Wednesday, April 7, 2010

கிரிக்கெட்டில் தமது அறிமுக போட்டிகளிலேயே அசத்தியவர்கள்

 ரிப் போஸ்ரெர், இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1903-04ம் ஆண்டு பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 287 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார். இங்கிலாந்து அணிக்காக உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் குழாமின் தலைவராகவும் கடமையாற்றிய ஒரே வீரரும் இவரே ஆவார்.




 லோரென்ஸ் ரோவ், மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த இவர் 1971-72ம் ஆண்டு பருவகாலத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 214 மற்றும் 100* ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் மற்றும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

 யாசீர் ஹமீட், பாகிஸ்தான் அணியினைச் சேர்ந்த இவர் 2003ம் ஆண்டு பருவகாலத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 170 மற்றும் 108 ஓட்டங்களைப் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் 1வது&2வது இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற 2வது வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

 புருஸ் டெய்லர், நியூசிலாந்து அணியினைச் சேர்ந்த இவர் 1965ம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 105 ஓட்டங்களையும் மற்றும் 86 ஓட்டங்களுக்கு 5விக்கட்களையும் பெற்றார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

 முஹமட் அசாருதின், இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1984ம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 110 ஓட்டங்களைப் பெற்றார். இது மாத்திரமன்றி தொடர்ந்து 2டெஸ்ட் போட்டிகளில் சதங்களை பெற்றார். தனது முதல் 3போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.




 நரேந்திர ஹிர்வாமானி , இந்திய அணியினைச் சேர்ந்த இவர் 1998ம் ஆண்டு பருவகாலத்தில் மே.தீவுகள் அணிக்கெதிராக அறிமுக டெஸ்ட் போட்டியில் 136 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தினார்.இவர் இந்த சாதனையினை 1 ஓட்டத்தினாலேயே முறியடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் இந்த சாதனையினை ஆஸி அணியினைச் சேர்ந்த பொவ் மஸி 137 ஓட்டங்களுக்கு 16 விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

 ஜெப் கிறினிட்ச்,[கோடன் கிறினிட்ச்சுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை] பாபடோஸ் அணியினைச் சேர்ந்த இவர் 1966-67ம் ஆண்டு பருவகாலத்தில் ஜமேக்கா அணிக்கெதிராக தனது அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 205 ஓட்டங்களையும் அத்துடன் 124ஓட்டங்களுக்கு 7விக்கட்களையும் பெற்றார். மே.தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டி விளையாடிய இறுதி வெள்ளை இன வீரர் இவரே ஆவார்.

 அல்பேர்ட் மோஸ்[நியூசிலாந்து], கென்டவெரி அணிக்காக அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ்சில் 28 ஓட்டங்களுக்கு 10 விக்கட்களை வீழ்த்தினார். அறிமுக முதல்தர டெஸ்ட் போட்டியில் 10விக்கட்களை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவரும் இவரே ஆவார்.

***

No comments:

Blog Widget by LinkWithin