Sunday, July 22, 2012
Saturday, July 21, 2012
"டைனோசர்" என்ற சொல் தோற்றம் பெற்றது எவ்வாறு தெரியுமா?.....
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் ஒன்றாக டைனோசரினை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
பல்வேறுபட்ட
காலகட்டங்களில் பல்வேறுவிதமான "டைனோசர்" இனங்கள் வாழ்ந்ததாகவும் அவற்றில் சில இனங்கள்
மிகப்பெரியனவையாகவும், சில இனங்கள் மிகச்சிறியனவையாகவும், சில இனங்கள் இரண்டு
கால்களில் நடப்பவையாகவும், சில இனங்கள் நான்கு கால்களில் நடப்பவையாகவும், சில
இனங்கள் மிக வேகமாக செல்பவையாகவும், சில இனங்கள் மிக மெதுவாக அசைந்தசைந்து
செல்பவையாகவும், சில இனங்கள் ஊனுண்ணியாகவும், சில இனங்கள் தாவரவுண்ணியாகவும், சில
இனங்கள் கவசம் போன்ற உடம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் அடர்ந்த, சமதளமற்ற
உடம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் கொம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள்
பறக்கும் ஆற்றலைக் கொண்டவையாகவும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர்.
இந்த உயிரினங்கள் பூமியில்
ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால் அழிவடைந்ததாகவும், பூமியை தாக்கிய பிரமாண்டமான
விண்கற்களினால் அழிவடைந்ததாகவும், இயற்கையில் ஏற்பட்ட மாறுதல்களால்
அழிவடைந்ததாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
சேர் ரிச்சர்ட் ஓவன்
"டைனோசர்(Dinosaur)" என்கின்ற சொல்லானது "டைனோஸ்(Deinos)", மற்றும் "சரஸ்(Sauros)" ஆகிய இரண்டு
கிரேக்கமொழி சொற்களிலிருந்தும் தோற்றம்பெற்றதாகும். "டைனோஸ்(Deinos)" என்பதற்கு பயங்கரமானது,
சக்திவாய்ந்தது, ஆச்சரியமானது என்கின்ற அர்த்தங்களாகும்.
"சரஸ்(Sauros)" என்பதற்கு பல்லி என்றும் அர்த்தமாகும்.
"டைனோஸ்(Deinos)" மற்றும் "சரஸ்(Sauros)" ஆகிய இரண்டு
சொற்களையும் கோர்த்து 1841ம் ஆண்டு "டைனோசரியா(Dinosauria)" என்கின்ற
பதத்தினை உயிரியல் விஞ்ஞானி, புதைபடிவ ஆய்வாளராகிய "சேர் ரிச்சர்ட் ஓவன்" உருவாக்கிய பின்னரே இந்தப் பதமானது பிரபல்யம்
அடைந்தது.
அறிந்துகொள்வோம்....
Ø முதன்முதலில்
டைனோசர் முட்டை எச்சங்கள் 1869ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
Ø டைனோசர்கள் பற்றிக்
குறிப்பிடுகின்ற "ஜூராசிக் பார்க்(Jurassic Park)" என்கின்ற
திரைப்படத்தினை 1993ம் ஆண்டு அமெரிக்க
நாட்டைச் சேர்ந்த இயக்குனர் ஸ்ரிவன் ஸ்பில்பேர்க் உருவாக்கினார். ஜூராசிக் பார்க்
திரைப்படமானது 03 ஓஸ்கார் விருதுகளை 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
***
Sunday, July 15, 2012
ஒலிம்பிக் மரதன் ஓட்டத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்திய நிகழ்வு.....
ஒலிம்பிக்
போட்டிகளில் முக்கியத்துவமான விளையாட்டாக மதிக்கப்படுகின்ற நிகழ்வாக "மரதன்" ஓட்டப்போட்டிகள்
விளங்குகின்றன. அந்தவகையில் 2004ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமான
ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பரபரப்பினை ஏற்படுத்திய நிகழ்வொன்று
இடம்பெற்றது.
மதுபோதையில்வந்த சமூகவிரோதியால்
தடுத்துநிறுத்தப்படும்
வன்டெர்லெய் டீ லிமா
ஆம்....
ஒலிம்பிக் போட்டிகளில் நிறைவு அம்சமாக மரதன் ஓட்டப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன.
வழமைபோன்று 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் நிகழ்விலும் மரதன் ஓட்டப்போட்டி நிறைவு
அம்சமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போட்டியின் நிறைவுத்தூரத்திற்கு 4 மைல்கள்
மட்டுமே எஞ்சியிருந்தபோது முதலாவதாக ஓடிவந்துகொண்டிருந்த பிரேசில் நாட்டின் வன்டெர்லெய்
டீ லிமா சற்றும் எதிர்பாராதவிதமாக, அயர்லாந்து நாட்டினைச் சேர்ந்த முன்னாள்
பாதிரியார் கொர்னீலியுஸ் ஹொரன் அவர்களினால் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்படுகின்றார்.
இதனால் நிலைகுலைந்த வன்டெர்லெய் டீ லிமாவினை பின்தள்ளி இத்தாலி நாட்டினைச் சேர்ந்த
ஸ்ரிப்னோ பல்டினி(2hr 10:54Secs), தங்கப்பதக்கத்தினை தட்டிச்செல்ல, வெள்ளிப்பதக்கத்தினை
ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த மெவ்ரஹ்ரொம் கெப்லிசிக்ஹி(2hr 11:29Secs) தட்டிச்செல்ல வன்டெர்லெய் டீ லிமா(2hr 12:11Secs) வெண்கலப்பதக்கத்தினையே பெறமுடிந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட மரதன்
ஓட்டப்போட்டியில் 20km,25km,30km,35km ஆகிய தூரங்களில்
வன்டெர்லெய் டீ லிமாவே முன்னிலையில் ஓடிக்கொண்டிருந்தமை
நினைவில்கொள்ளத்தக்கதாகும்.
ஆனாலும் இவரின்
உயரிய தன்மைக்கும், நேர்மைத் தன்மைக்கும் மதிப்பளித்து சர்வதேச ஒலிம்பிக்
சம்மேளனத்தின் உயரிய விருதாகிய "பியர் டீ கூபடின்" பதக்கத்தினை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வழங்கி
கெளரவமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
***
Saturday, July 7, 2012
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கெதிராக மிக வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்தவர்.....
இலங்கை,
பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட்
போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார புதியதொரு சாதனையினை தன்வசப்படுத்திக்
கொண்டார். ஆம்...... டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கெதிராக குறைந்த
இன்னிங்ஸ்களில் மிக வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குமார் சங்கக்கார,
பாகிஸ்தான் அணிக்கெதிராக 2000 ஓட்டங்களைக் கடக்க 26 இன்னிங்ஸ்களினை
எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் இந்தச் சாதனை இந்தியாவின்
சுனில் கவாஸ்கர் மற்றும் மே.தீவுகளின் பிரைன் லாரா வசமிருந்தமை நினைவில்
கொள்ளத்தக்கதாகும்.
டெஸ்ட்
கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கெதிராக மிக வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்தவர்கள்
வருமாறு.....
Ø குமார்
சங்கக்கார(இலங்கை) – 26 இன்னிங்ஸ்கள் – பாகிஸ்தான்
அணிக்கெதிராக
Ø சுனில்
கவாஸ்கர்(இந்தியா) – 28 இன்னிங்ஸ்கள் – மே.தீவுகள்
அணிக்கெதிராக
Ø பிரைன்
லாரா(மே.தீவுகள்) – 28 இன்னிங்ஸ்கள் – இங்கிலாந்து
அணிக்கெதிராக
Ø டொன்
பிரட்மன்(அவுஸ்திரேலியா) – 29 இன்னிங்ஸ்கள் – இங்கிலாந்து
அணிக்கெதிராக
Ø விவ்வியன்
ரிச்சர்ட்ஸ்(மே.தீவுகள்) – 30 இன்னிங்ஸ்கள் – இங்கிலாந்து
அணிக்கெதிராக
Ø ஸ்ட்ச்லிபீ(இங்கிலாந்து)
- 31 இன்னிங்ஸ்கள் – அவுஸ்திரேலியா
அணிக்கெதிராக
Ø லென்
ஹூட்டன்(இங்கிலாந்து) – 34 இன்னிங்ஸ்கள் – அவுஸ்திரேலியா
அணிக்கெதிராக
Ø ஹரி
சோபர்ஸ்(மே.தீவுகள்) – 34 இன்னிங்ஸ்கள் – இங்கிலாந்து
அணிக்கெதிராக
Ø ஜாவிட்
மியண்டாட்(பாகிஸ்தான்) - 35 இன்னிங்ஸ்கள் – இந்தியா
அணிக்கெதிராக
***
Labels:
இலங்கை,
கிரிக்கெட்,
சாதனைகள்,
டெஸ்ட்
Tuesday, July 3, 2012
ஒலிம்பிக் ஹொக்கியில் சாதனை படைத்த இந்திய அணி….
ஹொக்கி என்றால்
அதன் மறுபெயர் இந்தியாதான் என்றொரு காலமிருந்தது. ஆம்…. இந்தியா இதுவரை
ஆடவர் ஹொக்கியில் 8 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள்
உள்ளடங்களாக மொத்தமாக 11 பதக்கங்களினை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒலிம்பிக்
ஹொக்கியில் தொடர்ச்சியாக அதிக தடவை(06) தங்கப்பதக்கம் வென்ற நாடு
இந்தியாதான்.
ஒலிம்பிக்கில்
இந்திய ஹொக்கி அணி தங்கப்பதக்கம் வென்ற ஆண்டுகள்
Ø 1928 – ஆம்ஸ்ரடாம்
Ø 1932 – லொஸ் ஏஞ்சல்
Ø 1936 – பேர்லின்
Ø 1948 – லண்டன்
Ø 1952 – ஹெல்சிங்கி
Ø 1956 – மெல்பேர்ன்
Ø 1964 – டோக்கியோ
Ø 1980 - மொஸ்கோ
ஒலிம்பிக்கில்
இந்திய ஹொக்கி அணி வெள்ளிப்பதக்கம் வென்ற ஆண்டு
Ø 1960 – ரோம் (பாகிஸ்தான்
தங்கப்பதக்கம்)
ஒலிம்பிக்கில்
இந்திய ஹொக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்ற ஆண்டுகள்
Ø 1968 – மெக்சிக்கோ
(பாகிஸ்தான் தங்கப்பதக்கம்)
Ø 1972 – மூனிச் (மேற்கு
ஜேர்மனி தங்கப்பதக்கம்)
அறிந்து
கொள்வோம்......
Ø ஒலிம்பிக்
விளையாட்டில் ஆடவருக்கான ஹொக்கி முதன்முதலில் அறிமுகமாகியது 1908ம் ஆண்டு லண்டனில்
நடைபெற்ற போட்டியிலாகும். இதன் இறுதிப்போட்டியில் மோதிய இங்கிலாந்து அணி,
அயர்லாந்து அணியினை 08 – 01 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி
ஹொக்கியில் முதல் தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ø 1912, 1924ம்
ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக்போட்டிகளில் ஹொக்கி விளையாட்டானது
சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இந்தியா, 32 ஆண்டுகளின்பின்
ஒலிம்பிக் ஹொக்கியில் சாதனை
படைக்குமா?.....
******************************************************
"கிரிக்கெட்டில் 199".....!!!
இதுவரை
நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில், டெஸ்ட் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழக்காமல் 199 ஓட்டங்களை பெற்ற சோகமான
சாதனைக்குரியவராக தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் அன்டி பிளவர்[சிம்பாப்வே]
திகழ்ந்தார்.
இந்தப் பட்டியலில்
இறுதியாக இணைந்துகொண்டவர் இலங்கை அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் குமார்
சங்கக்கார ஆவார். இலங்கை மண்ணில் நடைபெறுகின்ற இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான
டெஸ்ட் தொடரின் 1வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸ்சில் குமார் சங்கக்கார
199 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனுடன்
தொடர்புடைய முந்தைய என் பதிவு.........
***
Subscribe to:
Posts (Atom)