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.
6) ரெனி வெரியன்ரோஷ் - பொலிவியா நாட்டின் ஜனாதிபதி - 1969ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.
7) ஜொய்ல் ரகோடொமலாலா- மடகஸ்கார் நாட்டின் பிரதமர் - 1976ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
8) சிமல் வைஜிடிக் - யுகோஸ்லாவியா நாட்டின் பிரதமர் - 1977ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
9) அமேட் ஓல்ட் வசீவ் - மொரிரேனியா நாட்டின் பிரதமர் - 1979ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
10) பிரான்ஸ்சிஸ்கோ சா கர்னிரோ- போர்த்துக்கல் நாட்டின் பிரதமர் - 1980ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
11) ஜய்மி ரொல்டோஸ் எகுலெரா- ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி - 1981ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
12) சமோரா மாகெல்- மொசாம்பிக் நாட்டின் ஜனாதிபதி -1986ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
13) முஹமட் சியா-உல்-ஹக்-பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி - 1988ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
14) சைபிரியென் ரர்யமிரா- புருண்டி நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
15) ஜுவெனல் ஹவிரிமனா- ருவாண்டா நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் கொலைசெய்யப்பட்டார்.
16) வொரிஸ் ரஜ்கோவ்ஸ்கி- மசிடோனியா நாட்டின் ஜனாதிபதி - 2004ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
17) ஜோன் கரங்- சூடான் நாட்டின் உப ஜனாதிபதி - 2005ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
18) லெச் கக்ஸின்ஸ்கி - போலந்து நாட்டின் ஜனாதிபதி - 2010ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.
குறிப்புக்கள் -
முஹம்மட் பின் லேடன் [ எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கின்றதா? ஆம்... 9/11 தாக்குதல் சூத்திரதாரியான ஒசாமா பின் லேடனின் தந்தையார் ] இறந்ததும் விமானவிபத்தில் தானாம். {1967ல் சவூதி அரேபியாவில்}
கென்சி குரன்ஜே - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த தலைவராக விளங்கியவர், கிரிக்கெட் பந்தய குற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆயுட்கால தடைக்குள்ளாகியவர். இவர் இறந்ததும் விமானவிபத்தில் தான். {2002ல் தென்னாபிரிக்காவில்}
******^^^^^^^**********^^^^^^^^**********^^^^
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் இனிய விகிர்த்தி சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும், மலரப்போகும் விகிர்த்தி புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
விகிர்த்தி ~ கீர்த்தி பெற்றுதருவாயாக!!! ..............
***
Labels:
அரசியல் தலைவர்கள்,
உலகம்,
சித்திரைப்புத்தாண்டு,
விபத்து,
விமானம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment