உலகில் தற்சமயம்
உயிர்வாழ்கின்ற அதிகூடிய வயதினைக் கொண்டவர் என கின்னஸ் சாதனையேடுகளில்
பதிவாகியுள்ள ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஜிரொய்மன்
கிமுரா, இன்றைய தினம்(ஏப்ரல் 19, 2013) தனது 116வது பிறந்த தினத்தினைக்
கொண்டாடுகின்றார்.
19
ஏப்ரல் 1897ல் பிறந்த கிமுரா,
தனது 65வது வயது வரை
தபாற்காரராகப் பணிபுரிந்ததுடன், இவர் தனது 90 வயதுவரை பண்ணைத் தொழிலிலும் ஈடுபட்டு
வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் தனது, மூத்த
விதவைமகளின் பராமரிப்பில் மேற்கு ஜப்பானில் கியோடங்கோவில் வசிக்கின்றார் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
60,000 சனத்தொகையினைக்
கொண்ட கியோடங்கோ நகரில் 100 வயதினைக் கடந்த 95 பேர்
வாழ்கின்றரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் தற்சமயம்
உயிர்வாழ்கின்ற 20ம் நூற்றாண்டிற்கு
முன்னர் பிறந்த 12
பேரில் இவரும் ஒருவர்
என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புகைப்பழக்கமற்ற
இவர், ஓரளவு அற்ககோல் பாவனையினைக் கொண்டவராம்.
“மிதமாக
சாப்பிடுங்கள்; நீண்டகாலம் வாழலாம்” இதுவே
தனது நீண்ட ஆயுளுக்கான தாரகமந்திரம் என்கின்றார் ஜிரொய்மன் கிமுரா.
இவருக்கு 14 பிள்ளைகளும், 25 பேரப்
பிள்ளைகளும், 13 கொள்ளுப்
பிள்ளைகளும் உள்ளனராம்.
கியோடங்கோ நகரில்
வாழ்கின்ற ஜிரொய்மன் கிமுரா மட்டுமன்றி அங்கே வாழ்கின்ற 50 வயதினை பூர்த்தி
செய்தோரிடையே அவர்களின் நீண்ட ஆயுளின் இரகசியத்தினை அறிவதற்காக அவர்களின் உணவுப்
பழக்கவழக்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றர்.
உங்களுக்குத்
தெரியுமா?.....!
☞ தற்சமயம் உலகில்
வயதான பெண்மணியென கருதப்படும் 115 வயதான மிசாவோ ஒகாவோ
ஜப்பான் நாட்டிலேயே வசித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
☞ ஜிரொய்மன்
கிமுராவுக்கு முன்னர் உலகில் மிக அதிக ஆண்டுகள் வாழ்ந்தவரான ஐக்கிய
அமெரிக்காவினைச் சேர்ந்த கிறிஸ்ரின் மொர்ரென்சன்,
1998ம் ஆண்டு இறந்தபோது
அவரின் வயது 115 ஆண்டுகள் 252 நாட்கள்.
☞ 115 வயதான ஐக்கிய
அமெரிக்காவினைச் சேர்ந்த பெண்ணான டினா
மென்ஃப்ரிடினி, 2012 டிசம்பர் 17ல் இறந்ததையடுத்து
ஜிரொய்மன் கிமுரா கின்னஸ் சாதனையேடுகளில் உலகில் வயதான மனிதரென பதிவாகினார்.
***
3 comments:
100 வயதினைக் கடந்த 95 பேர் !!!
வியக்க வைக்கும் தகவல்கள்...
தொடர வாழ்த்துக்கள் நண்பா...
japan makkalin vazhkkai murai viyakkavaikkirathu..veru yetho oru iyarkai karanamum irukka vendum....
நன்றிகள் சகோ....
Post a Comment