Friday, April 2, 2010
இந்திய தேசியகீதம் தோன்றியது எவ்வாறு?...
ஜன கண மன தேசிய கீதமாக இயற்றப்பட்டது என்பதை அனேகர் நம்புகிறார்கள். சமீபத்திய மற்றும் முந்தைய முரண்பாடான காரியங்களையும், வழக்குகளையும் கேள்விப்பட்டிருக்கிறவர்கள் இரவீந்திரநாத் தாகூர் டில்லி தர்பாரில் ஜோர்ஜ் மன்னனின் முடிசூட்டு விழாவில் பாடுவதற்காக ஜன கண மன இயற்றப்பட்டது என்று நம்புகிறார்கள். இருசாராருடைய நம்பிக்கையும் தவறாகும்.
ஜோர்ஜ் மன்ன்னும், ராணி மேரியும் 1911இல் முடிசூடிய பின்னர் இந்தியாவுக்கு வந்தனர். வைஸ்ராய் ஹார்டிங் ஆங்கிலேயர்களின் இந்திய தலைநகரமான கொல்கத்தாவில் ஒரு தர்பார் ஏற்பாடு செய்யாமல், மொகாலய தலைநகரமான டில்லியில் தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார்.
டில்லியில் முடிசூட்டும் விழாவின் தர்பார் நடக்கும் போது, காங்கிரஸ் கட்சியினர் 28வது கூட்ட்த்தை கொல்கத்தாவில் நடத்த தீர்மானித்திருந்தனர். இது முரட்டாட்டமான செயலாக இல்லாமல் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டான செயலாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் ஆங்கிலேய அரசாட்சியில் மேலான பிரதிநிதித்துவத்தையும், ஆளுகையின் நிறுவனங்களையும் கோரியது. இந்தக் கூட்டம் 26ம் திகதி தொடங்குவதாக இருந்தது. இரண்டாவது நாள் மன்னனை வரவேற்பதற்காக ஒதுக்கப்பட்டது. இதற்கு அவர்களுக்கு பொருத்தமான பாடல் தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் தாகூரிடம் சென்று கேட்டனர். தாகூர், ராஜ்ஜியத்தின் மிக உண்மையான பிரஜையாக இருந்த போதிலும், மன்னனைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக ஊக்கம் அளிக்கவில்லை. வங்காளத்தைப் பிரித்த பின்னர் முரட்டாட்டத்தின் ஆவி அவரையும் தூண்டியது. அவர் வளைந்து கொடுக்கிற கவிஞர் அல்ல. ஆகவே அவர் சர்வ வல்லமையுள்ளவரை தியானம் செய்து ஜன கண மன என்ற பாடலை எழுதினார். இதை எழுதிய பின் மிகவும் சந்தோசமடைந்த தாகூர் அவருடைய சீடர்களில் ஒருவரிடம் : நான் ஒரு கவிதையை எழுதியிருக்கிறேன். அது கடவுளுக்காக எழுதப்பட்டது. அதை காங்கிரஸ் கட்சியினருக்கு கொடுங்கள். அது அவர்களைப் பிரியப்படுத்தும். அது மன்னருக்காக எழுதப்பட்டது என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று கூறினார்.
தாகூரின் நண்பரும் கவிஞருமான W.B. ஈட்ஸ் என்பவர் இதை அமெரிக்காவிலுள்ள கிரகெரி என்ற பெண்மணிக்கு எழுதிய மடலில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த சீடன் ஈட்ஸிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். ஜன கண மன என்ற பாடல் டில்லியில் நடந்த முடிசூட்டும் விழாவில் அல்ல, காங்கிரஸ் கட்சியினரின் கூட்டத்தில் பாடப்பட்டது. மறு நாள் “ விசேடமாக மன்னனை கெளரவப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட பாடல்” என்று தாகூரின் கவிதையைக் குறித்து செய்தித்தாளில் பிரசுரமானது.
அதன்பின்னர் 1919ல் அவர் தற்போதைய ஆந்திர பிரதேசத்திலுள்ள மதனபள்ளியில் உள்ள தியோசோபிகல் கல்லூரிக்கு சென்றபோது, அதே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இரவீந்திரநாத் இசை அமைத்தார். ஜேம்ஸ் H. கசின்ஸ் என்பவரால் தியோசோபிகல் கல்லூரி நடத்தப்பட்டுக்கொண்டிருந்த்தது. அவரின் மனைவி இசை அமைப்பதில் உதவி செய்தார். இன்னும் அந்த இசை பின்பற்றப்பட்டுக்கொண்டு வருகின்றது.
காங்கிரஸ் “ ஸ்வராஜ் ” கேட்ட பின்னரும் இந்தப் பாடல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் “ வந்தே மாதரத்துடன்” பாடப்பட்டது. வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடுவதை ஆங்கிலேயர்கள் எதிர்த்தனர். ஏனெனில் அவர்கள் அதை ஆங்கிலேய ஆட்சிக்கு விரோதமாக பொங்கி எழ தூண்டுவதாக உள்ளது என்று கருதினர். ஆனால் ஜன கண மன பாடல் பாடப்படுவதை அவர்கள் எதிர்க்கவில்லை.
ஜனவரி24,1950ல் சட்டசபையினர் ஜன கண மன என்ற பாடலை தேசிய கீதமாக்கினர். தாகூர் இரண்டு தேசங்களுக்கு தேசியகீதம் எழுதியுள்ளார். பங்களாதேஷ் தேசமும் “அமர் ஷோனார் பங்ளா” என்ற அவருடைய பாடலை தேசியகீதமாக்கியுள்ளது.
[ நன்றி - “த வீக்”]
***
Labels:
ஆங்கிலேயர்,
இந்தியா,
தாகூர்,
தேசியகீதம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இதுவரை ஒரு இந்தியனான நான் அரியா தகவல்
சிறிய வெட்கத்துடன்...........
செந்தில்குமார்.அ.வெ நன்றி...
நண்பரே உங்கள் கருத்துரைக்கு என் அன்பான நன்றிகள்...
Post a Comment