
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ம் திகதி உலக நீர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த உலகில் மக்கள் உயிர் வாழ்வதற்கு தூய நீர் முக்கியமானதாகும். “உணவின்றி ஒரு மனிதன் சில வாரங்கள் உயிர் வாழமுடியும், ஆனால் நீரின்றி ஒரு மனிதன் சில நாட்களே உயிர் வாழமுடியும்.”
உலகில் அதிகளவான மக்கள் தொகையினர் தமது நீர் தேவைகளுக்காக ஆற்று மூலங்களிலேயே தங்கியுள்ளனர். பல்வேறு மாசுபடுத்தல்கள் காரணமாக உலகிலுள்ள பிரதானமான ஆற்று மூலங்கள் பாரியளவான மாறுதல்களினை வெளிக்காட்டி நிற்கின்றன.
பூமியின் 70%மான பகுதியானது நீரினால் சூழப்பட்டுள்ளது.
நீர் மாசுபடுத்தல்கள் காரணமாக, அபிவிருத்தி அடைந்து வருகின்ற உலகத்திலுள்ள கிராமப்புற மக்களில் 60%-70% ஆன தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் நீர் முக்கியத்துவம் என்பது போல, ஒவ்வொரு உயிரினத்தினுடைய உருவாக்கத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் முக்கியத்துவமானதாகும். உதாரணமாக கோழியானது 75% நீரினையும், அன்னாசிப்பழம் 80% நீரினையும் கொண்டுள்ளது.
உலகில் 3% ஆன நீரே தூய நீராக காணப்படுகின்றது. அத்துடன் 97% ஆன நீரானது சிகரங்களிலேயே உள்ளது.
உலகிலுள்ள தூய நீரில் 1% க்கும் குறைவான நீரே மனிதனால் நேரடியாகப் பாவனைக்கு பயன்படுத்தும்படியாக உள்ளது. [ இது உலகிலுள்ள நீரில் 0.007% பங்காகும்]
சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாள் பூராகவும் 16,000 கலன்கள் நீரினை உள்ளெடுக்கின்றான்.
உலகிலுள்ள மக்கள் தூய குடிநீரின்றி மூலங்களின்றி பல்வகைப்பட்ட பாதிப்புக்களினை எதிர்நோக்குகின்றனர். தூய குடிநீரின்றி, உலக மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பான ஒரு கண்ணோட்டம்..............
நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக, வருடாந்தம் 3.575 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.
நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 43%ஆன இறப்புக்களுக்கு டயரியா காரணமாகின்றது.
நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 84%ஆன இறப்புக்களால் 0-14 வயதிற்கிடைப்பட்ட குழந்தைகள் மரணிக்கின்றனர்.
ஒவ்வொரு 15 செக்கன்களுக்கும், ஒரு குழந்தை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக மரணிக்கின்றது.
நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக ஏற்படுகின்ற இறப்புக்களில் 98%ஆன இறப்புக்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே ஏற்படுகின்றது.
உலகிலுள்ள வைத்தியசாலைகளிலுள்ள கட்டில்களில் அரைவாசிக்கும் அதிகமானவை நீருடன் தொடர்புடைய நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளர்களாலேயே நிரப்பப்படுகின்றதாம்.
உலகில் 884 மில்லியன் மக்கள் தூய நீரினைப் பெறுவதற்கான மூலங்களின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களில் எட்டில் ஒரு பங்காகும்.
உலகவெப்பமயமாதல் போன்றவை காரணமாக இன்று வரட்சி நிலையானது உலகினை மேலும்மேலும் வாட்டிவருகின்றது. இதன்காரணமாக உலகமக்கள் மேலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களினை எதிர்கொள்கின்றனர். இதன்காரணமாக நீர்மூலங்கள் வற்றிச்செல்கின்ற நிலையினை நாம் தற்சமயம் உணரக்கூடியதாக உள்ளது.

“ஒரு அமெரிக்கன் 5 நிமிடங்கள் குளிக்கப் பயன்படுத்துகின்ற நீரினளவானது, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் வசிக்கின்ற ஒரு சேரிப்புற சாதாரண மனிதன் அன்றைய நாள் பூராகவும் பயன்படுத்துகின்ற நீரினளவுக்கு சமனாகுமாம்.”
நீயின்றி நான் வாழலாம்
நானின்றி நீயும் வாழலாம்
ஆனால் நீரின்றி நாம் யாரும் வாழமுடியாது
***
No comments:
Post a Comment