
உலகில் பரப்பளவில் மிகப்பெரிய கண்டமாக விளங்குவது ஆசியாக்கண்டமாகும். அத்துடன் உலகில் அதிகளவு மலைகளைக் கொண்ட கண்டமாக ஆசியாக் கண்டம் விளங்குகின்றது. அந்தவகையில் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த மலைச்சிகரங்களில் முதல் 56 மலைச்சிகரங்களும் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த முதல் 100 மலைச்சிகரங்களில் 71 மலைச்சிகரங்கள் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலகில் மிக உயர்ந்த முதல் 10 மலைச்சிகரங்கள்....
1) எவரெஸ்ட் – இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8848 மீற்றர்
2) கே-2(கோட்வின் ஓஸ்ரின்) – கரகூரம் மலைத் தொடர் பாகிஸ்தான் ~ 8611 மீற்றர்
3) கன்செங்யுங்கா – இமயமலைத் தொடர் - நேபாளம்/இந்தியா ~ 8586 மீற்றர்
4) லுகாட்ஸ் – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8511 மீற்றர்
5) மகலு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8463 மீற்றர்
6) சோ ஒயு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8201 மீற்றர்
7) டொல்லாற்கிரி – இமயமலைத் தொடர் - நேபாளம் ~ 8167 மீற்றர்
8) மனாஸ்லு – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8163 மீற்றர்
9) நெங்கா பார்வெட் – இமயமலைத் தொடர் - பாகிஸ்தான்~ 8125 மீற்றர்
10) அன்னபூர்னா – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8091 மீற்றர்
***
3 comments:
என்ன? கிளிமஞ்சரோவை விட்டுவிட்டீர்கள். கவிஞர் பா.விஜய் கோவிக்கப்போகிறார்.
இந்த தொடுப்பில் அந்தக் கூத்தைப் பாருங்கள்.
http://pondicherryblog.com/2010/10/everest-also-known-as-kilimanjaro/
தேடலுக்கும் பகிர்விற்கும் நன்றி .
மலைகள் இருப்பது ஒரு விதத்தில் பெருமைதான் மறு புறம் அது எரிமலையாகும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது
நண்பர்களே உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றிகள்.....
Post a Comment