♣ முதலைகளின் வயிற்றில் அதிகளவான அமிலங்கள் காணப்படுகின்றதாம். இதன் காரணமாக உருக்குகள்கூட முதலையின் வயிற்றில் சமிபாடு அடையுமாம்.
♣ ஆர்ட்டிக் பிராந்தியத்தில் காணப்படும் நரிகள் பருவகாலங்களுக்கேற்ப நிறம் மாறிக்கொள்கின்றனவாம். ஆர்ட்டிக் நரிகள், குளிர்காலத்தில் வெள்ளை நிறமாகவும், கோடை காலத்தில் பிறவுண் நிறமாகவும் காணப்படுகின்றனவாம்.
♣ பறக்கின்ற ஒரே முலையூட்டி இனம் வெளவால்கள் ஆகும்.
♣ நாய்கள், மனிதர்களுடன் 14,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவருகின்றனவாம்.
♣ சீனா தேசத்தினை பூர்வீகமாகக் கொண்ட பண்டாக்கரடிகள் உலகில் அருகிவருகின்ற உயிரின வகையினைச் சேர்ந்ததாகும். புதிதாகப் பிறக்கின்றபோது பண்டாகரடிக் குட்டியானது, சுண்டெலியினை விடவும் சிறியதாகும். இதன் நிறை அண்ணளவாக 04 அவுண்ஸ் ஆகும். புதிதாகப் பிறந்த பண்டாக்கரடிக் குட்டிகள் இளஞ்சிவப்பு(Pink) நிறமாகவும், முடிகளற்றும் காணப்படும். ஒரு மாதமளவில் அவை தமது வழமையான நிறமான கறுப்பு, வெள்ளை நிறத்திற்கு வளர்ச்சியடைந்துவிடுமாம்.
♣ முழுமை வளர்ச்சியடைந்த கரடியானது, குதிரையினை விடவும் வேகமாக ஓடக்கூடிய ஆற்றல் கொண்டதாம்.
♣ ஒரு தேக்கரண்டி தேனினை உற்பத்தி செய்வதற்கு 12 தேனீக்கள் தமது வாழ்நாள் பூராகவும் தேனினை சேகரிக்க வேண்டுமாம்.
♣ எலிகள் மிக விரைவாக இனப்பெருக்கம் ஆற்றல் கொண்டவையாம். 18 மாதங்களில் ஒரு ஜோடி எலியானது 01 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்கக்கூடியவையாம்.
♣ நுளம்புகளில் 2500 இற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளனவாம்.
***
2 comments:
வியக்க வைக்கும் தகவல்கள்...
நன்றி நண்பரே...
நன்றிகள் சகோ....
Post a Comment