Sunday, December 20, 2009

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் கோப்பி,தேயிலை


அவுஸ்ரேலிய, சிட்னி பல்கலைக்கழக சர்வதேச சுகாதாரத்துக்கான ஜோர்ஜ் நிறுவக ஆய்வாளர் Rachel Huxley(D.Phil) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க கோப்பி மற்றும் தேயிலை ஆகியன உதவிபுரிவதாக கண்டறிந்துள்ளனர்.

இதற்காக அவரது குழுவினர் கோப்பியருந்தும் 457,922 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 18 ஆய்வுகளையும் , கபின் அற்ற கோப்பியருந்தும் 225,516 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 6 ஆய்வுகளையும் மேலும் தேநீர் அருந்தும் 286,701 தொடர்பில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 7 ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், ஒரு நாளில் மேலதிகமாக அருந்துகின்ற ஒவ்வொரு கோப்பை கோப்பியினால் நீரிழிவு நோயின் அதிகரித்த அபாயமானது 7% இனால் குறைவடைவதாக கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளில் 3-4 கோப்பை அருந்துபவர்கள், 0-2 கோப்பை அருந்துபவர்களை அருந்துபவர்களை விடவும் 25% இற்கும் குறைவான அபாயங்களினை எதிர்நோக்குகின்றனர்.


மேலும் இந்த ஆய்வின் பிரகாரம் கபின் அற்ற கோப்பியருந்துபவர்கள் ஒருநாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், கோப்பி அருந்தாதவர்களைக்காட்டிலும் அண்ணளவாக 1/3 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின்அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தேநீர் அருந்துபவர்கள் ஒரு நாளில் 3-4 கோப்பைக்கு மேல் அருந்துபவர்கள், தேநீர் அருந்தாதவர்களைக் காட்டிலும்அண்ணளவாக 1/5 பங்கு குறைவாகவே நீரிழிவு நோயின் அபாயத்தைஎதிர்கொள்கின்றனர்.


நாமும் நாள்தோறும் கோப்பி அல்லது தேநீர் அருந்தி நீரிழிவு நோயின் அபாயத்தினைக் குறைத்துக் கொள்வோமாக...........

***

Friday, December 18, 2009

அழிவின் விளிம்பில் கோலா கரடிகளும், பென்குவின்களும்

ஐ.நா சபையின் காலநிலை மாநாட்டில் கடந்த 14ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் காலநிலை மாற்றங்களின் காரணமாக அரச பென்குவினிலிருந்து அவுஸ்ரேலியாவின் கோலா கரடிகள் வரையான டசின் கணக்கான விலங்கினங்கள் அழிவினை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டங்களின் அதிகரிப்பு ,சமுத்திரங்கள் அமிலமயமாதல் மற்றும் துருவப் பிரதேசங்களில் பனி சுருங்குதல் ஆகியவை உயிரினங்களின் அழிவில் பெரும்பங்கு வகிக்கின்றன, மேலும் மாசடைதல்களின் அழுத்தங்கள் அவற்றுடன் வாழிடங்கள் சுருங்குதல் ஆகியவற்றின் பாதிப்புகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்து விட்டதாக இயற்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமாசம்-IUCN ன் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமை , பெலுகா திமிங்கிலங்கள், கிளவ்ன் மீன்(clownfish), அரச பென்குவின் மற்றும் சல்மொன் உட்பட 10 வகையான இனங்களை காலநிலை மாற்றங்கள் அவற்றினுடைய வாழ்க்கையினைப் எவ்வாறு பாதித்துள்ளன என அவ்வறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபனீரொட்சைட் வாயுவின் அதிகரிப்பின் காரணமாக அவுஸ்ரேலியா கோலாகளின் உணவாகிய யூக்கலிப்ட்ஸ் இலைகளின் போசணைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு கோலா கரடிகள் போசணைக் குறைபாடுகளையும், பசி பட்டினிகளையும் எதிர் நோக்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களினால், குறிப்பாக துருவ இனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரச பென்குவின், வளமாக வாழ்வதற்குரிய வாழிடங்கள் அந்தாட்டிக்கா நிலைமைகள் போன்ற சில ஒத்ததான தீமையான பிரச்சினைகளினை எதிர் நோக்கியுள்ளன. பனி படர்ந்த நிலைவரங்கள் குறைவடைதலானது அரச பென்குவின்களினுடைய இனப்பெருக்க நிலைவரங்களினையும் மற்றும் இளங் குஞ்சுகளை வளர்ப்பதினிலும் பாதிப்படையச் செய்கின்றன. மேலும் அவற்றிக்கான பிரதான உணவு மூலங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றதாம்.

தற்சமயம் டென்மார்க், கோபன்ஹேகனில் நடைபெறும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மானிடர்களுக்கு மாத்திரமன்றி பறவைகள்,விலங்குகளின் வாழ்க்கைக்கும் மிகமிக முக்கியமானதாகும் என்றால் மிகையல்ல எனலாம்.

***

Wednesday, December 16, 2009

இமாலய இலக்கில் மயிரிழையில் இடறிவிழுந்த இலங்கை


நேற்று செவ்வாய்கிழமை ராஜ்கோட்டில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இறுதிப் பந்து வீசப்படும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டது. இந்தப் போட்டியில் காணப்பட்ட விறுவிறுப்புக்கு காரணம் இரண்டு அணிகளும் 400 க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றமையாகும்.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக் 102 பந்துகளை எதிர்கொண்டு 146 (4’s-14 & 6’s-6) ஓட்டங்களைப் பெற்றார். மேலும் அணித்தலைவர் டோனி 72 (4’s-7 & 6’s-3) ஓட்டங்களையும் சச்சின் டெண்டுல்கர் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய அணி 414 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியினை, இந்திய அணி மிக இலகுவாக வீழ்த்திவிடும் என பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருக்கலாம் காரணம் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் மோசமான தோல்விகளின் பெறுபேறுகளாலாகும். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கை அணி இவ்வளவு விஸ்வரூபம் எடுத்து ஆடும் என ரசிகர்கள் நினைத்திருக்கமாட்டார்கள் எனலாம். ஆம் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்தொட்டே அதிரடியாகச் சென்று இந்திய அணியினை விஞ்சுவதாக இருந்தாலும் இலங்கை அணியின் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்களின் தவறுகள் காரணமாக இறுதியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் பரிதாபகரமாக தோல்வியினை தழுவிக்கொண்டது.

இலங்கை அணியின் சார்பில் திலகரத்ன டில்சான் 160(4’s-20 & 6’s-3) ஓட்டங்களையும் அணித்தலைவர் குமார் சங்கக்கார 43 பந்துகளில் 90(4’s-10& 6’s-5) ஓட்டங்களையும் உபுல் தரங்க 67(4’s-4 & 6’s-3) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



இறுதி ஓவரில் 11 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலை இலங்கை அணிக்கு காணப்பட்டது. நெஹ்ரா இறுதி ஓவரினை வீச குலசேகர முதல் பந்தில் 1 ஓட்டத்தினைப் பெற மத்தியூஸ் அடுத்த இரண்டு பந்துகளிலும் 2 ஓட்டங்கள் வீதம் பெற்று நான்காம் பந்தில் ஆட்டமிழக்க, நான்காம் பந்தில் வெல்கெதர 1 ஓட்டத்தினைப் பெற இலங்கை அணி இறுதிப் பந்தில் 5 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலை காணப்பட்டது. இறுதிப் பந்தில் குலசேகர ஒரு ஓட்டம் மாத்திரம் பெறப்பட இலங்கை அணி 3 ஓட்டங்களால் பரிதாபகரமாக தோல்வியினை தழுவிக்கொண்டது. இலகுவாக பெறப்பட வேண்டிய வெற்றியினை இலங்கை அணியின் மத்திய , பின் வரிசை வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் வெற்றியானது கைநழுவிப்போய்விட்டது.



மேற்படி ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள்

  • இந்தியா எந்தவொரு அணிக்கெதிராகவும் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்களாக 414 பதியப்பட்டது. இதற்கு முன்னர் 2007 உலகக் கிண்ணப் போட்டியில் பெர்மூடா அணிக்கெதிராகப் பெற்ற 413 ஓட்டங்களே அதிகமாகவிருந்தது.
  • இந்திய அணி ராஜ்கோட் மைதானத்தில் முன்னர் 2008ல் இங்கிலாந்து அணிக்கெதிராகப் பெற்ற 387/5 ஓட்டங்களை நேற்றைய போட்டியில் முறியடித்து 414 ஓட்டங்களாகப் பதிவுசெய்தது.
  • இலங்கை அணி இந்திய அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 320/8 கொழும்பு(RPS) 2009
  • இந்திய அணி இலங்கை அணிக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 373/6 ரவுண்டன் -1999
  • இந்திய அணி இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 387/5 VS இங்கிலாந்து 2008
  • இலங்கை அணி இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் அதிக ஓட்டம் பெற்ற போட்டி 302/8 Vs பங்களாதேஸ், மொகாலி -2006
  • இந்திய அணிக்கெதிராக இலங்கை வீரர் ஒருவர் இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைப் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. =>திலகரத்ன டில்சான் 160 ஓட்டங்கள். முன்னர் இந்த சாதனை சனத் ஜயசூரிய வசமிருந்தது -151* மும்பாய்-1997.
  • இலங்கை அணியின் இரண்டாவது அதிகவேக அரைச்சதம் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது.=>குமார் சங்ககார 24 பந்துகள். முதலாவது சாதனை சனத் ஜயசூரிய (17பந்துகள்) வசமிருக்கின்றது.
  • திலகரத்ன டில்சான் தனது தனிப்பட்ட அதிக ஓட்டங்களைப்(160) பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் 137* vsபாகிஸ்தான் 2009
  • விரேந்தர் சேவாக் தனது தனிப்பட்ட அதிக ஓட்டங்களைப்(146) பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் vs நியூஸிலாந்து 2003
  • ராஜ்கோட் போட்டியில் இலங்கை அணியும் , இந்திய அணியும் 400 ஓட்டங்களைப் இரண்டு தடவை கடந்த அணிகளாக தென்னாபிரிக்காவுடன் தமது பெயரை பதிவு செய்து கொண்டன.
  • இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப்(411) பெற்ற 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா 438 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்ரேலிய அணியை வெற்றி பெற்ற ஜோகனர்ஸ்பேர்க் போட்டி விளங்குகின்றது.
  • இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப்(411) பெற்றும் தோல்வியடைந்த போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. முன்னர் இந்தியா 347 Vs அவுஸ்ரேலியா -2009 (ஹைதராபாத்)
  • இரண்டு அணிகளும் இணைந்து அதிகபட்ச ஓட்டங்களைப்(825) பெற்ற 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பதிவாகியுள்ளது.(872)
  • 4 ஓட்டங்கள்(80) அதிகம் பெறப்பட்ட 2வது போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது. சாதனையாக தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி பதிவாகியுள்ளது.(87)
  • இலங்கை அணியின் வீரர் இந்தியாவுக்கெதிராக வேகமான சதம் பெற்ற போட்டியாக ராஜ்கோட் போட்டி பதிவாகியது.=>திலகரத்ன டில்சான் 73 பந்துகள். முன்னர் சாதனை சனத் ஜயசூரிய (79பந்துகள்-கராச்சி 2008) வசமிருக்கின்றது.

***
Blog Widget by LinkWithin