
மின்னல் காரணமாக உலகில் வருடாந்தம் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், பெரும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றது. ஆகவே மின்னல் வேளைகளில் எமது பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் அதிகளவானோர் பயப்படுகின்ற விடயங்களில் மின்னலும் ஒன்றாகும். அந்தவகையில் மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........
மின்னலின் வெப்பநிலையானது 50000 டிகிரி பரனைட்டினை விடவும் அதிகமாகும். ஆனால், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது இதனைவிடவும் குறைவாகும்.(11000 டிகிரி பரனைட்)
மின்னலின் சராசரி நீளம் 6 மைல்களாகும்.
இடிமுழக்கத்தின் சராசரி அகலம் 6-10 மைல்களாகும்.
இடிமுழக்கமானது, மணித்தியாலத்துக்கு சராசரியாக 25 மைல்கள் பயணிக்கின்றது.
சாதாரணமான ஒரு மின்னலின் பிரகாச வெளிச்சமானது 0.25 செக்கன்களே நீடிக்கும், அத்துடன் சாதாரணமான ஒரு மின்னலானது 3 or 4 தனிப்பட்ட ஒளிக்கீற்றுக்களைக் கொண்டிருக்கும்.
புவியின் மேற்பரப்பில் ஏதோ ஒரு இடத்தில் செக்கனுக்கு 100 தடவைகள் மின்னல் தாக்குகின்றது.
சராசரியாக, 3-4 மைல்கள் இடைவெளியில் ஏற்படுகின்ற இடியினை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். ஈரப்பதன், நிலப்பரப்பு , மற்றும் ஏனைய காரணிகளிலேயே இது தங்கியுள்ளது.
மின்னல் தொடர்பான கற்கைநெறியின் விஞ்ஞானப்பெயர் Fulminology ஆகும்.
ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட இடிமுழக்கங்கள் நிகழுகின்றன. உக்கிரமான உயர்வேக காற்று, திடீர் வெள்ளப்பெருக்குகள், சுழல் காற்றுக்களினை உருவாக்குவதற்கு இடிமுழக்கங்களில் 10% போதுமானதாகும்.
உலகில் உயர்விகிதத்தில் மின்னல் செயற்பாடு நிகழுகின்ற நாடுகளில் சிங்கப்பூர் நாடும் ஒன்றாகும்.
==================================
இலங்கையில், தற்போதைய காலப்பகுதி அதிகமான மழை பெய்கின்ற காலப்பகுதியாகும். ஆனால் கிழக்கிலங்கையில் மழையின் தாக்கம் முழுமை பெறவில்லை, செப்டம்பர் மாத முற்பகுதியில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் மழையின்றி பெருமளவில் பாதிப்பினை எதிர்நோக்கினர். சிலர் தமது விவசாய செய்கையினை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் தொடர்ந்து பெய்கின்ற மழை இப்போது நிமிடக்கணக்கிலேயே பெய்கின்றது. இன்றும் வானம் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கின்றது. (மழை வரும் ஆனால் வராது???....)
***
5 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...
நல்ல தகவல் சகோதரம்... இடி முழக்கத்தின் வெகம் இவ்வளவும் தானா..??
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
அருமையான தகவல்கள்.
நீங்கள் கிழக்கிலங்கைதானே.
அப்பா விவசாயம் தானே பார்கிறார்.
எப்பூடி................
பயனுள்ள தகவல்கள். நன்றி
நண்பர்களின் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள் ........
நண்பர் மால்குடி : கவலையான தகவலினை உங்களுடன் பகிர்கின்றேன். எனது அப்பா காலமாகி 17 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது ......
Post a Comment