Tuesday, April 23, 2013

ஏப்ரல் மாதம் 23 ம் திகதி ⊷ உலக புத்தக தினம்


ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 23 ம் திகதி உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக யுனெஸ்கோ அமையத்தின் ஏற்பாட்டில் 1995 ஆம் ஆண்டு முதற்கொண்டு கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், நூல்களுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில;

≬ உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் பைபிளினை அடுத்து திருக்குறளே முன்னிலை வகிக்கின்றது. திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளில் தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்களான 247 எழுத்துக்களில் "ஒள" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தவே இல்லை.



≬ விக்டர் ஹியூகோ என்கின்ற எழுத்தாளரின் "லெஸ் மிசெரெவில்ஸ் (Les Miserables)" என்கின்ற புத்தகத்தில் காணப்படுகின்ற ஒரு வசனம் 823 சொற்களைக் கொண்டுள்ளது.


≬ ஐக்கிய அமெரிக்காவில், ஒவ்வொரு செக்கனுக்கும் தலா 57 புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றதாம்.

≬ நோஹ் வெப்ஸ்டர் தனது முதலாவது அகராதியினை எழுதுவதற்காக 36 ஆண்டுகளை செலவிட்டாராம்.

≬ கிறிஸ்தவர்களின் புனித நூல்  "பைபிள்" ஆகும். உலகில் அதிகளவில் அச்சிடப்பட்ட நூல் என்கின்ற பெருமைக்குரியது பைபிள் ஆகும். உலகளாவியரீதியில் 2.5 பில்லியன் பைபிள் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளனவாம்.

≬ ஐக்கிய அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் நூலகத்தில் 28 மில்லியன் நூல்கள் உள்ளனவாம். 


≬ ஜே.கே. ரவுலிங் என்கின்ற பெண் எழுத்தாளரின் 5 வது தொடரான "ஹரி பொட்டர் அன்ட் த ஓடர் ஒஃப் த பொனிக்ஸ்" (Harry Potter and the Order of the Phoenix) என்கின்ற நூலின் 8.5 மில்லியன் முதற்பிரதிகள் விற்பனையானதாம்.

≬ பிரேசில் நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோஸ் கார்லோஸ் ரொய்கி 1986 இற்கும் 1996ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1058  நாவல்களினை வெளியிட்டுள்ளாராம். இவரின் நாவல்கள் மேற்கத்தேய, விஞ்ஞான புனைகதைகள், மற்றும் விறுவிறுப்பு  சம்பந்தப்பட்டவையாம்.

***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...

அதே போல் 'அ' என்று முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் முதல் குறள், 'ன்' என்று கடைசி எழுத்தில் கடைசி குறளில் முடியும்...

வியக்க வைக்கும் தகவல்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

S.டினேஷ்சாந்த் said...

புதிய தகவல்களுக்கு நன்றி.ஏப்ரல் இருபத்துமூன்று என்றவுடன் தான் ஞாபகம் வருகின்றது.பிரபல நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்தநாளும் மரண நாளும் ஏப்ரல் இருபத்துமூன்று தான்.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ ...

Blog Widget by LinkWithin