Sunday, August 21, 2011

உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடு

சுவாரஷ்சியமான தகவல்களை பல்சுவைத் தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக…………………

 உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக பொலிவியா விளங்குகின்றது. 1825ம், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்ற பொலிவியா நாட்டில் 200 இற்கும் அதிகமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதேவேளை, 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக இத்தாலி விளங்குகின்றது. 50 இற்கும் அதிகமான அரசாங்கங்களும், 20 இற்கும் அதிகமான பிரதம மந்திரிகளையும் இத்தாலி நாடு 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்தியாவின் தேசிய விலங்கு புலி(Panthera Tigris) என்பது நாமறிந்ததே. ஆனால் 1972ம் ஆண்டுவரையும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே விளங்கியது



 உலகில் அதிக நிறை கொண்ட வீட்டுப் பூனையாக ' ஹிம்மி ~ Himmy விளங்கியதாம். இதன் நிறை 21.3 கிலோகிராம் ஆகும். ஹிம்மி 1984ம் ஆண்டு இறந்துவிட்டது.



 ஒவ்வொரு துளி கடல் நீரிலும் சராசரியாக 1 பில்லியன் தங்க அணுக்கள் உள்ளதாம்.

 எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.

***

Tuesday, August 9, 2011

உலகினை வாட்டி வதைக்கும் வறுமையும், பஞ்சமும்

அண்மைய நாட்களில் உலக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள், ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, மற்றும் ஆபிரிக்க குடியரசு போன்ற நாடுகளின் மக்கள் உணவுப் பற்றாக்குறையினால் மிகவும் துன்பப்படுகின்றனர். சோமாலியா நாட்டில் நிலவுகின்ற உள் நாட்டுக்குழப்பங்கள் மக்களினை வாட்டி வதைக்கின்றன. உணவின்றி சின்னஞ்சிறு குழந்தைகள் பசியினைப்போக்க மண்ணினை உட்கொள்கின்றர் என செய்திகள் தெரிவிக்கினறன. சோமாலியா தேசத்தில் கடந்தாண்டு மட்டும் விலைவாசி மட்டும் 270 சதவீதம் உயர்வடைந்துள்ளதுடன், அங்கு தொற்று நோயும் ஏற்பட்டுள்ளதுடன் , வரட்சியின் காரணமாக 90% மான கால்நடைகளும் உயிரிழந்துவிட்டன. இதுபோன்ற நிலையே ஏனைய ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.



செல்வந்தர்களே ஒரு கணமாவது எங்களை மனதில் கொள்; ஒரு வேளை உணவையாவது எமக்களிக்க முன் வாருங்கள்… பசியினால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குழந்தைகளின் சார்பில் ஓர் அன்புக்குரல்………..


 ஐ.நா உணவு விவசாய நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 110கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி,பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர். குறிப்பாக ஆசியா, மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் 65கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினரும், ஆபிரிக்காவின் சகாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள நாடுகளில் 28கோடி மக்கள் தொகையினரும் பசி, பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர்.

 பசி,பட்டினியின் காரணமாக வருடாந்தம் 15மில்லியன் குழந்தைகள் மரணிக்கின்றன.

 பசி, பட்டினியால் வாழும் மக்கள் தொகையினர் உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.

 உலக மக்களில் 12 பேரில் ஒருவர் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5வயதுக்குட்பட்ட 160மில்லியன் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. [மூலம்~ ஐ.நா உணவு, விவசாய அமையம்]

 நாளொன்றுக்கு சராசரியாக 1800 கலோரியினைவிடவும் குறைவான கலோரியினை உண்பவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றார்கள்..; போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில், அரைப்பங்கினர் தெற்காசியாவிலும், மூன்றிலொரு பங்கினர் உப-சகாரா நாடுகளிலும் வாழ்கின்றனர்.

 உலகில், 120 கோடி மக்கள் நாளாந்தம் 1800 கலோரியினைவிடவும் குறைவாகவே உட்கொள்கின்றனர்.

 உலகில் அண்ணளவாக 183மில்லியன் குழந்தைகள் தமது வயதிற்கேற்ற நிறையினைக் கொண்டிருக்கவில்லை.

 உலகில், ஒவ்வொரு 6 செக்கன்களுக்கும் பசி,பட்டினியின் காரணமாக ஒருவர் இறக்கின்றார்.

 உலகில் 3பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொலரினையே உழைக்கின்றனராம்.

***

Thursday, July 28, 2011

2000 டெஸ்ட் போட்டிகளை ருசித்த கிரிக்கெட்…………...

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த 1வது டெஸ்ட் போட்டியானது, 2000மாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி, இந்திய அணியினை 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியானது இரு அணிகளும் தமக்கிடையே மோதிய 100வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில், சில சுவாரஷ்சியமான கிரிக்கெட் தகவல்கள் உங்களுக்காக…………

 1990ம் ஆண்டு இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் சுவாரஷ்சியமானதாகும். ஃபொலோ - ஒன் நிலையிலிருந்து மீள்வதற்கு 24 ஓட்டங்களினைப் பெறவேண்டிய கட்டத்தில் இறுதிவிக்கட் இணைப்பாட்டத்தில் இந்திய அணியின் கபில் தேவ் மற்றும் நரேந்திர கிர்வானி ஆகியோர் களத்தில் இருந்தனர். வலது முறை சுழற்பந்துவீச்சாளர் எட் ஹெம்மிங்ஸ் வீசிய முதலிரண்டு பந்துவீச்சுகளினையும் தடுத்தாடிய கபில் தேவ், மிகுதி நான்கு பந்துவீச்சுக்களையும் ஆறு ஓட்டங்களாக விளாசினார். அடுத்த ஓவரின் முதல் பந்துவீச்சினை எதிர்கொண்ட நரேந்திர கிர்வானி, அங்குஸ் ஃப்ரெசரினால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



*** டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் கபில் தேவ் ஆவார்.

 மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ். இவரின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 57 இலும் அதிகமாகும். ஆனால் இவரின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சராசரி 0 ஆகும். ஏனெனில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் 1973ம் ஆண்டு ஒரேயொரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் பங்குபற்றி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக சதத்தினை முச்சதமாகப்(365* எதிர் பாகிஸ்தான்) பெற்ற ஒரே வீரர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆவார்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஓட்டங்களினை விடவும் விக்கட்களினை அதிகமாக வீழ்த்திய வீரராக இந்தியாவின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பகவத் சந்திரசேகர் விளங்குகின்றார். 58 டெஸ்ட் போட்டிகளில் 177 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுள்ள BS சந்திரசேகர் 242 விக்கட்களினை வீழ்த்தியுள்ளார்.

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 நாடுகள் பங்குபற்றிய முதலாவது முத்தரப்பு டெஸ்ட் சுற்றுத்தொடரில்(27 மே 1912 – 22 ஆகஸ்ட் 1912) பங்குபற்றிய நாடுகள் இங்கிலாந்து, ஆஸி, தென்னாபிரிக்கா ஆகியனவாகும். இச் சுற்றுத்தொடரினை நடாத்திய நாடான இங்கிலாந்து(4 வெற்றி, 2 சமநிலை) முதல் ஸ்தானத்தினையும், ஆஸி(2 வெற்றி, 1 தோல்வி, 3 சமநிலை) இரண்டாம் ஸ்தானத்தினையும், தென்னாபிரிக்கா(5 தோல்வி, 1 சமநிலை) மூன்றாம் ஸ்தானத்தினையும் பெற்றுக்கொண்டன.


***
Blog Widget by LinkWithin