உலகளாவியரீதியில்
ஏப்ரல் 25ம் திகதி உலக பென்குவின்
தினமாக கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில், பென்குவின்கள்
தொடர்பிலான
சுவாரஷ்சியமான
சில தகவல்கள் உங்களுக்காக…!
v உலகில்
17 வகையான பென்குவின் இனங்கள்
காணப்படுகின்றன. இவற்றில் 13 வகையான பென்குவின் இனங்கள் அழிவின்
விளிம்பில் உள்ளவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
v பென்குவின்கள் பறக்கமுடியாத பறவை
இனங்களைச் சேர்ந்தவையாகும்.
v அதிகளவான பென்குவின்கள் தென்
துருவத்திலேயே வசிக்கின்றன. ஆனால் வட
துருவத்தில் பென்குவின்கள் இல்லையாம்.
v பென்குவின்கள் அதிகளவில் காணப்படும் நாடுகளாவன நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிலி,
ஆர்ஜென்ரீனா மற்றும்
தென்னாபிரிக்கா.
v பென்குவின் இனங்களில் மிகப்பெரிய இனமாக பேரரசர்
பென்குவின் (Emperor Penguins)
இனங்கள் விளங்குகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 1.2m (4’) ஆகும். அவற்றின் நிறை
சராசரியாக 45kg ஆகும்.
v பென்குவின் இனங்களில் மிகச்சிறிய இனமாக சிறிய
நீல பென்குவின் (Little Blue
Penguins) இனங்கள் விளங்குகின்றன. இவற்றின் உயரம் சராசரியாக 33 cm (13”) ஆகும்.
v உலகில்
அதிகளவில் காணப்படும் பென்குவின் இனமாக மகரோனி
பென்குவின் இனங்கள்
விளங்குகின்றன.
v பென்குவின்களின் சாதாரண உடல்
வெப்பநிலை 100°F
(38°C) ஆகும்.
v பென்குவின்கள்
கடல் நீரினையும் குடிக்கின்றன. அவற்றின் கண் குழிகளை சுற்றியுள்ள விசேட சுவை அரும்புகளினால்
அவை கடல் நீரின் உவர்ப்பு சுவையினை மாற்றிக்கொள்கின்றன.
v பென்குவின்கள் 10 – 15 நிமிடங்கள் வரையில் நீரின்
அடியில் தங்கியிருக்ககூடிய இயலுமை
கொண்டவையாகும். ஆனால்
நீரின் அடியில் அவைகளினால் சுவாசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
v பென்குவின்கள் மணிக்கு 5 – 6 மைல்கள்
வேகத்தில் நீந்தக்கூடியவையாகும். 1.7mph – 2.4mph வேகத்தில் நடக்கக்கூடியவையாகும்.
v பென்குவின்களின் பாலின இயல்புகளைக் கொண்டு ஆண்,
பெண் இனங்களினை அடையாள
கண்டுகொள்ள முடியாது. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவையாகும்.
v பென்குவின்கள்
தனது வாழ்க்கையில் 75% இனை கடலிலேயே கழிக்கின்றன.
***
No comments:
Post a Comment