Thursday, April 24, 2014

ஹரிபொட்டர் நாவல் பிரசுரமாகிய விசித்திரம் தெரியுமா?...

உலகில் சுவாரஷ்சியமான நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் தொடர்பான தகவல்கள்…!
  • உலகில் தற்சமயம் அதிகளவில் விற்பனையாகின்ற நாவல்கள் ஹரிபொட்டர் நாவல்களாகும். இந்நாவல்களை எழுதிய J.K. ரவ்லிங் தனது புத்தக வெளியீட்டிற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்ட விதம் விசித்திரமானதாகும். ப்ளும்ஸ்பெரி அச்சகமானது J.K. ரவ்லிங் எழுதிய நாவல்கள் விற்பனையாகுமா? என்ற சந்தேகத்தில் 500 பிரதிகளை பதிப்பிக்க மாத்திரமே ஒப்புக்கொண்டது.
    J.K. ரவ்லிங் பெண் எழுத்தாளர் என்பதினால் அவரின் பெயருக்கு அங்கீகாரத்தை வழங்க விரும்பாத பதிப்பகத்தினர் அவர் தனது முதல் எழுத்தினை மாத்திரம் புத்தகத்தில் பயன்படுத்த கேட்டுக்கொண்டனர். அவருக்கு  நடுத்தர பெயரும் (Middle Name) இல்லை. அதனால் K என்பதற்கு Kathleen என்ற பெயரினை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்

  • தட்டச்சு இயந்திரத்தின் மூலம் பதிப்பிக்கப்பட்ட முதல் நூல் மார்க் ட்வைன் எழுதிய "The Adventures of Tom Sawyer" என்பதாகும்இது 1875ம் ஆண்டு அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • நோவா வெப்ஸ்டர் தனது முதலாவது அகராதியினை எழுதுவதற்காக 36 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார்.
  • ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு செக்கனிலும் சராசரியாக 57 நூல்கள் வாங்கப்படுகின்றன.
  • உலகில் மிக அதிக செலவில் ஏலத்தில் வாங்கப்பட்ட புத்தகம் லியனார்டோ டாவின்சியின் "Codex Leicester" ஆகும். இப்புத்த்கத்தினை $30.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் 1994 ம் ஆண்டுகொள்வனவு செய்தவர் உலகின் முதல் நிலை பணக்காரரான பில் கேட்ஸ் ஆவார்.
  • உலகில் முதன்முதல் வெளியிடப்பட்ட தொலைபேசி விபரக்கொத்தானது 50 பெயர்களினை மாத்திரம் உள்ளடக்கியிருந்தது. 1878ம் ஆண்டு வெளியிடப்பட்ட 14 cm , 21 cm அளவிலான இந்த ஒரு பக்க தொலைபேசி விபரக்கொத்தானது 2008ம் ஆண்டு $170,500 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விலைப் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொண்டேன்... நன்றி...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…!

Blog Widget by LinkWithin