Monday, November 29, 2010

சமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....



உலக சமாதானத்துக்காக பாடுபட்டு அரும்பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதே சமாதான நோபல் பரிசாகும். அந்தவகையில், 1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசுக்கு, சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் பெயரினை சுவீடன் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த E.G.C. Brandt என்பவர் பிரேரித்தார். எவ்வாறாயினும் Brandt தனது மனதினை மாற்றிக்கொண்டு 1939 பெப்ரவரி 1ம் திகதி இடப்பட்ட கடிதத்தில் தன்னால் பிரேரிக்கப்பட்ட அடோல்ப் ஹிட்லரின் பெயரினை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினைப் பெறுவதற்கு யாருமே தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

========================================


உலகினை பாழ்படுத்தும் கைத்தொலைபேசிக் கழிவுகள்.....



உலகில் வருடாந்தம் 125 மில்லியன் செல்போன்கள் கழிவுகளாக தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மக்கள் தமது செல்போன்களினை அடிக்கடி மாற்றிக்கொள்வது அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற உலக போக்காகும். இதற்கான எடுத்துக்காட்டாக; கொரிய நாட்டு மக்கள் வருடாந்தம் தமது செல்போன்களினை பொதுவாக மாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழிவுகளாக தூக்கி வீசப்படுகின்ற செல்போன் இலத்திரனியல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட்டமை என்பது கவலைதரும் செய்தியாகும்.


===========================================


உலகில் மிக அரிதான சொக்லேட்வகை
உலகில் மிக அரிதான சொக்லேட் துண்டாக போர்செலனா(Porcelana) துண்டு விளங்குகின்றது. இந்த சொக்லேட் வகையில் 20,000 துண்டுகளே மாத்திரமே வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

***

Tuesday, November 23, 2010

மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........



மின்னல் காரணமாக உலகில் வருடாந்தம் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், பெரும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றது. ஆகவே மின்னல் வேளைகளில் எமது பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் அதிகளவானோர் பயப்படுகின்ற விடயங்களில் மின்னலும் ஒன்றாகும். அந்தவகையில் மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........

 மின்னலின் வெப்பநிலையானது 50000 டிகிரி பரனைட்டினை விடவும் அதிகமாகும். ஆனால், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது இதனைவிடவும் குறைவாகும்.(11000 டிகிரி பரனைட்)

 மின்னலின் சராசரி நீளம் 6 மைல்களாகும்.

 இடிமுழக்கத்தின் சராசரி அகலம் 6-10 மைல்களாகும்.

 இடிமுழக்கமானது, மணித்தியாலத்துக்கு சராசரியாக 25 மைல்கள் பயணிக்கின்றது.

 சாதாரணமான ஒரு மின்னலின் பிரகாச வெளிச்சமானது 0.25 செக்கன்களே நீடிக்கும், அத்துடன் சாதாரணமான ஒரு மின்னலானது 3 or 4 தனிப்பட்ட ஒளிக்கீற்றுக்களைக் கொண்டிருக்கும்.

 புவியின் மேற்பரப்பில் ஏதோ ஒரு இடத்தில் செக்கனுக்கு 100 தடவைகள் மின்னல் தாக்குகின்றது.

 சராசரியாக, 3-4 மைல்கள் இடைவெளியில் ஏற்படுகின்ற இடியினை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். ஈரப்பதன், நிலப்பரப்பு , மற்றும் ஏனைய காரணிகளிலேயே இது தங்கியுள்ளது.

 மின்னல் தொடர்பான கற்கைநெறியின் விஞ்ஞானப்பெயர் Fulminology ஆகும்.

 ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட இடிமுழக்கங்கள் நிகழுகின்றன. உக்கிரமான உயர்வேக காற்று, திடீர் வெள்ளப்பெருக்குகள், சுழல் காற்றுக்களினை உருவாக்குவதற்கு இடிமுழக்கங்களில் 10% போதுமானதாகும்.

 உலகில் உயர்விகிதத்தில் மின்னல் செயற்பாடு நிகழுகின்ற நாடுகளில் சிங்கப்பூர் நாடும் ஒன்றாகும்.

==================================

இலங்கையில், தற்போதைய காலப்பகுதி அதிகமான மழை பெய்கின்ற காலப்பகுதியாகும். ஆனால் கிழக்கிலங்கையில் மழையின் தாக்கம் முழுமை பெறவில்லை, செப்டம்பர் மாத முற்பகுதியில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் மழையின்றி பெருமளவில் பாதிப்பினை எதிர்நோக்கினர். சிலர் தமது விவசாய செய்கையினை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் தொடர்ந்து பெய்கின்ற மழை இப்போது நிமிடக்கணக்கிலேயே பெய்கின்றது. இன்றும் வானம் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கின்றது. (மழை வரும் ஆனால் வராது???....)

***

Sunday, November 21, 2010

மூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....

உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சில சுவாரஷ்சியமான தகவல்கள்.........

 தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.

 தென் அமெரிக்க இராட்சத எறும்பு தின்னிகள், நாளாந்தம் 30,000 எறும்புகளுக்கும் அதிகமாக சாப்பிடுமாம்.

 ஹம்மிங்பேர்ட் பறவைகள், தனது உடலின் நிறையில் அரைப் பங்களவிலான உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றன.

 புற ஊதாக்கதிர்களையும், அக ஊதாக்கதிர்களையும் பார்க்கக்கூடிய ஒரே உயிரினம் தங்கமீன்(Goldfish) ஆகும்.



நியூசிலாந்து நாட்டின் கரையோரத் தீவுகளில் காணப்படுகின்ற Tuatara என்கின்ற பல்லி இனங்கள் 03 கண்களைக் கொண்டுள்ள உயிரினமாகும். ~ அவற்றுக்கு இரண்டு கண்கள் தலையின் மத்தியிலும், மற்றைய கண் தலையின் உச்சத்திலும் காணப்படுகின்றது.



 பன்றிகளின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாகும்.

 புற ஊதாக் கதிர்களினை புறாக்கள் பார்க்கக்கூடியவையாகும்.

 பறவைகளினால் இனிப்புச் சுவைகளினை சுவைக்கமுடியாது. ஏனெனில் பறவைகளுக்கு இனிப்புச் சுவை அரும்புகள் இல்லை.

 மரங்கொத்திப் பறவைகள் ஒரு செக்கனில் இருபது தடவைகள் மரங்களினை கொத்தக்கூடியவையாகும்.

 புறாக்கள் மணிக்கு 100 மைல் வேகத்துக்கு அப்பால் பறக்ககூடிய இயலுமை கொண்டவையாகும்.

***
Blog Widget by LinkWithin