ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 23 ம் திகதி உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக யுனெஸ்கோ அமையத்தின் ஏற்பாட்டில் 1995 ஆம் ஆண்டு முதற்கொண்டு கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில், நூல்களுடன் தொடர்புடைய சுவாரஷ்சியமான தகவல்கள் சில;
≬ உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் பைபிளினை அடுத்து திருக்குறளே முன்னிலை வகிக்கின்றது. திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறளில் தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்களான 247 எழுத்துக்களில் "ஒள" என்கின்ற எழுத்தினை பயன்படுத்தவே இல்லை.
≬ விக்டர் ஹியூகோ என்கின்ற எழுத்தாளரின் "லெஸ் மிசெரெவில்ஸ் (Les Miserables)" என்கின்ற புத்தகத்தில் காணப்படுகின்ற ஒரு வசனம் 823 சொற்களைக் கொண்டுள்ளது.
≬ ஐக்கிய அமெரிக்காவில், ஒவ்வொரு செக்கனுக்கும் தலா 57 புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றதாம்.
≬ நோஹ் வெப்ஸ்டர் தனது முதலாவது அகராதியினை எழுதுவதற்காக 36 ஆண்டுகளை செலவிட்டாராம்.
≬ கிறிஸ்தவர்களின் புனித நூல் "பைபிள்" ஆகும். உலகில் அதிகளவில் அச்சிடப்பட்ட நூல் என்கின்ற பெருமைக்குரியது பைபிள் ஆகும். உலகளாவியரீதியில் 2.5 பில்லியன் பைபிள் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளனவாம்.
≬ ஐக்கிய அமெரிக்காவின், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள காங்கிரஸ் நூலகத்தில் 28 மில்லியன் நூல்கள் உள்ளனவாம்.
≬ ஜே.கே. ரவுலிங் என்கின்ற பெண் எழுத்தாளரின் 5 வது தொடரான "ஹரி பொட்டர் அன்ட் த ஓடர் ஒஃப் த பொனிக்ஸ்" (Harry Potter and the Order of the Phoenix) என்கின்ற நூலின் 8.5 மில்லியன் முதற்பிரதிகள் விற்பனையானதாம்.
≬ பிரேசில் நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளரான ஜோஸ் கார்லோஸ் ரொய்கி 1986 இற்கும் 1996ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 1058 நாவல்களினை வெளியிட்டுள்ளாராம். இவரின் நாவல்கள் மேற்கத்தேய, விஞ்ஞான புனைகதைகள், மற்றும் விறுவிறுப்பு சம்பந்தப்பட்டவையாம்.
***