Monday, April 15, 2013

மோனாலிசா ஓவிய திருட்டுக்காக கைதுசெய்யப்பட்ட பிக்காசோ….!


ஏப்ரல் மாதம் 15ம் திகதி உலக கலை தினமாக உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 2011ம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் சர்வதேச கலை ஒன்றியமானது, பிரபல ஓவியக் கலைஞரான லியனார்டோ டாவின்சியின் பிறந்த தினமாகிய ஏப்ரல் மாதம் 15ம் திகதியினை சர்வதேச கலை தினமாக பிரகடனம் செய்தது.

# ஏப்ரல் 15, 2013 லியனார்டோ டாவின்சியின் 561வது ஜனன தினம்

அந்த வகையில் பிரபல ஓவியக்கலைஞர்கள் மற்றும் ஓவியங்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில...

1911ம் ஆண்டு, லியனார்டோ டாவின்சியினால் வரையப்பட்ட உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியமானது அது பாதுகாத்து வைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் லொவ்ரி நூதனசாலையிலிருந்து திருடர்களால் களவாடப்பட்டது. களவாடப்பட்ட மோனாலிசா ஓவியத்தினை மீட்க மேற்கொள்ளப்பட்ட 2 வருட காலப்பகுதியில் மோனாலிசா அசல் ஓவியமென விற்பனை செய்யப்பட்ட  6 இற்கும் மேற்பட்ட மீளுருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



மோனாலிசா ஓவியம் களவாடப்பட்டமையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரபல ஓவியர் பவ்லோ பிக்காசோ மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இருவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர். 



இத்தாலி நாட்டினைச் சேர்ந்த பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சி அவர்கள் இடது கை சித்திரக்கலைஞர் ஆவார். இவர் தனது தனிப்பட்ட குறிப்புக்களை எழுதுகின்ற போது தாளின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் நோக்கியே எழுதுவாராம். இந்த நுட்பமானது "கண்ணாடி எழுதுதல்" ஆகும். அதாவது கண்ணாடியின் உதவியுடனே அவரின் குறிப்புப் புத்தகங்களை வாசிக்க முடியுமாம்.



பிரபல டச்சு ஓவியரான வின்சென்ட் வான் கோ அவர்கள் தனது 10 வருட கலை வாழ்வில் 900 வர்ண ஓவியங்களினையும், 1100 வரைதல்களினையும் மேற்கொண்டிருந்தார். வின்சென்ட் வான் கோவின் சித்திரங்களில் "த ரெட் வின்யார்ட்" என்கின்ற வர்ண ஓவியத்தினை மாத்திரமே அவரால் விற்பனை செய்ய முடிந்தது. ஆனால் அவரின் இறப்பின் பின்னரே அவரின் புகழினை உலகத்தினால் உணரமுடிந்தது. 



வின்சென்ட் வான் கோ அவர்கள் தொழுநோய் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். மன அழுத்த உச்ச நிலையில் அவர் தனது காதின் ஒரு பகுதியினை வெட்டிக் கொண்டார். அவரின் மன அழுத்தம் அவரை தற்கொலை வரை இட்டுச் சென்றது, அவர் தன்னை தானோ மார்பில் சுட்டு காயப்படுத்திக் கொண்டார், இரண்டு நாட்களின் பின் மரணத்தினை தழுவிய வின்சென்ட் வான் கோ இறக்கும் போது வயது 37 ஆண்டுகளாகும்.

பிரபல இடதுகை ஓவியக்கலைஞரான மைக்கலாஞ்சலோ அவர்கள் தான் வாழ்நாள் காலத்திலேயே தன் சுயசரிதையினை வெளியிட்டவர் ஆவார்.



இத்தாலியின் ரோம் நகரிலுள்ள சிஸ்டன் தேவாலயத்தின் உட்கூரையினை அலங்கரிக்கும் கலைநயமிக்க ஓவியங்களை வரைய இவருக்கு 04 ஆண்டுகள் தேவைப்பட்டது. "இறுதி இராப்போசனம்" இவரின் பிரபல ஓவியங்களிலொன்றாகும்.


இலக்கியத்துக்கான நோபல் பரிசினை வென்ற முதல் ஆசியக் கண்டத்தினைச் சேர்ந்த இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் மிகச்சிறந்த ஓவியரும் ஆவார்.



***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல தகவல்களுக்கு நன்றி நண்பா...

தொடர வாழ்த்துக்கள்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ ....

கார்த்திக் சரவணன் said...

வணக்கம் நண்பரே... தங்களது இந்தப்பதிவு "நண்பர்கள்" ராஜ் என்பவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்... வாழ்த்துக்கள், நன்றி...


http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_23.html

Blog Widget by LinkWithin