ஒலிம்பிக், கிரிக்கெட், உதைபந்தாட்டம் தொடர்பான சில சுவாரஷ்சியமான பல்சுவை விளையாட்டுத் தகவல்கள் உங்களுக்காக......
உலக சாதனை ஆனால் தங்கப் பதக்கம் இல்லை....
1924ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவினைச் சேர்ந்த றொபட் லிகென்ரி, பென்டத்லோன் விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 25அடி 4 அங்குலங்கள் பாய்ந்து சாதனை படைத்தார். பென்டத்லொன் விளையாட்டு நிகழ்வில் றொபட் லிகென்ரி 3ம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றார்.
அதே ஒலிம்பிக்கில் பிறிதொரு போட்டி நிகழ்வான நீளம் பாய்தல் போட்டியில் 24அடி 5 அங்குலங்கள் பாய்ந்த William Hubbard, USA தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அசத்தல் அறிமுகம்
1999 செப்டம்பர் 5ம் திகதி, சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வவெல் ஹின்ட்ஸ் அறிமுகமானார். அதேபோட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சடகோபன் ரமேஸ் அறிமுகமானார்.
இவர்களுக்கிடையிலான ஒற்றுமை யாதெனில் இவர்கள் இருவரும் பிறந்தது ஒரே ஆண்டில்(1975), ஒரே மாதத்தில்(ஒக்டோபர்), ஒரே நாளில்(16ம் திகதி) அத்துடன் இவர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
31-0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற அணி...
உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு அணிகளினை தெரிவுசெய்வதற்காக தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. அந்தவகையில் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் ஈட்டப்பட்ட மிகப்பிரமாண்ட வெற்றியாக, 2002ம் ஆண்டு தென் கொரியா, ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டத்திற்காக அணிகளினை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, அமெரிக்க சமோவா அணியினை 31-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்
சுற்றுலா மே.தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. நேற்றைய 2ம் நாளில் மே.தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 333 ஓட்டங்களினைப் பெற்றார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்ட 4வது வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் டொன்.பிரட்மன், பிரைன் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோரே 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்டவர்களாவர்.
கிறிஸ் கெய்ல், இந்திய உப கண்டத்தில் பெற்ற முதல் டெஸ்ட் சதமும் இதுவே ஆகும்.
அத்துடன் மே.தீவுகளுக்கு வெளியே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்ற மே.தீவின் வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் விவ் ரிச்சர்ட்ஸ்சின் 291 ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 1976.
மேலும் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்றவராக மே.தீவின் கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் யூனிஸ் கானின் 313 ஓட்டங்கள்,2009.
***
4 comments:
விளையாட்டுப் பதிவு அருமை.
பதிவு அருமை நண்பா வாழ்த்துக்கள்.
31-0 தகவல் வியக்க வைத்தது...
நண்பர்களின் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.....
Post a Comment