Showing posts with label சமாதானம். Show all posts
Showing posts with label சமாதானம். Show all posts

Thursday, September 8, 2011

சமாதானத்திற்காக எழுத்தறிவினைப் பயன்படுத்துவோம்………!!!




வருடாந்தம், செப்டெம்பர் மாதம் 8ம் திகதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. உலக எழுத்தறிவு தினம் 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனி மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்த வருட உலக எழுத்தறிவு தினத்திற்குரிய தொனிப்பொருள் - "சமாதானத்திற்கான எழுத்தறிவு" ஆகும்.

உலக எழுத்தறிவு தொடர்பான சில புள்ளிவிபரங்கள்…….

• உலகிலுள்ள வளர்ந்தோர் சனத்தொகையில் 1பில்லியனானோர் (26%) எழுத்தறிவற்றவர்களாக உள்ளனர்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோர் தொகையில் மூன்றிலிரண்டு வகிபாகத்தினை பெண்களே வகிக்கின்றனர்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 98%மானோர் அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளிலேயே வசிக்கின்றனர்.

• அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் ஒட்டுமொத்த எழுத்தறிவு 49% ஆகும்.

• உலகிலுள்ள எழுத்தறிவற்றோரில் 52%மானோர் இந்தியா மற்றும் சீனாவில் வசிக்கின்றனர்.

• ஆபிரிக்காவின் ஒட்டுமொத்த எழுத்தறிவானது 60%இலும் குறைவாகும்.

***

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

***

Friday, December 10, 2010

தனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர்.....

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி சமாதானத்துக்கான நோபல் பரிசானது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் 2010ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது சீனா நாட்டினைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் லியு ஸியயோபோவுக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்சமயம் சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

லியு ஸியயோபோ

சமாதான நோபல் பரிசு தெரிவானது சில சந்தர்ப்பங்களில் அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இந்த வருடத்துக்கான சமாதான நோபல் பரிசும் அரசியல் சர்ச்சைகளுக்குள் ஆட்பட்டுள்ளது.

இன்றைய தினம் சமாதான நோபல் பரிசு வழங்கும் நிகழ்வினை சீனா, இலங்கை உட்பட்ட சில நாடுகள் பகிஷ்கரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனக்கு கிடைத்த சமாதான நோபல் பரிசினை நிராகரித்தவர் வியட்நாம் அரசியல்வாதி லி டுக் தோ ஆவார்.

லி டுக் தோ


1973ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசானது ஐக்கிய அமெரிக்காவின் இராஜங்க செயலாளர் ஹென்ரி கிஸ்ன்கர் மற்றும் லி டுக் தோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் இருவரும் வியட்நாம் சமாதான இணக்கப்பாட்டுக்கு பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமாதான நோபல் பரிசினை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் தான் இல்லை என்று லி டுக் தோ அறிவித்தார், இதற்கான காரணமாக அவர் வியட்நாமின் நிலையினை எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வியட்நாம் வன்முறையானது(1959-1975) வட வியட்நாமுக்கும், அமெரிக்க ஆதரவுபெற்ற தென் வியட்நாமுக்கும் இடையே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென் வியட்நாம் & அமெரிக்க படையினர் போரில் தோற்கடிக்கப்பட்டதுடன், வட வியட்நாம் கம்யூனிஸ் அரசாங்கத்தின்கீழ் வியட்நாம் ஒற்றுமைப்பட்டவுடன் போர் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

***
Blog Widget by LinkWithin