Friday, December 10, 2010

தனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர்.....

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி சமாதானத்துக்கான நோபல் பரிசானது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் 2010ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது சீனா நாட்டினைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லியு ஸியயோபோவுக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்சமயம் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

லியு ஸியயோபோ

சமாதான நோபல் பரிசு தெரிவானது சில சந்தர்ப்பங்களில் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இந்த வருடத்துக்கான சமாதான நோபல் பரிசும் அரசியல் சர்ச்சைகளுக்குள் ஆட்பட்டுள்ளது.

இன்றைய தினம் சமாதான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வினை சீனா, இலங்கை உட்பட்ட சில நாடுகள் பகிஷ்கரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர் வியட்நாம் அரசியல்வாதி லி டுக் தோ ஆவார்.

லி டுக் தோ


1973ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ன்கர் மற்றும் லி டுக் தோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இருவரும் வியட்நாம் சமாதான இணக்கப்பாட்டுக்கு பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமாதான நோபல் பரிசினை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் தான் இல்லை என்று லி டுக் தோ அறிவித்தார், இதற்கான காரணமாக அவர் வியட்நாமின் நிலையினை எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வியட்நாம் வன்முறையானது(1959-1975) வட வியட்நாமுக்கும், அமெரிக்க ஆதரவுபெற்ற தென் வியட்நாமுக்கும் இடையே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென் வியட்நாம் & அமெரிக்க படையினர் போரில் தோற்கடிக்கப்பட்டதுடன், வட வியட்நாம் கம்யூனிஸ் அரசாங்கத்தின்கீழ் வியட்நாம் ஒற்றுமைப்பட்டவுடன் போர் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

2 comments:

Jayadev Das said...

இப்போ நம்ம தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமண்யம் சந்திரசேகர் அவர்களுக்கு நோபல் பரிசு எப்போ குடுத்தாங்க தெரியுமா? அவருக்கு என்பது வயசானப்போ. எதுக்கு குடுத்தாங்க தெரியுமா? அவருக்கு இருபது வயசுல இந்தியாவில இருந்து அமெரிக்காவுக்கு போகும் போது மனதில் தோன்றிய தியரிக்கு. [அதுதாங்க கருந்துளைகள் எவ்வளவு பெரிசு வரை இருக்கலாம்னு சந்திர சேகர் லிமிட்டுன்னு சொல்லி ஒரு எல்லை வகுத்தாரே அதே தியரிதான்]. ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி விட்டு குடுத்தாங்க? அவரு சொன்னத, உண்மைதான் என்று ஆதாரம் எதாச்சும் கிடைக்கணுமே அதுக்குத்தான். ஆனா, இப்போ ஒரு பன்னிக்கு நோபல் பரிசு சமாதானத்துக்கு குடுத்திருக்காங்க. ஓபமான்னு அதுக்குப் பேரு, சமாதானத்துக்குன்னு அது இது வரைக்கும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை. ஆனாலும் நோபல் பரிசு. என்ன கொடுமை சார் இது!!!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பரே நன்றிகள் .........

Blog Widget by LinkWithin