மே 03, 2013 அன்று இந்தியச்
சினிமா தனது நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடியது. அந்தவகையில் இந்தியச் சினிமாவுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான
தகவல்கள் சில உங்களுக்காக….!
ↂ மே 03, 1913 அன்று
இந்திய சினிமாவின் முதல் முழு நீளத் திரைப்படமான "ராஜா ஹரிச்சந்திரா" வெளியாகியது.
இந்திய திரைப்படத் துறையின் தந்தையென அழைக்கப்படும் தாதாசாஹேப் பால்கேயின் இயக்கத்தில்
வெளியாகிய இத்திரைப்படமானது பேசாப் படமென்பது குறிப்பிடத்தக்கது.
ↂ இந்தியச் சினிமாவின் முதல் பேசும் திரைப்படம்
"ஆலம் ஆரா" ஆகும், இத்திரைப்படம் அர்டேஷிரா மார்வன் இராணி அவர்களின் இயக்கத்தில்
மார்ச் 14,
1931 இல்
வெளியாகியது.
ↂ இந்தியச் சினிமாவின் முதல் வர்ணத் திரைப்படம்
"கிசன் கன்யா" ஆகும், இத்திரைப்படம் மோடி கிட்வானி அவர்களின் இயக்கத்தில்
1937
இல்
வெளியாகியது.
ↂ இந்தியச் சினிமாவில் அதிக பாடல்களைக்
கொண்ட திரைப்படம் "இந்திர சபா" ஆகும், 71 பாடல்களைக்
கொண்ட இத்திரைப்படம் ஜே. மதன் அவர்களின் இயக்கத்தில் 1932
இல்
வெளியாகியது.
ↂ இந்தியச் சினிமாவின் மிக நீளமான திரைப்படம்
"எல்ஓசி : கார்கில்" ஆகும், இத்திரைப்படம் 04 மணித்தியாலங்கள்
25
நிமிடங்கள்
நீளமானதாம்.
ↂ இந்தியச் சினிமாவின் அதிக நாட்கள் ஓடிய
திரைப்படம் "தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே" ஆகும், அக்டோபர் 20,
1955
வெளியாகிய இத்திரைப்படம் 700 வாரங்களைக்
கடந்து ஓடியதாம்.
ↂ இந்தியச் சினிமாவில், முதன்முதலில்
(1920)
சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர்
ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா
சுவரொட்டிகளை வெளியிட்டார்.
ↂ இந்தியச் சினிமாவில், முதன்முதலில்
(1920)
சினிமா சுவரொட்டிகள் மூலம் தனது திரைப்படத்தினை விளம்பரப்படுத்தியவர் பாவுராவ் பெயிண்டர்
ஆவார். இவர் "வத்சலா ஹரன்" என்கின்ற தன்னுடைய திரைப்படத்திற்காகவே சினிமா
சுவரொட்டிகளை வெளியிட்டார்.
ↂ இந்தியச் சினிமா வரலாற்றில், சர்வதேச
திரைப்பட விழாவில் (வெனிஸ்) திரையிடப்பட்ட (1937)
முதல் திரைப்படம் "சண்ட் துகரம்" ஆகும்.
***
No comments:
Post a Comment